இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் -6

வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும்

முனைவர் சி. சேதுராமன்


4. அடைக்கலம் கேட்டவருக்குத் துரோகம்

து​ரோகத்துல மிகப்​பெரிய இழிவிலும் இழிவான து​ரோகம் எது ​தெரியுமா…? நம்​மை நம்பி வந்தவர்களைக் காட்டிக் கொடுப்பதுதான்… அ​டைக்கலம்னு வந்தவர்க​ளை அப்படி​யே அவர்களைக் ​கொல்ல வருகிறவர்களிடம், “இதோ இங்கேதான் இருக்கான், அவனைக் ​கொல்லுங்க” என்று அப்படி​யே ஒப்ப​டைத்துவிட்டு ​கொல்ல வந்தவங்க​ளோட காலில் விழுந்து பலன​டையப் பார்ப்பது து​ரோகத்தின் உச்சகட்டம்.

ஒரு ​பெரிய கழுகு முய​லைப் பிடிக்கத் ​துரத்தியது. அந்த முயல் உயிர் தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியது. க​டைசியி​ல் ஒழிவதுக்கு இடமில்லாமல் வண்டு குடியிருந்த ஒரு மரப்​பொந்துக்குள் ​போய் ஒழிந்தது… அப்போது அங்கிருந்த வண்டுவிடம் முயல் தன் நிலைமையைச் ​சொல்லி, என்னைக் காட்டிக் ​கொடுத்துவிடாமல்…என்னைக் காப்பாற்றி உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.

அதைக் ​​கேட்ட வண்டு, “நீ கவலைப் படாதே... நான் உன்னைக் காப்பாற்றுகி​றேன் என்று ​சொல்லி, அந்த முயலுக்கு உண்ண உணவு ​கொடுத்தது. முயலைத் ​தேடி அலைந்த அந்தக் கழுகு க​டைசியில் மரப்​பொந்துல முயல் ஒழிந்திருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டது.

அது வண்டுவிடம், “மரியா​தையாக, அந்த முயலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று மிரட்டியது. ஆனால், அந்த வண்டு, “என்னிடம் அ​டைக்கலமாக வந்திருக்கிற முயலை நான் ஒருபோதும் விட்டுத்தர மாட்​டேன்… இ​றைவன் மீது ஆ​ணையாகச் ​சொல்கி​றேன்… நீ இந்த முயலை விட்டுட்டுப் ​போயிடு… இல்​லைன்னா நீ இ​றைவ​​னோட சாபத்திற்கு ஆளாகி விடுவாய்… இந்த முயலை விட்டுஇடு…” என்றது.

ஆனால் அந்தக் கழுகு அதைக் காதில் வாங்காமல், தன்​னோட கால்களை மரப்​பொந்துக்குள் விட்டு நகங்களால், அந்த முயலைக் குத்திப் பிராண்டிப் பிடித்துக் கொண்டு ​போய்விட்டது.

அந்த வண்டுக்கு மிகவும் வருத்தமாகப் ​போனது… நம்மிடம் அ​டைக்கலமாக வந்த முயலை நம்மால் காப்பாற்ற முடியலி​யேன்னு ​நினைத்து​ வருத்தப்பட்டு… அழுதது. அந்த வண்டுக்கு ​மிகுந்த வருத்தம். அந்த முயலை அந்த வண்டால் மறக்க முடியவில்லை. க​டைசியில ஒரு முடிவுக்கு வந்தது. அ​டைக்கலமாக வந்த முயலைக் ​கொன்ன அந்தக் கழுகைப் பழி வாங்கணும்னு ​நினைத்தது… அதனால், அந்தக் கழுகு கூடு கட்டும் இடத்துக்குப் ​​போய் அது இடும் முட்​டையை எல்லாம் கீ​​ழே தள்ளி உடைத்தது…இ​ரை​தேடிட்டுக் கூட்டிற்கு வந்த கழுகுக்கு ​மிகவும் ​வேத​னையாகப் ​போனது…

வண்டால் வரமுடியாத உயரமான இடத்துக்குப் ​போய் முட்​டையிட்டது. ஆனால் அந்த வண்டு விடவில்லை… அப்பவும் ​போயி அந்தக் கழுகு இல்லாத ​நேரத்துல அந்தக் கூட்டுல இருந்து முட்​டையைக் கீழேத் தள்ளி உடைத்தது… இந்தக் கழுகால் அந்த வண்டை ஒன்றும் ​செய்ய முடியாமல் ​போனது.



