இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

55.வள்ளுவம் காட்டும் உவமை நெறிகள்


முனைவர் செ. செந்தில்குமார்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
எஸ். என். எம். வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்.

முன்னுரை

பண்டைய தமிழ் மக்கள் இயற்கைச் சூழலில் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருந்த இயற்கைப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டு சீரிய சிந்தனைகளைச் சிறப்பாகக் கூறுவதன் வாயிலாக அவர்களைச் செந்நெறியில் நடத்த முடியும் என்று இத்தமிழ் ஞானி நம்பினார். பறவை, விலங்கு, ஊர்வன, மரம், பயிர், செடி, கொடி, மலர், காய், கனி முதலிய இயற்கைப் படைப்புகளைக் கொண்டு எண்ண இனிக்கும் விழுமிய அறங்களைக் கவிச்சுவை பெருகப் பகர்ந்துள்ளார். நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் ஐம்பூதங்களையும், திங்கள், ஞாயிறு, மலை, கடல் முதலிய இயற்கைகளையும் பின்புலமாக அமைத்து விளக்கக் கற்பனைகள் பலவற்றைப் படைத்துச் சீரிய சிந்தனைகள் பலவற்றை வழங்கியுள்ளார். இயற்கைச் சார்புடைய உவமைகள் பலவற்றையும் உளவியல் முறையில் உணர்ந்து மக்களை நல்வழிப்படுத்துவதற்குச் சிறந்த வாயிலாக மேற்கொண்டுள்ளார். எனவே திருக்குறள் முழுவதிலும் திருவள்ளுவரின் பட்டறிவும் பரந்த இயற்கை அறிவும் பளிச்சிடப் பார்க்கலாம். அறக்கருத்துக்களைக் கூறுதற்கு முற்பட்ட முதற்பாவலர். இத்தகைய அழகியல், முருகியல், அணிநலம், உவமைகளை வழங்குவதன் வாயிலாக, நாம் படிப்பது சட்ட நூலன்று, சுவைதரும் இலக்கிய படைப்பு என்ற உணர்வினைப் பயில்வார் உள்ளத்தில் பதியச் செய்துள்ளார்.

பறவை உவமைகள்

திருவள்ளுவரின் பார்வையில் படும் பறவைகளில் காக்கை, ஆந்தை, கொக்கு, மயில் முதலியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்பது ஒரு பழைய நம்பிக்கை. குறுந்தொகையில் காக்கை கரைவதைக் குறித்துப் பாடிய பெண்பாற்புலவர் ஒருவர், காக்கைப்பாடினியார் என்று பெயர் பெற்றிருத்தல் இங்குச் சுட்டத்தக்கது. தனக்குக் கிடைத்த இரையினை மறைக்காமல் இனத்தைக் கரைந்து அழைத்துக் கூடி உடன் உண்ணும் உயர் பண்பாகும்.

”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீ ராக்கவே உள”

என்பது அவர் தம் வாய்மொழி. இங்ஙனம் நாள் தோறும் கண் முன்பு காணும் காட்சிகளை எடுத்துக்காட்டி அறம் உரைக்கும் பொழுது அதனை மக்கள் எளிதில் உணர்ந்து பின்பற்றுதல் இயலும். பகல் காலத்தில் ஆந்தைக்குக் கண் விளங்காமையின் அதனைக் காக்கை எளிதாகத் தாக்கி அழித்துவிடும், இரவுக் காலத்தில் காக்கைக்குக் கண்ணொளி நீங்குதலின் விழித்திருக்கும் ஆந்தை அதனை எளிதில் வெல்லும். எனவே செயல் மேற்கொள்ளும் நாட்டுத் தலைவர்கள் தமக்குச் சாதகம் அளிக்கும் காலத்தைக் கருத்தில் கொண்டு செயற்படுதல் வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.

”பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”

பொருத்தம் மிக்க காலச் செவ்வியை அறிதற்குக் கொக்கின் செயலையும் கூர்ந்து நோக்கி, வேந்தர்க்கும் மாந்தர்க்கும் நல்லுரை வழங்கியுள்ளார். கொக்கினைப் போலப் பொறுத்திருந்து காலச்சூழலைப் பார்த்துக் கடமையினை ஒருவர் முடித்தல் வேண்டும் என்று முதற்பாவலர் அறிவுறுத்துகின்றார்.

”கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து”

அதாவது, கூம்பும் பருவம் என்பது பொறுத்திருக்கும் காலம். சீர்த்த இடம் என்பது வாய்ப்பு வரும் பொழுது இரண்டு நிலைகளிலும் ஒருவர் கொக்கினைப் போல் விழிப்புடன் செயற்படுதல் வேண்டும் என்பது இதன் கருத்து. இத்திருக்குறளினை அடியொற்றி,

“ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு”

என்று ஔவையார் பாடி இருத்தல் அறிந்து மகிழத்தக்கது. நிலையாமையினை விளக்குவதற்குப் பறவை உவமை பாங்குறப் பயன்படுகிறது.

”குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு”

இவ்வாறு திருக்குறளில் பறவைகள் பற்றிய உவமைகள் அமைகின்றன.



விலங்கு உவமைகள்

வீட்டிலும் காட்டிலும் வளரும் காளை, களிறு, புலி, நரி, தகர், முயல் முதலிய விலங்குகளின் இயல்புகளைக் கூர்ந்து நோக்கித் தேர்ந்து தெளிந்தவர் முப்பால் ஆசிரியர்.

இடுக்கண் வரும் போது அஞ்சாது எதிர்கொண்டு வெற்றி பெறுதல் வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். இதனை;

”மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து”

என்று, விடா முயற்சியும் கடும் உழைப்பும் கொண்டவர்களின் முன்பு வரும் துன்பம் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று துன்பப்படும் என்பது கருத்து.

திருவள்ளுவர் வேட்டுவனின் செயலை வைத்து விளக்கியுள்ளார். காட்டில் வேட்டைக்குச் சென்றவன் இலக்கு தவறாமல்அம்பினை விடுத்து முயலினை வீழ்த்துதலைத் திருவள்ளுவர் ஒரு பெரும் வெற்றியாக மதிக்கவில்லை. மாறாக யானையினைக் குறிவைத்து அதனை வீழ்த்த முடியாமல் தப்பிச் சென்ற வேலினை ஏந்துதல் பெருமிதம் மிக்க செயல் என்று எண்ணினார்.

”கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது”

இதன் மறுவடிவமாக,

”நரிமா உளம்கிழித்த அம்பினில் தீதோ
அரிமாப் பிழைப்பெய்த கோல்”

என வரும் நாலடியார் பாடப்பகுதி அமைந்துள்ளது.

எண்ணம் திண்ணமாக இருப்பின் நாடியப் பொருள் கைக்கூடும் என்பது ஒரு நம்பிக்கை. இக்கருத்தினை வள்ளுவர்,

”எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ராகப் பெறின்”

”உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்”

என வரும் குறள்களில் தெளிவுறுத்தியுள்ளார். இவ்வுண்மையினை வலியுறுத்தும் வகையில் கோப்பெருஞ்சோழன்,

”யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”

என்று புறநாநூற்றில் பாடியிருத்தல் காணத்தக்கது.

எதிரியைக் காட்டிலும் ஒருவன் வல்லமையும் கருவிச் சிறப்பும் பெற்றிருப்பினும் ஊக்கமிலன் எனின், ஊக்கமும் எழுச்சியும் மிக்க பகைவனைக் காணும் பொழுது மெய்விதிர்ப்பான் என்று பிறிது மொழிதல் என்னும் அணி தோன்ற வள்ளுவர் பின்வரும் குறளைப் பாடியுள்ளார்.

”பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்”

மற்றும் ஒரு குறளில் பாகனுக்கு அடங்காதனவும் வேலேந்திய வீரர்களைக் குத்திக் கோத்தக் கோடுகளை உடையனவுமாகிய களிறுகள் சேற்று நிலத்தில் சிக்கிக் கொண்டு தடுமாறும் வேளையும் உருவத்தால் சிறியதும் உரத்தால் குறைந்தும் ஆகிய நரியே கொன்றுவிடும் என்கிறார். ஒருவன் தன் நிலையிலிருந்தும் தாழாமையும், ஏதாவது ஒரு காரணத்தால் தாழ்வு ஏற்படின் உயிர் வாழாமையும் மானம் எனப் போற்றப்படும். இப்பண்பினை மக்களுக்குக் கற்பிக்க வள்ளுவர் கவரிமானை உவமையாக எடுத்துக்காட்டுகிறார். தன் மயிர்த் திரளில் ஒரு மயிர் நீங்கினாலும் கவரிமான் உயிர் வாழாது. அது போல நல்ல பரம்பரையில் வந்தவர் உயிரைக் கொடுத்தாவது மானத்தைக் காப்பாற்றுவார்கள் என்று பாடுகிறார்.

”மயிர்நீப்பின் வாழாக் கவரிகா அன்னர்
உயிர்நீப்பர் மானம் வரின்”

இவ்வாறு விலங்குகளின் இயல்பினை நன்கறிந்து மாந்தர்க்கு அறிவுரை வழங்கும் பாங்கில் திருவள்ளுவர் அவற்றை உவமைகளாக எடுத்துக் கூறியுள்ளார்.



ஊர்வன உவமைகள்

மனிதர்க்கு அடக்கமுடைமை நனி சிறந்தது. உள்ளம், மொழி, உடல் ஆகியவற்றின்செயற்பாடுகள் உலகியல் ஓட்டத்திற்கு ஒத்து அறநெறி சார்ந்தும் அமைதல் வேண்டும். ஆமை தன் தலையினையும் நான்கு கால்களையும் ஆக ஐந்து உறுப்புகளையும் இடர் புகுத்தாமல் உள்ளிழுத்துக் கொள்ளுதல் போல் மனிதனும் ஐம்பொறிகளையும் தீமைக்கு இடம் கொடுக்காமல் உள்ளிழுத்து அடங்கியிருத்தல் நலம்தரும் என்று வள்ளுவர் புகட்டியுள்ளார்.

”ஒருமையுள் ஆமைப்போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”

தில்லையில் வாழ்ந்தவர் எனக் கருதப்பெறும் பதஞ்சலி முனிவர் இத்தகு அடக்கத்தினைப் பிரத்தியாகாரம் என்ற யோகக் கலைச் சொல்லினால் சுட்டியுள்ளார். எலிக்கூட்டம் ஒன்று திரண்டு கடல் போல் ஆரவாரம் செய்யினும் நாகத்திற்குச் சிறு துன்பமும் விளைவதில்லை. எனின் நாகம் மூச்சுவிட்ட அந்த அளவிலேயே அதன் நச்சுக்காற்று எலிகளை அழித்துவிடும் என்கிறார்.

”ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்”

எலி, நாகம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு வேறொருக் கருத்தினை குறிப்பாகக் கூறியுள்ளார். எலி போன்ற பகைவர் கூட்டம் திரண்டு நின்று எவ்வளவு முழக்கம் போட்டாலும் பெரு வீரனின் தனியாண்மைக்கு முன்னர் அவர்கள் அழிந்து விடுவர் என்பது கருத்து.

”காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு
கல்லின் முன்எதிர் நிற்குமோ”

எனப்பாடுதல் இயைபு கருதி இங்கு எண்ணத் தக்கது.

தாவர உவமைகள்

திருவள்ளுவர் தாவரவியல் அறிந்தவர். எனவே மரம், மலர், காய், கனி முதலியற்றையும் அடிப்படையாகக் கொண்டு உவமையணி நலம் சிறக்கப் போதனை புரிந்துள்ளார். பல்வகைத் தன்மைகளை உடைய மரங்களை எண்ணிப் பார்த்து ஏற்புழி உவமை கூறி நீதிபோதனை நிகழ்த்தியுள்ளார்.

”அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கன்
வற்றல் மரம்தளிர்த் தற்று”

வற்றல் மரம் தளிர்ப்பதும் இல்லை. அது போல அன்பில்லாதவன் வாழ்வதும் அரிது. நடுவில் நிழல் தரும் பெருமரங்கள் சுவை மிக்கக் கனிகளை உரிய பருவ காலத்தில் உதவுதல் போல் ஒப்புரவுடையவர்கள் செல்வம் வேறுபாடின்றி எல்லோருக்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்கிறார்.

