Muthukamalam.com / Essay - Seminar Essays - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்:6
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

71.சித்தேரி மலைவாழ் மலையாளி இனமக்களின் மருத்துவ முறைகள்


கோ. பிரபு
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.

முன்னுரை

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மலைகளிலும் பல்வேறு வகையான மலையின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள மலைகளில் பெரும்பாலான மலைகள் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையைக் கொண்டு விளங்குகின்றன. தமிழ்நாட்டில் கொல்லிமலை, பச்சைமலை, பாலமலை, போதமலை, கல்வராயன்மலை, ஏற்காடு சேர்வராயன் மலை, சித்தேரிமலை எனப் பல மலைகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வகையில் சித்தேரி மலையில் வாழும் மலையாளி இனமக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து மீளக் கையாளும் மருத்துவ முறைகளை விளக்குவதாக இவ்வாய்வுரை அமைகிறது.

சித்தேரி மலை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சித்தேரிமலை அமைந்துள்ளது. அரூரிலிருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் இம்மலை அமைந்திருக்கிறது. சித்தேரி மலையில் வாழும் பழங்குடியினர் மலையாளிகள் என அழைக்கப்படுகின்றனர். இங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏறத்தாள 17000 பேர் வசிக்கின்றனர். 63 கிராமங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ள சித்தேரி மலைவாழ் மக்கள் மூலிகை, மாந்திரீக மருத்துவ முறையைக் கையாளுகின்றனர்.

மூலிகை மருத்துவ முறை

இப்பூமியில் மனித இனம் தோன்றிய போதே நோய்களும் தோன்றிவிட்டன. அந்நோயினைக் களைய முற்பட்ட மனிதன் அதற்கான மருந்தினைக் கண்டறிய இயற்கை வழி கிடைக்கும் மூலிகைகளைத் தேடியதன் விளைவாகத் தோன்றியதே மூலிகை மருத்துவ முறையாகும்.

‘மூலிகை’ என்பதற்கு மருந்து பூண்டு, மருந்து வேர், செடி கொடி என பல பொருள்கள் உண்டு. மூலிகை இதில் மூலி என்பதற்குக் கிழங்கு, மருந்து பூண்டு, வேருள்ள மூலிகை என்றும் ‘கை’ என்பதற்கு ஒழுங்கு, ஒழுக்கம் செய்கை, செயல், கைத்தொழில், மெய்நிலை என்றும் பொருள் கூறுகிறது கழகத் தமிழகராதி.

எனவே மருத்துவத்திற்கு பயன்படும் இலைகள், பூக்கள், மரங்கள், விதைகள், வேர்கள் ஆகிய அனைத்தையும் மூலிகைகளாகக் கொள்ளலாம். மேலும் உயிரினங்களின் நோய்களைக் களைய மூலங்களாகத் திகழும் அனைத்து மூலப் பொருட்களையும் மூலிகை என்று கூறலாம்.

நோய்களும் மருத்துவ மூலிகையும்

நோய் என்பது ‘உடல்நலம்’, ‘மனத்துன்பம்’ என்று இருவகைப்படும். நோயானது உடல், மனம் என்ற இரண்டுடனும் தொடர்புடையது. இவற்றுள் எது ஒன்று பாதிக்கப்பட்டாலும் நோய் உண்டாகும். நம் முன்னோர்கள் முதிர்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள், அந்த அனுபவ அடிப்படையில் பெரும்பாலான நோய்கள் வருவதற்கு மூல காரணங்களைக் கண்டுபிடித்து அதனை அகற்றும் வழிமுறைகளை நம் அன்றாட வாழ்வோடு இணைத்து விட்டனர்.

சித்தேரி மலைவாழ் மக்கள் தங்கள் நோய்களைத் தீர்ப்பதற்காகச் சிறந்த மருத்துவ முறைகளைக் கையாண்டு வருகின்றனர். எளிய முறையில் குறைந்த செலவில் நிறைந்த பலன் பெறுகின்றனர். பின் விளைவுகளற்ற நல் மருந்தைப் பயன்படுத்தி இனிய வாழ்வைப் பெறுகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் மருத்துவ முறைளைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

I) உள்ளுக்குள் கொடுக்கும் மருத்துவ முறைகள்

II) உடம்புக்கு வெளியே பயன்படுத்தும் முறைகள்I) உள்ளுக்குள் கொடுக்கும் மருந்துகள்

* ஜன்னி நோய் ஏற்பட்ட குழந்தைக்கு கை, கால் வலிப்பு ஏற்படும். வாயில், நுரை ததும்பும் இதைக் கண்ட மக்கள் அந்நோய்க்கு உரிய மூலிகையைக் கண்டறிந்தனர். நாணாகொழுந்து அரைத்துக் கருப்பு வெத்தலை, ஓமம் இரண்டையும் பிழிந்து ஒரு சங்கடை கொடுத்தால் ஜன்னி நோயானது நீங்கும்.

