இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

56.பட்டினத்தாரின் திருவேகம்ப மாலையில் நிலையாமைச் சிந்தனைகள்


முனைவர் ப. சு. செல்வமீனா
உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம்,
அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி

முன்னுரை

பதினெண் சித்தர்களுள் பட்டினத்தார் தலைச்சிறந்த தகைமையாளர். இவர் தமிழ் உலகிற்குப் படைத்தளித்த நூல்களுள் ‘திருவேகம்பமாலை’ காஞ்சி மாநகரத்தில் உள்ள ஏகம்பம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஏகாம்பநாதனைப் [சிவபெருமானை] புகழ்ந்து பாடியது. இந்நூல் 41 பாடல்களைக் கொண்டுள்ளது. இதில் சித்திரிக்கப்பெற்றுள்ள நிலையாமைச் சிந்தனைகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிலையாமை

உலக உயிர்கள் நிலையற்றவை. உலகத்துத் தோன்றும் எவ்வுயிரும் நிலைபெற்றுத் தங்குவதில்லை. நிலையாமை என்பதற்கு “அநித்தியம், உறுதியின்மை” என்று பொருள் (பி.இராமனாதன், கழகத்தமிழ் அகராதி, ப.610) ‘Instability’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லே நிலையாமை என்பதாகும். தமிழ் இலக்கியங்கள் அக, புற மற்றும் அறக்கருத்துகளோடு நிலையாமைச் சிந்தனைகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தன. நிலையாமையைத் தொல்காப்பியர் புறத்திணையியலில்,

“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே ” (தொல். பொருள்.புறத்.76)

என்று கூறுவர்.

இதனால் இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்ற தொல்காப்பியரின் கருத்தை உணர முடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணரின் கருத்துப்படி நிலையாமை மூவகை என்பதனை, “காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம். அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பல நெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடையது. நிலையாமை மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என இவற்றுள்” என்ற கூற்றினால் அறிய முடிகிறது [தொல்.பொருள்.இளம் பூரணாரின் உரை, பக்.125-126]

வள்ளுவர் நிலையில்லாதவற்றை நிலையானதாகக் கருதுவதனைப் ‘புல்லறிவாண்மை’ என்று கூறுவதனை, “நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மைக் கடை” (திருக்குறள்: 331) என்ற குறள் விளக்குகிறது.



இளமை நிலையாமை

மனித வாழ்க்கையில் வசந்த காலமாகக் கருதப்படுவது இளமைப் பருவமாகும். எப்பருவமும் நிலைத்து நிற்பதில்லை. இளமை நிலையாமையைத் தொல்காப்பியர், “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை” (தொல். பொருள்.புறத்.77) என்று கூறியுள்ளார். இத்துறைக்கு ‘முதுகாஞ்சி ’ என்று பெயர். திருவேகம்பமாலையில் பட்டினத்தார் காஞ்சியுள் எழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதனே, இந்த உலகத்தில் தோன்றி பேரின்பத்தை மறந்து, நிலையாமையை உடைய காம இன்பத்தில் மயங்கி, அதனை அனுவிப்பதன் பொருட்டு, மாதிரிடையே கிடந்து வருந்தி, பொருளைத் தேடி அவர்களுக்கு அளித்துப் பின் முதுமை வந்து சேர்வதால் தடுமாற்றம் அடைந்து நோய் மிகப் பெற்று வாழ்நாள் வீணாகப் போனதனை எண்ணி வருந்தியதனை, “பிறந்து மண் மீதில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை மறந்து சிற் றின்பத்தின் மேல்மய லாகிப்புன் மாதருக்குள் பறந்து உழன் றேதடு மாறிப் பொன் தேடியப் பாவையர்க் கீந்து இறந்திட வோபணித் தாயிறை வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை பா.30) என்ற பாடலில் சுட்டியுள்ளார். மேற்குறித்த பாடலுள் இளமைப் பருவம் எப்பயனும் இன்றி வீணேக் கழிந்து முதுமைப் பருவம் எய்திற்று என்ற கருத்தினால் இளமை நிலையாமை பற்றிய சிந்தனை கூறப்பெற்றது.