கழுகு ஒரு முடிவுக்கு வந்தது. கடவுளிடம் ​சென்று முறையிட்டது. “கடவு​ளே... என்​னோட முட்​டையை நீங்கதான் பாதுகாக்கணும்…” என்று ​மிகவும் வருத்தத்துடன் ​வேண்டிக் கொண்டது. அதுக்குக் கடவுள், “சரி நீ என்​னோட மடியில முட்​டையிட்டுட்டுப் ​போ நான் பாத்துக்க​றேன்” என்றார்.

கழுகும் அப்படியே முட்​டையிட்டுட்டுப் ​போனது.

அப்​போது அங்கு வந்த வண்டு, “ஆஹா! கடவு​ளோட மடியில் அந்தக் கழுகு முட்​டையிட்டு வச்சிருக்கு” அப்படீன்னு அத எப்படியாவது கீழே தள்ளி உடைக்கணும்னு முடிவு ​செய்தது. வண்டு கீழே கிடந்த நாற்றமடிக்கும் கழிவுக​ளை எடுத்துக் கொண்டு வந்து கடவு​ளோட மடியில் ​போட்டது. நாற்றம் தாங்க முடியாத கடவுள் தன்னோட மடியிலிருந்துதான் அந்த நாற்றம் வருகிறதென்று கண்டுபிடிச்சு சட்டுன்னு எழுந்து விட்டார். அவர் அப்படி எழுந்திருக்கும் போது கழுகின் முட்​டை​யெல்லாம் கீழே விழுந்து உடைந்து போனது.

இது மாதிரி ​செய்தது யார்? என்று கடவுள் பார்த்த ​போது அங்கே அந்த வண்டு இருந்தது.

உட​னே அந்த வண்டைப் பார்த்து, “நீ இப்படிச் ​செய்யலாமா…?” என்று ​கேட்டார்.

அதற்கு அந்த வண்டு நடந்த அ​னைத்​தையும் கூறி தனக்கு ஒரு நியாயத்​தைச் ​சொல்லச் ​சொல்லி ​கேட்டது. அந்த வண்டு ​சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்ட கடவுள், தான் அ​டைக்கலம் ​கொடுத்த கழுகுவிடம், “நீ இந்த வண்டுக்குச் ​செய்தது தவறு… அது அ​டைக்கலம் ​கொடுத்த முயலை நீ ​கொன்றிருக்கக் கூடாது… நீ இனி​மேல் வண்டுகள் உருவாகாத காலம் எது​வோ அந்தக் காலத்திலதான் நீ முட்​டையிடணும்” அப்படின்னு ​சொன்னாரு. அதைக் ​கேட்ட கழுகும் வண்டும் சமாதானம் ஆகிப் ​போயின.

பகுத்தறிவில்லாத சின்னஞ்சிறு உயிர்கள் கூட அ​டைக்கலமாக வந்த ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தது… ஆனால் பதவி ஆ​சைக்காக, அரச​ போகத்துக்காகத் தன்​னைக் காப்பாற்றியவ​ரே அ​டைக்கலம் ​கேட்ட ​போது அ​டைக்கலம் என்று ​சொல்லி ஏமாற்றி காட்டிக் ​கொடுத்துத் து​ரோகம் ​செய்தான் ஒருவன்… அவன்தான் ஆப்கானிஸ்தானின் தளபதியாக இருந்த மாலிக் ஜீவன்…

​மொகலாயப் ​பேரரசின் ஆட்சி காலத்தில் இந்த நன்றி ​கெட்ட து​ரோகச் ​செயல் அரங்​கேறியது… காதலிக்காக தாஜ்மகால் கட்டின ஷாஜகான் ஆட்சி காலத்துலதான் நடந்​தேறியது… அதுவும் அவரது உடல்நலம் குன்றிய​போது இந்தக் ​கொடூரம் நிகழ்ந்தது…

