தமிழ் இன்றி அமையாது ஆங்கிலம்
திருத்தம் பொன் சரவணன்
தமிழ் மூலச் சொற்கள் - பகுதி 1
“நீர் இன்றி அமையாது உலகு” என்பது ஐயன் வள்ளுவர் வாக்கு. “தமிழ் இன்றி அமையாது ஆங்கிலம்” என்பது மொழியியல் ஆய்வாளர் வாக்கு.
கட்டுமானப் பணிகளில், பழைய சுவர்கள், கதவுகள், இரும்புப் பொருட்கள் போன்றவைகளிலிருக்கும் சிறிய அளவிலான மேடு, பள்ளங்களை மக்குப்பசை (Putty) கொண்டு சரி செய்து சமமானதாக்கி, அதன் பிறகு அதில் தேவையான நிறப்பூச்சுகளைப் பூசி புதிதாக்கிக் கொள்வது போன்று, தமிழ் மொழியில் பயன்பாட்டிலிருக்கும் பல சொற்களை, ஆங்கிலம் நேரடியாகவோ அல்லது இலத்தீன மற்றும் கிரேக்க மொழிச் சொற்களின் வழியாகவோப் பெற்றுக் கொண்டு, அதில் சிறிய அளவில் மாற்றம் செய்து, உலகம் முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பெற்ற புதிய ஆங்கில மொழிச் சொல் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் பயன்பாட்டிலிருக்கும் பல சொற்களின் மூலச் சொல் தமிழ் மொழிச் சொல்தான் என்பதை இங்கு சில உதாரணங்களுடன் விளக்கும் வகையில் இத்தொடர் அமைகிறது.
Demand
Demand என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச்சொல்லாகத் தேவை, வேட்கை, விருப்பம் போன்ற பொருட்களையும், வினைச்சொல்லாக வேண்டு, கேள், அழை போன்ற பொருட்களையும் தருகிறது. தவண்டை என்ற தமிழ்ச் சொல்லுக்கு, வறுமை, பற்றாக்குறை, உடுக்கை போன்ற பொருட்களைத் தமிழ் அகராதி சுட்டுகிறது. பற்றாக்குறையேத் தேவையாக அமைகிறது. அதாவது, இல்லாத ஒன்றை அடைவதே விருப்பம், வேட்கை எனப்படும். அது மட்டுமின்றி, உடுக்கை என்பது ஒலித்தல் சார்ந்த பொருள் என்பதால், ஒலி, அழை என்ற வினைகளுக்கும் அது பொருந்தக் கூடியதே. ஆராய்ந்து பார்க்கும் போது, தவண்டை என்ற தமிழ்ச்சொல்லானது பெயர்ச் சொல்லாக இருந்து, பற்றாக்குறை அதாவது தேவை, வேட்கை ஆகியவற்றையும், வினைச்சொல்லாக இருந்து ஒலி, அழை, விரும்பு, வேண்டு, கேள் ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
தவண்டை = (1). பற்றாக்குறை > வேட்கை, விருப்பம், தேவை, வேண்டு, கேள். (2). உடுக்கை > ஒலி, அழை >>> Demand
எனவே, Demand என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் தவண்டை என்ற தமிழ்ச் சொல்லையே பயன்படுத்தலாம்.
எடுத்துக் காட்டு
(1) He demanded a big money = அவர் பெரும் பணத்தைத் தவண்டைத்தான்.
(2) Gold has always a demand = தங்கத்திற்கு எப்போதும் தவண்டை
Want
Want என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச்சொல்லாகத் தேவை, விருப்பம், வறுமை, குறைபாடு போன்ற பொருட்களையும், வினைச்சொல்லாக விரும்பு, தேவைப்படு போன்ற பொருட்களையும் தருகிறது. வேண்டு என்ற தமிழ்ச் சொல்லுக்கு விரும்பு, கேள், தேவைப்படு போன்ற பொருட்களை அகராதி சுட்டுகிறது. இல்லாத ஒன்றை, அதாவது வறுமை அல்லது குறைபாட்டினைச் சுட்டுவதே விருப்பம், வேட்கை எனப்படும். ஆராய்ந்து பார்க்கும்போது, வேண்டு என்ற தமிழ்ச்சொல் ஆனது வினைச்சொல்லாக இருந்து விரும்பு, கேள், தேவைப்படு ஆகியவற்றையும் பெயர்ச்சொல்லாக இருந்து தேவை, விருப்பம், வறுமை, குறைபாடு ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
வேண்டு = விரும்பு, கேள், தேவைப்படு > விருப்பம், தேவை, வறுமை, குறைபாடு >>> Want
எனவே, Want என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் வேண்டு என்ற தமிழ் ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக் காட்டு
(1) She wanted to eat fruits = அவள் பழங்களை உண்ண வேண்டினாள்.