செல்வம் நிலையாமை

நிலையாமை வகையுள் செல்வ நிலையாமையும் ஒன்று “உயிரைப் போலவே செல்வமும் நிலையில்லாதது. கூத்து அரங்கத்துக்குள் ஒருவர் ஒருவராக உள்ளே நுழைவது போல் செல்வம் வருகிறது. ஆனால் கூத்து முடிந்து வெளியேறும் மக்களைப் போல் எல்லாமே ஒட்டு மொத்தமாக வெளியேறி விடுகிறது” (கவிஞர் குடந்தையான், தமிழர் பண்பாடு அன்றும் - இன்றும் ப. 171) “செல்வம், சகடக்கால் போல்வரும்” என்று நாலடியார் குறிப்பிடுகிறது. சக்கரம் நிலையில்லாது சுழலுவது போல செல்வமும் நிலையில்லாதது. இவ்வுலகில் பிறக்கும் போது எவரும் செல்வத்துடன் பிறப்பதில்லை. வறுமையுள் பிறந்து பெரிதும் முயன்று ஈட்டிய செல்வத்தை இறக்கும் போதும் எவரும் கொண்டு செல்வதில்லை பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உண்டானதாக எண்ணப்படும் செல்வம் நிலையற்றது என்பதனை, “பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லை பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவது இல்லை” (திருவேகம்பமாலை- 7: 1- 4) என்ற பாடலடிகளில் பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். பரந்துபட்ட உலகில் பொன்னைச் சிறந்த பொருள் என்று எண்ணித் தேடுபவர் பலர் இருக்கின்றதனை, “பொன்னை நினைத்து வெகுவாகத் தேடுவர்” (திருவேகம்பமாலை- 38:1- 2) என்ற அடிகள் மெய்ப்பிக்கின்றன. மேற்குறித்த பாடல்களால் செல்வம் நிலையற்றது இருக்கின்ற காலத்தில் இரப்பார்க்கு ஈவதும் இறையை நினைப்பதுமே நிரந்தரமானது என்பது உணரப்படுகிறது.



யாக்கை நிலையாமை

நிலையாமைக் கூறுகளுள் யாக்கை நிலையாமையும் ஒன்று. உலகத்தில் தோன்றிய உயிர் இறந்துபடும் என்பதே உறுதி, யாக்கை நிலையாமையை, “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”(திருக்குறள்: 339) என்று வள்ளுவர் சுட்டுவர். “உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு என்பது முட்டை ஓட்டுக்கும் குஞ்சுக்கும் உள்ள உறவைப் போன்றது” (கவிஞர் குடந்தையான், தமிழர் பண்பாடு அன்றும் - இன்றும் ப.171) உடம்பைத் தனியாக விட்டு விட்டு உயிர்ப்பறவை பறந்தோடி விடும். இதனை, “குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்பொ டுயிரிடை நட்பு” (திருக்குறள் : 338) என்று குறள் கூறுகிறது. திருவேகம்பமாலை, “பொய்யான உடலைப் பாதுகாக்கும் பொருட்டு உணவு தேடும் கவலை பெரிது” (8) என்று சுட்டுகிறது. பொய்யான உடல் நரிகளுக்கோ, கழுகுகள், பருந்துகள் முதலியவற்றுக்கோ, கொடிய நாய்களுக்கோ தீயினுக்கோ இரையாகப் போவதனைப் பட்டினத்தார், “... ... ... ... ... தமியேன் உடலம் ... ... ... ... ... நரிக்கோ கழுகு பருந்தினுக் ... ... ... ... ... கோ வெய்ய நாய் தனக்கோ எரிக்கோ இரை” (திருவேகம்பமாலை : 11:4- 7) என்று குறிப்பிட்டுள்ளார். உடல், எப்போதும் நீங்காத அழுக்குடைய உடல்; பொய்யே நிரம்பியுள்ள கொட்டில்; தசையினால் மூடப்பட்டுள்ள பல துளைகளையுடைய துருத்தி; ஓயாமல் சோற்றை இட்டு வைக்கும் தோலால் இயன்ற பை; கூறுவதற்கு அரிய காற்றை அடைத்து வைத்த பசுமண் பாத்திரம் என்று பட்டினத்தார் இழித்துக் கூறுவதனை, “ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன் பொதிந்த பீற்றல் துருத்தியைச் சோறிடும் தோற்பையைப் பேசரிய காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே ஏற்றுத் திரிந்துவிட் டேனிறை வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை : பா.எ. 27) என்ற பாடல் செப்புகிறது. நாள்தோறும் முயன்று சோறும் கறியுமான உணவை நிரப்பிப் பேணி வருகின்ற பசுமண் பாண்டம் போன்றதும், நரிகள் இறுதியில் உண்ணக் கட்டிவைத்த சோற்று மூட்டை போன்றதும் ஆன தீய நாற்றம் வீசுகின்ற புல்லிய இந்தவுடல், மங்கையரின் மலமும், செந்தீரும் கழிகின்ற அல்குல் என்ற குழியிலே விழுந்து அழியாதபடி கரையேறிவிடும்படியாக அருள் செய்ய வேண்டியதனை, “நாறும் உடலை நரிப்பொதி சோற்றினை நான் தினமும் சோறும் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம் கூறும் மலமும் இரத்தமும் சோரும் குழியில் விழாது ஏறும்படியருள் வாய் இறை வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை : பா.எ.34) என்ற பாடல் வழிப் பட்டினத்தார் விளம்பியுள்ளார். உடல் நன்றாக இருக்கும் காலத்திலேயே அறச்செயலைச் செய்தல் இறையின்பத்தை அடைதல் இன்றியமையாதவை என்பது புலனாகிறது.