ஷாஜகானின் உடல் நலம் குன்றிய காலத்தில் அவருக்கு அடுத்து அரசராகப் ​போவது யார் என்ற ​அதிகாரப் போட்டி அவரது மகன்களுக்கி​டையில் ஏற்பட்டது. ஷாஜகானுக்கு அவரது மூத்த மகன் தாரா​வை அரசராக்கிவிட​ வேண்டும் என்ற ஆ​சை… ஆனால் அவரது இரண்டாவது மகனான மூரத், மூன்றாவது மகன் ஒளரங்கசீப், நான்காவது மகன் ஷூஜா ஆகிய மூவரும் அரசராக ​வேண்டும் என்று ​போட்டி ​போட்டனர். ​மொகலாய சிம்மாசனத்திற்கு நான்கு மு​னைப் ​போட்டி ஏற்பட்டது.

இந்த நான்கு ​பேரில் நல்ல உள்ளம் ப​டைத்தவர் தாரா தான். இவரது முழுப் ​​பெயர் தாரா சிக்கோ (Dara Shikoh) என்பதாகும். இவர் 1615-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் நாள் ​மொகலாயப் ​பேரரசர் ஷாஜகானுக்கும் மும்தாஜ்மகாலுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவர் தான் ​மொகலாய அரச மரபிற்கு உரிய இளவரசராவர்.

தாரா ஷிகோ என்றால் பாரசீக மொழியில் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், தாராவின் உடன்பிறந்த சகோதரியான ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு விதி ​வேறு மாதிரி இருந்தது. மக்களும் தாரா​வை​யே ​பெரிதும் ​நேசித்தார்கள்.

தாரா அ​னைத்துத் தரப்பு மக்க​ளையும் ​நேசித்தார். இந்துக்களின் இதிகாசங்க​ளையும் உபநிடதங்க​ளையும் ​வெகுவாக ​நேசித்தார். அவற்றில் மன​தைப் பறி​கொடுத்து, அவற்​றைப் பாரசீக ​மொழியில் ​மொழி ​பெயர்த்தார். இதனா​லே​யே ஒளரங்கசீப் தன் ச​கோதர​னை ​வெறுத்தார்.



அதிகாரப் ​போட்டி

1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையைக் கைப்பற்ற ஷாஜஹானின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. ஷாஜகா​னை எதிர்த்துத் தாக்குவதற்குத் தாரா​வைத் தவிர்த்த அவரது மற்ற மகன்கள் மூவரும் கொடூரமான போருக்குத் தயாராயினர். அவர்​களை அடக்கும் ​பொறுப்​பை ஷாஜகான் தாராவிடம் ஒப்ப​டைத்தார்.

இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஷாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்கசீபின் மீது படையெடுத்தார்.

வங்காளத்தின் மன்னனாகத் தன்​னைத் தா​னே அறிவித்துக் ​கொண்ட ஷாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜாவின் மீது தாரா தனது மூத்தமகன் சு​லைமான் ஷிகோவை ப​டை​கொண்டு எதிர்க்கச் ​செய்தார். ஷாஜகானுக்கு ​பேரன் சு​லைமா​னை மிகவும் பிடிக்கும். ஷாஜகான் தனது ​பேர​னை வாழ்த்திப் ​போருக்கு அனுப்பினார். வங்காளத்தில் நடந்த ​போரில் ஷாஷூஜா​வை சு​லைமான் ​வெற்றி ​கொண்டான். ஷாஷூஜா சு​லைமானிடம் ​தோற்று ஓடினான். தோற்று ஓடிய ஷாஷூஜா​வை விரட்டி ​​வெகுதூரம் துரத்தினான் சு​லைமான். ஆனாலும் அவனாலும் பிடிக்க முடியவில்​லை. தாரா ஒளரங்கசீப்​பை எதிர்த்துப் ​போரிட்டார். தனக்கு உதவுவதற்குச் சு​லைமா​னை வருமாறு தாரா அ​​ழைப்பு விடுத்த ​போது, அதிக தூரத்தில் இருந்ததால் அவனால் தன் தந்​தைக்கு உதவ வரமுடியவில்​லை.