”பயன்மரம் உளர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்”

நயன் என்ற சொல்லிற்கு நீதி எனப் பொருள் கூறினார் பரிமேலழகர்.

உலக நீதிகள் பலவற்றுள்ளும் உலக நடையினை அறிந்து உதவும் ஒப்புறவு என்னும் அறம் சிறந்தமையின் அதனையே நயன் என்று இக்குறளில் வள்ளுவர் கூறுகிறார்.

மருந்து மரம் தன் வேர், பட்டை, தளிர், இலை, காய், கனி ஆகிய அனைத்தாலும் பிறருக்கு உதவும், குணம் வாய்ந்த பெருந்தகையோனின் செல்வமும் யாவர்க்கும் பயன் தரும் என்கிறார்.

”மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்”

எனவே ஈகையாளர் பிறர் பொருட்டு மருந்து மரத்தைப் போல் தன் உடமைகளை முற்றாக இழக்கவும் பின்வாங்க மாட்டார் என்பது புலனாகும். நீர் பூக்களின் தண்டுகள் தாம் நிற்கும் நீரின் ஆழத்திற்குத் தக்க நீண்டிருக்கும். அதுபோல மாந்தரின் ஊக்கத்தின் மிகுதிக்கேற்ப உயர்வு பெறுவர் என்கிறார்.

”வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு”

இப்பாடலில் மலர் என்ற சொல் ஆகுபெயரினால் அதன் தண்டினைக் குறித்தது. மலர்களில் பலவகை உண்டு. அவற்றுள் கொத்துக் கொத்தாகப் பூத்து வண்ணத்தாலும் வடிவத்தாலும் பொலிவுற்று விளங்கினும், அவை நறுமணம் வாய்க்காவிடின் அவற்றை அக்காலத்து பெண்டிர் அணிவதில்லை. அது போல தாம் கற்ற கல்வியின் பயனாகிய அறிவைப் பலர்க்கும் பயன்படும் பாங்கில் எடுத்துக் கூறுவதற்கு இயலாதவரை யாரும் மதிக்க மாட்டார்கள்.

”இணர் ஊழ்த்து நாறா மலரனையர் கற்ற
உணர விரித்துரையா தார்”

வண்ணமலரைப் போல் தோற்றப் பொலிவுடன் இருப்பினும் உரையாற்றும் திறம் இல்லாத கல்வியாளரால் யாருக்கும் பயனில்லை என்பது கருத்து.



காயும் கனியும்

”இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்கவற்ந் தற்று”

இனிய சொல் கனி போன்றது. இன்னாத சொல் காய் போன்றது. இக்குறள் முற்பட்டு வழங்கி வரும் பழமொழி ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு பாடப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதற்கு அப்பரடிகள் இக்கருத்தினைத் தன் பழமொழி பதிகத்தில் பயின்றிருத்தலின் உய்த்துணரலாம். கனி போன்ற பக்குவப்பட்ட சைவநெறி தம் பிறவிச் சமயமாக இருப்பவும், காய் போன்ற பக்குவப்படாத சமணநெறியைச் சேர நேரிட்டமைக்குப் பெரிதும் வருந்திய அப்பர் பெருமான்

”கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆருரைக்
கையினால் தொழாதொழிந்த கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனே”

என்று பாடியிருந்தால் அவர்தம் திருக்குறள் பயிற்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

முடிவுரை

திருவள்ளுவர் இவ்வாறு எழுதியதால் பொருள்களின் இயல்பை ஆராய்ந்து அறிந்து மாந்தர்க்கு உறுதி பயக்கும் அறங்களைக் கூறும் பாங்கில் அவற்றை விழுமிய உவமைகளாகப் பயன்படுத்தித் திருக்குறளைச் சிறந்த இலக்கியமாகப் படைத்துள்ளார் என்ற உண்மை தெளிவாகப் புலனாகிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p55.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License