(2) Wanted tailor = தையலர் வேண்டும்.
Need
Need என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச் சொல்லாகத் தேவை, விருப்பம், தேடல் போன்ற பொருட்களையும், வினைச்சொல்லாக விரும்பு, தேவைப்படு, தேடு போன்ற பொருட்களையும் தருகிறது. நேடு என்ற தமிழ்ச் சொல்லுக்கு விரும்பு, தேடு, தேவைப்படு போன்ற பொருட்களை அகராதி சுட்டுகிறது. இல்லாத ஒன்றைத் தேடுவதே விருப்பம், வேட்கை, தேவை எனப்படும். ஆராய்ந்து பார்க்கும் போது, நேடு என்ற தமிழ்ச்சொல் ஆனது வினைச்சொல்லாக இருந்து விரும்பு, தேடு, தேவைப்படு ஆகியவற்றையும் பெயர்ச் சொல்லாக இருந்து தேவை, விருப்பம், தேடல் ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
நேடு = விரும்பு, தேடு, தேவைப்படு > விருப்பம், தேவை, தேடல் >>> Need
எனவே, Need என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் நேடு என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக் காட்டு
(1) Everyone needs food = ஒவ்வொருவரும் உணவை நேடுகிறார்.
(2) No need to ask me = என்னைக் கேட்க நேடில்லை.
Require/ Requirement
Requirement என்ற ஆங்கிலச் சொல்லானது தேவை, விருப்பம் போன்ற பொருட்களையும், Require என்ற ஆங்கிலச் சொல்லானது வேண்டு, தேவைப்படு போன்ற பொருட்களையும் குறிக்கும். அருங்குறை என்ற தமிழ்ச் சொல்லுக்கு விருப்பம், தேவை என்ற பொருளை அகராதி சுட்டுகிறது. ஆராய்ந்து பார்க்கும்போது, அருங்குறை என்ற தமிழ்ச்சொல் ஆனது பெயர்ச்சொல்லாக இருந்து தேவை, விருப்பம் ஆகியவற்றையும், வினைச்சொல்லாக இருந்து
வேண்டு, தேவைப்படு ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொற்களுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
அருங்குறை = விருப்பம், தேவை > விரும்பு, வேண்டு, தேவைப்படு >>> Requirement / Require
எனவே, Require / Requirement என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் அருங்குறை என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக் காட்டு
(1) Monthly requirement = மாத அருங்குறை.
(2) Why do you require money? = ஏன் நீ பணத்தை அருங்குறைக்கிறாய்?
Necessity
Necessity என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச்சொல்லாக, கட்டாயத் தேவை என்ற பொருளைக் குறிக்கிறது. நத்தாசை என்ற தமிழ்ச் சொல்லுக்கு வலுவான விருப்பம், பேராசை போன்ற பொருட்களை அகராதி சுட்டுகிறது. வலுவான விருப்பமே, கட்டாயத் தேவையாக அமைகிறது. ஆராய்ந்து பார்க்கும்போது, நத்தாசை என்ற தமிழ்ச்சொல் ஆனது பெயர்ச்சொல்லாக இருந்து வலுவான விருப்பம் அதாவது கட்டாயத் தேவையைக் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
நத்தாசை = வலுவான விருப்பம் > கட்டாயத் தேவை >>> Necessity
எனவே, Necessity என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் நத்தாசை என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக் காட்டு
(1) Help them in necessity = அவர்களுக்கு நத்தாசையில் உதவுக.
(2) He questioned the necessity for the change = மாற்றத்திற்கான நத்தாசையை அவன் கேட்டான்.
(இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்து என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்)

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.