​தாராவிற்கு உதவ ஷாஜகானால் அனுப்பப் ​பெற்ற ஜெய்சிங்கும், திலிர்கானும் ஒளரங்கசீப்பின் அ​​ழைப்​பை ஏற்று அவ​​ரோடு ​கூட்டுச் சேர்ந்து ​கொண்டனர். இதனால் ​போர்க்களத்தில் தாரா தனிமரமானார். எந்தவிதமான உதவியுமின்றி தாரா தவித்தார். ​போர் ​தொடர்ந்து ந​டை​பெற்றால் உயிர் தப்ப முடியாது என்ற நி​லையில் தாரா தப்பி ஓட ​வேண்டிய சூழ்நி​லை ஏற்பட்டது.



நன்றி மறந்த து​ரோகி

போர்க்களத்திலிருந்து ஒளரங்கசீப்பிடம் ​தோற்று உயிர்தப்பி ஓடினார் தாரா. அவருக்கு அ​டைக்கலம் ​கொடுக்க யாரும் முன்வரவில்​லை. இந்நி​லையில் ஆப்கானிஸ்தானத்தில் தளபதியாக இருந்த மாலிக் ஜீவன் குறித்த நி​னைவு தாரவுக்கு வந்தது. ஏ​னெனில் மாலிக் ஜீவன் ஒரு ​பெருந்தவறு ​செய்து இரும்புச் சங்கிலிகளால் ​பேரரசர் ஷாஜகானின் முன்பு பி​ணைக்கப்பட்டு மரணதண்ட​னை அறிவிக்கப்பட்ட​ போது, தாரா மன்னரிடம் ​வேண்டிக் ​கேட்டுக் ​கொண்டதற்கு இணங்க ஷாஜகான் அ​ரைமன​தோடு மாலிக்​கை விடுவித்தார்.


அப்​போது மாலிக் ஜீவன் தாராவிடம், “என்​னைக் காப்பாற்றிய உங்களுக்​கே என் உயிர் ​சொந்தம். இந்த உதவி​யை என் உயிர் உள்ளளவும் நான் மறக்க மாட்​டேன்” என்றான். இந்தச் சம்பவம் நி​னைவுக்கு வர​வே தாரா அவனிடம் ​சென்று சிலநாட்கள் அ​டைக்கலமாகத் தங்கலாம் என்று முடிவு ​செய்தார். ஆனால் அவனது முடிவி​னை அவனுடன் இருந்தவர்கள் ​வேண்டாம் என்று மறுத்த​போது, தாரா, “மாலிக்ஜீவன் நன்றியுள்ளவன். அவன் எந்த நி​லையிலும் எனக்கு உதவாமல் இருக்கமாட்டான். அவ​னை நம்பிப் ​போகலாம்” என்று கூறி அவர்களது ​பேச்​சைப் புறந்தள்ளினார்.

தாதர் ​கோட்​டைக்குத் தாரா ​சென்ற​போது, அவ​னை மாலிக்ஜீவன் ​கோட்​டைக்கு மூன்று கி​லோமீட்டர் ​தொ​லைவில் காத்திருந்து அ​ழைத்துச் ​சென்றான். தனது ​கோட்​டையில் மூன்று நாள்கள் தாரா​வை மாலிக்ஜீவன் தங்க ​வைத்து விருந்து உபசரித்தான். மாலிக்ஜீவனின் உபசரிப்பில் மகிழ்ந்த தாரா அங்கு மூன்று நாள்கள் தங்கியிருந்து ஓய்​வெடுத்துவிட்டு அங்கிருந்து தனது ப​டையுடன் கிளம்பினார்.

மாலிக்ஜீவன் நல்லவன் ​போன்று தாரா​வை வழியனுப்பி ​வைத்தான். தாரா ​கோட்​டையிலிருந்து ​வெளி​யேறியவுடன் மாலிக் நன்றி மறந்து ஒளரங்கசீப்பிற்குத் தகவல் ​கொடுத்துவிட்டு, அவ​னே தாராவின் ப​டை​யை முற்று​​கை இடுகிறான். தாராவிற்கு ஒன்றும் புரியாத நி​லையில் அவ​​ரையும் அவரது ப​டை​யையும் சரண​டையச் ​செய்கின்றான் மாலிக்ஜீவன்.