* திருமணமான பெண்கள் கருவுற்றவுடன் எந்தவிதத் தொல்லைகளும் பிணியும் நேராமல் இருக்க, ஒற்றைச் செம்பருத்திப் பூவினை ஒரு மண்டலம் மருந்தாகச் சாப்பிட்டு வந்தால் பிரசவக் காலங்களில் சுகப்பிரசவம் ஏற்படும்.

* கல்லீரல் நோய்க்கு வாழைத் தண்டையும், வாழைக்கிழங்கையையும் இரவு வேளையில் தினமும் இடைவிடாமல் ஒரு வாரம் சாப்பிட்டால் நோய் நீங்கும்.

* தாய்மையடைந்த பெண்கள், குழந்தை பிறந்த பின் தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கப் பால் பெருக்கி இலையை அரைத்துக் குடித்தால் தாய்மைப் பெண்ணிற்குத் தாய்ப்பால் பெருக்கும்.

* மாரடைப்பு நோய்க்கு செம்பருத்திப் பூவைக் காய்ச்சி, அதை வடிகட்டி 50 மில்லி குடித்தால் நோயானது குறையும்.

* நிலாபிறை (ஆவாரம் பூ) பூவின் மகரந்தத்தைக் காயவைத்து அதைத் தூளாக்கி தினமும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் குறையும்.

* பெண்களுக்கு மாதவிலக்கின் போது வயிற்று வலி ஏற்பட்டால், வேப்பிலையை உரலில் போட்டு இடித்துச் சாறினை எடுத்து, அதனை வெள்ளைத் துணியால் வடிகட்டிக் குடிக்க வேண்டும். பின், கொத்தமல்லிக் காப்பி குடித்தால் வலி குறையும்.

II) உடம்புக்கு வெளியே பயன்படுத்தும் மருத்துவமுறைகள்

* உடம்பில் வெட்டுக்காயம் ஏற்பட்டால் உள்ளிமுள் இலையை அரைத்துப் பூசினால் காயமானது நீங்கும்.

* சிறுகுறிஞ்சான் இலையைத் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

* குதிகால் வாதம் நோய்க்கு எருக்கு இலையைக் கொண்டுவந்து சூடான செங்கல் மீது வைத்துக் குதிகால் வீக்கத்தில் வைத்தால் நோய் நீங்கும்.

* சேற்றுப்புன் குணமாக எருமையின் சிறுநீரில் காலைக் கழுவி கருவேலம் கொழுந்துடன் மஞ்சள் அரைத்துப் பூசினால் நோய் நீங்கும்.

* முகத்தில் பரு ஏற்பட்டு இருந்தால், துளசி இலையோடு கற்பூரம் சேர்த்தரைத்து முகத்தில் உள்ள பரு மேல் பூசிவந்தால் பரு மறையும்.மாந்திரீக மருத்துவம்

மாந்திரீகம் என்பது மந்திரமுறையைக் குறிக்கும். மந்திரம் என்பதற்குத் தொல்காப்பியர்,

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப” (தொல். செய். 490)

மக்கள் தோன்றிய நாளிலிருந்து மந்திரச்சடங்குகளும் மருத்துவ முறைகளும் தோன்ற ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் சித்தேரி மலையின மக்களிடத்தில் காணப்படுகின்ற மந்திர மருத்துவ முறைகளைக் காணலாம்.

மந்திரம்

மனித உடம்பில் தோன்றும் நோய்களுக்கு மந்திரம் சொல்லிப் பாடம் அடிப்பதால் (சிறகடித்தல்) நோய் குணமாகும் என்று மக்கள் நம்புகின்றனர். ஒரு சொல்லையே திரும்பத்திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தால், அந்தச் சொல்லையே அவர்கள் உச்சரிப்பார்கள். பெரும்பாலும் கோயில் பூசாரி, ஜோதிடர் அல்லது மந்திரவாதிகளே மந்திரித்தல் நிகழ்வினை நிகழ்த்துகிறார்கள்.