பேரின்ப வாழ்வு

உலக உயிர்கள் நிலையாமைத் தத்துவத்தை உணர்தல் சாலச் சிறந்தது. “பிறந்த - தோன்றிய - உருவாக்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே ஒருநாள் அழிந்து போய்விடும் என்பது இந்துமதச் சிந்தாந்தம்” (கவிஞர் குடந்தையான், தமிழர் பண்பாடு அன்றும் - இன்றும் ப.171) இக்கூற்றிற்கேற்ப நிலையாமையை உணர்ந்து பேரின்ப வாழ்விற்குச் செல்வதற்குரிய வழிகளைப் பின்பற்ற வேண்டும். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை எவ்வளவு குறுகிய காலமோ அவ்வளவு குறுகிய காலமே மனித வாழ்க்கை அக்குறுகிய காலத்திற்குள் இறையை அடைதற்குரிய செயல்களைச் செய்தல் வேண்டும். இறையருள் கிடைப்பதற்காக இவ்வுலக வாழ்வை வெறுத்து, ஆசையை ஒழித்து, மாறுபாடான குணங்களை அடக்கி வாழவேண்டும் என்பதனைப் பட்டினத்தார், “பேதங் குணம் அற்றுப் பேராசை தான் அற்றுப் பின்முன் அற்றுக் காது காரணங் களும் அற்று ஆனந்தக் காட்சியிலே ஏதம் களைந்து இருப் பேனிறை வாகச்சி ஏகம்பனே” (திருவேகம்பமாலை: 31:3 - 8) என்னும் அடிகளில் சித்திரித்துள்ளார். இவ்வுலகில் வாழ்பவர் பலர் எல்லாவற்றையும் அறிந்திருந்தும் ஊழ்வினை காரணமாக அறிவு மயக்கம் கொண்டு மெய்ம்மையை உணராது, யான், எனது என்பது முதலிய சொற்களைச் சொல்லி மெய்ந்நூல்களுடன் மாறுபட்டுப் பின் எல்லாம் சிவன் செயலே என்று தெளிவர் [பா. 37] பிறவியை வெறுத்து தன்னைக் காக்கும்படி பட்டினத்தார் வேண்டுவதனை, “இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ என்சேய் வேன்கச்சி ஏகம்ப நாதனே” (திருவேகம்பமாலை- 41:7- 8) என்னும் அடிகள் விளக்குகின்றன.

முடிவுரை

பதினெண் சித்தர்களுள் பட்டினத்தாரும் ஒருவர். சித்தர்களின் முக்கியக் குறிக்கோள்களான உலக நிலையாமை, இறையருளே உண்மை என்பதற்கேற்பப் பட்டினத்தார் திருவேகம்பமாலையில் அவற்றைக் குறிப்பிட்டுள்ளார். இதில் இளமை, செல்வம், யாக்கை நிலையாமைகளை உணர்ந்து, வாழும் காலங்களில் இரப்பவர்க்கு ஈவதும் அறச்செயல்களைக் காலந்தாழ்த்தாமல் இயற்றுவதும் இறையின் இன்றியமையாமையை உணர்வதும் பட்டினத்தாரின் நிலையாமை குறித்த சிந்தனைகளாய் இருந்ததனை ஆயும் வழி அறிதற்கிடனாகிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p56.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License