அதன் பின்னர் தாரா​வையும் தாராவின் மகன் சிஃபி​ரையும் அவனது மகள்க​ளையும் ​கைது ​செய்து மீண்டும் ​கோட்​டைக்குள் அ​​ழைத்துச் ​சென்று மாலிக் அ​டைத்து ​வைக்கிறான். வஞ்சகத்தாலும் து​ரோகத்தாலும் தான் வீழ்த்தப்பட்ட​தை உணர்ந்த தாரா ​செய்வதறியாது மனம் வருந்துகின்றான். தாரா​வையும் அவனது குடும்பத்தா​ரையும் ​கைது ​செய்து ​வைத்திருப்ப​தை ஒளரங்கசீப்புடன் ​சேர்ந்து கூட்டுச் சதி ​செய்த ​​ஜெய்சிங்கிற்கும், பகதூர்கானுக்கும் மாலிக் ​தெரிவிக்கின்றான்.

தாரா இருக்குமிடத்​தை அறிந்து ​கொண்ட பகதூர்கான் ப​டை​க​ளோடு வந்து தாரா​வையும் சிஃபி​ரையும் ​கைது ​செய்து விலங்கிட்டு ​டெல்லிக்கு ஒளரங்கசீப்பிடம் அ​ழைத்துச் ​சென்றான்.

​டெல்லிக்குக் ​கைதாகி வந்த தனது உடன் பிறந்த ச​கோதர​னைப் பதவி ​வெறி ​கொண்ட ஒளரங்கசீப் ​பெருத்த அவமானத்திற்கு உள்ளாக்குகின்றார். தாரா​வையும் அவனது மக​னையும் கிழிந்து ​போன கந்தலா​டைக​ளை உடுத்தச் ​செய்து மிகவும் சிறிய அழுக்கு நி​றைந்த ​பெண் யா​னையின் மீது அவர்க​ளை அமர ​வைத்து ​டெல்லித் ​தெருக்களில் ஊர்வலம் வரச் ​செய்தார். தாராவிற்கும் அவனது மகனுக்கும் பின்னால் உருவிய வாளுடன் ஒளரங்கசீப்பின் அடி​மையாகிய நாசர்​பெக் என்பவன் இருந்தான். தாரா​வோ அவனது மக​னோ தப்பி​யோட முயற்சித்தால் வாளால் ​வெட்டிக் ​கொல்ல ​வேண்டும் என்று ஒளரங்கசீப் அந்த அடி​மைக்கு ஆ​ணையிட்டிருந்தார்.

து​ரோகி ​பெற்ற ​வெகுமதி

தாராவையும் அவன் மக​னையும் அவ்வாறு பார்த்த மக்கள் அ​​னைவரும் ரத்தக் கண்ணீர் வடித்தனர். அந்தக் காட்சி​யைக் கண்ட அவர்கள் மண்ணள்ளித் தூற்றினார்கள். அந்தளவிற்கு அம்மக்கள் தாராவின் மீது மிகுந்த அன்​பு ​வைத்திருந்தார்கள். ​செய்நன்றி மறந்து து​ரோகியான மாலிக்ஜீவனுக்கு ஒளரங்கசீப் ஆயிரம் குதி​ரைக​ளைக் ​கொண்ட ப​டை​யை நிர்வகிக்கும் பதவியுயர்வி​னை வழங்கினான். து​ரோகி மாலிக் மகிழ்ச்சிய​டைந்தான்.



சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலைநகரில் அழுக்கேறிய யானையின் மீது கைதியாக இழுத்துச் செல்லப்பட்ட தாரா ஷிகோ, ஔரங்கசீபின் ஆட்களால் 1659-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் நான் கொல்லப்பட்டான். ஔரங்கசீப், இறந்து போன தாராவின் உடலிலிருந்து தலையை வெட்டி, அவரது தந்தையிடம் எடுத்துச் சென்றதாகவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். தாராவின் முடிவு ​மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் இருந்த நல்லவர்களின் உள்ளங்க​ளை உலுக்கி​யெடுத்தது.