மந்திரச் சொற்களை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டு மந்திரித்தலே மந்திரித்தல் என்று சரவணன் கூறுகிறார்.

மந்திரச் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அதில் ஆற்றல் பெறுகிறது என்று ஞானசேகரன் கூறுகிறார். (1987, ப.3)

மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள் பற்றிக் குறிப்பிடும் போது சீனா, திபெத் நாடுகளில் உள்ள புத்தபிக்குகள் மந்திரங்களை உச்சரித்து அவற்றிற்கு ஆற்றலைத் தருகின்றனர். அம்மந்திரங்களில் இடம்பெறும் சொற்களின் ஆற்றல் அவர்தம் அகக் கண்ணில் வண்ண வண்ண ஒளிப்பிழம்பாக உருவெடுக்கின்றன என்கிறார். மந்திரத்தால் மருத்துவ முறையை இரண்டு வகையாகப் பகுக்கலாம்.

1. நன்மை பயக்கும் மந்திரம் (தூய மந்திரம்)

2. தீமை விளைவிக்கும் மந்திரம் (தீயமந்திரம்)

1. நன்மை பயக்கும் மந்திரம்

மந்திரச்சொற்களும் மந்திரமுறைகளும் ஒரு குழு அல்லது ஒரு சமுதாயம் முழுவதின் நலனுக்காகப் பயன்படுமானால் அது நன்மை பயக்கும் மந்திரம் எனப்படும்.

தீமை விளைவிக்கும் மந்திரம்

ஏவல், பில்லி, சூனியம் போன்றவைகளுக்குத் துஷ்ட ஆவி அல்லது பேயினை ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு எதிராக ஏவுவதால் ஒருவனை நோய் வாய்ப்படும்படி அல்லது உடல் ஊனமடையும்படி செய்தல், பிறரை வசியம்பட செய்தல் தீமை மந்திரம் எனப்படும். இதனை,

“ஓன் பகவதி ஆதிகவரியூ
ரொசிக்காரி மகாமுனி
ஐயம் கிளியும் சபம்
அரசனே கல்யாணி
நாராயண தேவி
வீரலட்சுமி வாகினி மாந்திரி
மோசித் என்று
இந்நார் இந்நார் என் வசம் ஆக”

என்று கூறுகிறார் மெதிகாடு ராஜி.நன்மை சார்ந்த மருத்துவத்தை இரண்டாக பிரிக்கலாம்.

1. மருத்துவம் சார்ந்தது.

2. வாழ்வியல் சடங்குடன் சார்ந்தது.

மக்கள் தங்கள் நோய்களுக்குத் தெய்வத்தின் சினம், தீய ஆவிகளின் செயல் என்று நினைத்துக் கோயில் பூசாரியையோ, மந்திரவாதியையோ, ஜோதிடரையோ நாடிச் செல்லுதல். பொதுவாகப் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷக்கடிகளுக்கு பாடம் போடுகிறார்கள்.

பாடம் போடுதலுக்கு பயன்படுத்தும் கருவிகள்

துண்டு, சீமைகுச்சி, வேப்பிலை, வௌ;ளை எருக்கன்குச்சி போன்றவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர். விஷக்கடிகளுக்கு எந்த நேரத்திலும் பாடம் போடுகின்றனர்.

வெண்ணெய் மந்திரித்தல்

நமது காலில் அல்லது கையில் முள் ஏறிவிட்டால் அதனை வெடுக்கென்று பிடுங்கும்போது முள் உள்ளே இருக்கும், அதைக் களைய முடியாது. ஆதலால் பசுவின் வெண்ணெய் கொண்டு மந்திரவாதியிடம் கொடுத்தால் அவர் இறைவனை வேண்டி மனத்திற்குள் மந்திரங்களை முணுமுணுத்து வெண்ணெய் எடுத்து வெற்றிலையில் தடவி முள் உள்ள இடத்தில் சிறிது சதையைக் குத்தியெடுத்து வெண்ணெயை வைத்துக் கட்டுவார். அதனால், முள்ளானது தானேவரும் என்று வெங்கட்ராமன் (80 வயது) கூறுகிறார்.

திருநீறு மந்திரித்தல்

குழந்தைகள் அழுது கொண்டே இருந்தால் அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் திருநீறு மந்திரித்துப் போடுவதால் குணமாகும் (ராஜி 85 வயது) என்று கூறுகிறார்.