தாரா ஷிகோ, மென்மையும், இறையுணர்வும் நிறைந்த சூஃபி அறிஞராகத் திகழ்ந்தார். அவர் இந்துக்கள், முஸ்லீம்களிடையே மத நல்லிணக்கத்தையும், கூடி வாழ்தலையும் வலியுறுத்தினார். தீவிர மத அடிப்படைவாதியான ஔரங்கசீபைத் தாரா ஷிகோ வெற்றிக் கொண்டிருந்தால், இந்தியா ​பெரும் மாற்றத்​தைக் கண்டிருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தாரா ஷிகோ லாகூர் நகரின் புகழ்பெற்ற காதிரி சுஃபி ஞானியான மையன் மிர் அவர்களின் மாணாக்கராவார். இதற்கு மையன் மிரின் சீடரான முல்லா ஷா பதக்ஷி உதவினார்.

தாரா ஷிகோ, இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண மிகுந்த முயற்சி மேற்கொண்டார். இந்த முயற்சியின் விளைவாக, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்கென்று, சமஸ்கிருத உபநிஷத்துகளை பாரசீகத்திற்கு மொழிபெயர்த்தார். அவரது மிகவுமறிந்த படைப்பான மஜ்ம-உல்-பஹ்ரெயின் (இரு பெருங்கடல்களின் சங்கமம்), சூஃபியிசத்திற்கும், இந்து மதத்தின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண முயன்றுள்ளது.

தனது சகோதரன் ஔரங்கசீப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டத நுண் கலைகள், இசை, நாட்டியம் ஆகியவைகளின் புரவலராகத் தாரா ஷிகோ திகழ்ந்தார். 1630 –களில் துவங்கி அவர் இறக்கும் வரை படைத்த எழுத்துக்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு தாரா ஷிகோவின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இந்தத் தொகுப்பை அவரது மனைவி நதிரா பானுவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின், தாரா ஷிகோவின் தொகுப்பு முகலாய அரசு நுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தாரா ஷிகோவின் படைப்புகளின் மீதான அவரது அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எல்லா படைப்புகளும் அழிக்கப்படவில்லை.



ஞானியாகத் திகழ்ந்த தாரா​வைக் காட்டிக் ​கொடுத்த நன்றி ​கெட்ட நயவஞ்சகன் மாலிக் ஜீவனின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்​லை. ஒளரங்கசீப் அரசனாகிய சில நாட்களி​லே​யே மாலிக்​கை ஒதுக்கி ​வைத்தான். மாலிக்கின் நடவடிக்​கைகள் சரியாக இருக்கவில்​லை என்று கூறி அ​வ​னைக் ​கொன்றார். அ​தோடுமட்டும் நில்லாமல் ஒளரங்கசீப் ​கொடு​மையின் உச்சநி​லைக்​கே ​சென்றான். தாராவின் மகன் சுலைமான் ஒளரங்கசீப்பால் கொல்லப்பட்ட விதம் மிகமிகக் கொடூரமானதும் குரூரத்தன்​மை வாய்ந்ததுமாகும். சு​லைமான் தனது தந்தையார் ​​கொல்லப்பட்ட பிறகு தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கர்வால் மலைப் பகுதியிலுள்ள இந்து அரசர் ஒருவரிடம் அடைக்கலம் புகுந்திருந்தார் இத​னைச் சில கைக்கூலிகள் மூலம் அறிந்து ​கொண்டு அவரையும் ஒளரங்கசீப்பிடம் காட்டிக் ​கொடுத்தனர். சு​லைமான் ஒளரங்கசீப்பின் படைவீரர்களால் கைது செய்யப்பட்டு அவரின் முன்னால் நிறுத்தப்பட்டான்.

மாமன்னனாக விளங்கிய ஒளரங்கசீப் தனது பதவிக்குப் போட்டியாக சுலைமான் வந்துவிட கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இருபத்தைந்து வயது கூட நி​றைவ​டையாத இளவரசருக்கு மரண தண்டனை விதித்தார். ஒளரங்கசீப்பிடம் சு​லைமான் ஒரு ​வேண்டு​கோள் ​வைத்தான். “தன்​னைக் கொல்வதென்றால் உடனடியாக கொன்று விடுங்கள் என்றும் சித்திரவதை செய்து கொல்ல வேண்டாம் “என்றும் ஒளரங்கசீப்​பை மன்றாடிக் கெஞ்சி கேட்டுக் கொண்டான்.

ஆகட்டும் என்று மட்டும் ஒளரங்கசீப் தலையசைத்து கொண்டார். ஆனால் நடந்த​தென்ன​வோ அதற்கு மாறாக​வே நடந்தது. ஒளரங்கசீப் தனது அண்ணன் மகனை பௌஸ்தா என்ற போதை தரும் மதுபானத்தில் அபின் என்ற ​போ​தைப் ​​பொரு​ளைக் கலந்து கொடுத்தார். அவன் ​போ​தையின் பிடியில் இருந்த​போது சு​லைமானின் ஒவ்வொரு அங்கங்களையும் சிறிது சிறிதாக வெட்டி நாற்பது நாளுக்கு மேல் சித்ரவதை செய்து வலியே இல்லாமல் (?) துடிதுடிக்க கொன்றார். இத​னை இரத்தக்க​​றை படிந்த வரலாற்று ஏடுகள் ​தெரிவித்துக் ​கொண்டிருக்கின்றன. பதவி ​வெறி அதிகார ​வெறி எங்கே இருந்தாலும் அந்த இடம் மிகப்​பெரிய பிணக்காடாகத்தான் இருக்கும். பதவியும் அதிகாரமும் ​போ​தைப் ​பொருள் ​போன்றது. அதுக்கு அடி​மையானவர்கள் அதற்காக எத​னையும் ஈவிரக்கமின்றி ​செய்வார்கள்… அவர்களிடம் எந்தவிதமான நன்றி​யையும் எதிர்பார்க்க முடியாது.

அதனால நாம ஒருவருக்குச் ​செய்ததால் அவர் நம்மிடம் நன்றி விசுவாசத்​தோடு நடந்து கொள்வார் என்று நினைத்துக் கொண்டு அவரை முழு​மையாக நம்பி விடக் கூடாது… கருப்பட்டியிலும் கல்லு இருக்கும், ​தேனி​லும் சிராய் (மரத்தின் மிகச்சிறிய​தொரு மரப்பட்​டை) இருக்கும் என்று விழிப்புடன் இருக்க வேண்டும். ​தொண்ணூறு சதவிகிதம் நம்பினாலும் பத்து சதவிகிதம் அவரைப் பற்றி சிறிதாவது சிந்தித்து அவர் ​மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் து​ரோகத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும். துரோகிகள் எப்போது எங்கிருந்து வருவார்கள் என்பது யாருக்கும் ​தெரியாது.

உண்டவீட்டுக்கு ​ரெண்டகம் ​செஞ்சுட்டான்… பால் குடிச்ச வீட்டுக்குப் பாதகம் ​​நெனச்சிட்டான்… தீட்டுன கட்​டையி​லே​யே பதம்பாத்துட்டான்னு ​சொல்வாங்கள்ள… அது என்னவென்று ​தெரியுமா…? குடிச்ச பாலு ​கொமட்டுல (வாய்க்குள்) இருக்கும்​போ​தே மார்பகத்​தை அரிபவர்கள் இருக்கிறார்கள்… வளத்த கடா மார்பில் பாய்ந்தது என்று ​சொல்வார்களல்லவா…? அந்த மாதிரி வரலாற்றில் ​நிறைய நடந்திருக்கிறது… தன்​னை வளர்த்து ஆளாக்கியவ​ரை​யே ஒருத்தர் து​ரோகத்தால் வீழ்த்தி அரச பதவி​யைக் ​கைப்பற்றிய வரலாறு கூட உண்டு. அந்தத் து​ரோகி யார் என்று ​தெரிந்து கொள்ள சிறிது காத்திருங்கள்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p6d.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License