உப்பு மந்திரித்தல்

முருங்கைக் கீரையையும், உப்பையும் அரைத்து வெந்நீரில் கலந்து மந்திரித்துக் கொடுத்தலே உப்பு மந்திரித்தல் என்று கூறுவர். அதாவது, மனிதனுக்குப் புளி ஏப்பம் எடுத்தல், வயிறு பசிக்காமல் போதல் போன்ற நோய்கள் நீங்க இதைச் செய்கின்றனர். உடலில் தோன்றும் நோய்களுக்கு மந்திரவாதி அல்லது பூசாரி மந்திரங்களை முணுமுணுத்து மந்திரித்தலைச் செய்கின்றனர். இந்த முறையில் நோயாளி இல்லாமலேயும் மந்திரித்தலை மேற்கொள்கின்றனர்.

கயிறு மந்திரித்தல்

இரவில் தனியே நடக்கும் போது பயந்து கொள்ளுதல், எதையாவதுக் கண்டு மிரளுதல் இதனால் உடல் நடுங்கிக் காய்ச்சல் ஏற்படுதல் போன்ற நிகழ்வின் போது கயிறு மந்திரித்துக் கட்டப்படுகிறது.

கயிறு மந்திரித்தலுக்கு கயிறு (கருப்பு, சிகப்பு) பூசைப் பொருட்களும் கொண்டு செல்லவேண்டும்.

எந்திரம் மந்திரித்தல்

எந்திரம் மந்திரித்துக் கட்டுதலைத் தாயத்துக் கட்டுதல் என்றும் கூறுவர். அதாவது, நம்மைத் தீய ஆவிகள் பேய், பிசாசு தீண்டினாலும், அண்டினாலும் தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தாலும் நோயைக் குணப்படுத்தும் என்று மக்கள் எந்திரத்தை மந்திரித்துக் கட்டுகிறார்கள். (மெதிகாடு ராஜி -75)

இதைக் கட்டும்போது சுத்தமாகவும், குறிப்பிட்ட சமூக மக்களுக்குத் தன் கையால் தண்ணீர் ஊற்றாமலும், இறந்தவர் வீட்டிற்குச் செல்லாமலும் இருக்க வேண்டும். காலை மாலை நேரங்களில் எந்திரம் கட்டுகின்றனர்.

கண்ணேறு கழித்தல்கண்ணேறு கழித்தல் என்பது சிலரது தீய பார்வைக்குக் குழந்தைகள் ஆட்பட்டால் உடல் நலக்குறைவு உண்டாகும் என்று இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இதனைக் கண்ணேறுபடுதல் என்கின்றனர்.

இது கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் கடைப்பிடிப்பர். இது வியாழன் வெள்ளி ஆகிய நாட்களில் மாலை நேரங்களில் ஒரு படி எடுத்து அதில் உப்பு, வரமிளகாய், கடுகு, சீமதுடைப்பம்குச்சி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு வலது, இடது புறங்களில் வலது கையைச் சுற்றி வருதை,

கொள்ளிக்கண்ணு பொடோரென்று வெடிக்கட்டும்
பாம்புக்கண்ணு படீரென்று வெடிக்கட்டும் (துளசிகாடு பிச்சை - 85)

என்று தீயில் போட்டு மூன்று முறை தூ… தூ… தூ… என்று துப்பி நெட்டை முறிப்பர்.

ஏடு எழுதுதல் (சீட்டு கட்டுதல்)

குழந்தைகளுக்குப் பாலகிரக தோசத்திற்கு ஏடுகட்டி எழுதினால் குணமாகும் என்கிற நம்பிக்கையும் இங்குள்ள மக்களிடத்தில் உள்ளது.

குழந்தைகளுக்குக் காய்ச்சல் வருதல், கண்சொருகிவிடுதல் உதடு வறண்டு காணப்படுதல், கண்சூட்டு முடி தனித்தனியாய் நிற்றல் மேற்பார்வை பார்ப்பது பாலகிரகதோசத்திற்கு அறிகுறிகளாகும். ஏடு கட்டினால் இந்நோய் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

முடிவுரை

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்தபோதிலும்கூட சித்தேரியில் வாழும் மலையாளியின மக்கள் தங்கள் முன்னோர்களின் பண்பாட்டினையும் பழக்க வழக்கங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதும், இயற்கை மருத்துவ முறையிலேயே நோய்களைக் குணப்படுத்தும் முறையை நம்மால் அறிய முடிகிறது..


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p71.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License