தமிழ் இன்றி அமையாது ஆங்கிலம்
திருத்தம் பொன் சரவணன்
தமிழ் மூலச் சொற்கள் - பகுதி 2
Shortage / Shortfall
Shortage / Shortfall என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச் சொல்லாகப் பற்றாக்குறை, குறைபாடு போன்ற பொருட்களைக் குறிக்கும். சொத்தி என்ற தமிழ்ச் சொல்லுக்குக் குறைபாடு என்ற பொருளை அகராதி சுட்டுகிறது. ஆராய்ந்து பார்க்கும் போது, சொத்தி என்ற தமிழ்ச்சொல்லே பெயர்ச் சொல்லாக இருந்து பற்றாக்குறை, குறைபாடு ஆகியவற்றைக் குறித்து ஆங்கிலச் சொற்களுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
சொத்தி = குறைபாடு > பற்றாக்குறை >>> Shortage, Shortfall
எனவே, Shortage / Shortfall என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் சொத்தி என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு
(1) Shortfall of money = பணச் சொத்தி.
(2) Shortage for food = உணவுச் சொத்தி.
Scarcity / Scarceness
Scarcity / Scarceness என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச்சொல்லாகப் பற்றாக்குறை, குறைபாடு போன்ற பொருட்களைக் குறிக்கும். குறைச்சல் என்றதமிழ்ச் சொல்லுக்குப்பற்றாக்குறை என்ற பொருளை அகராதி சுட்டுகிறது. ஆராய்ந்து பார்க்கும்போது, குறைச்சல் என்ற தமிழ்ச்சொல்லே பெயர்ச்சொல்லாக இருந்து பற்றாக்குறை, குறைபாடு ஆகியவற்றைக் குறித்து ஆங்கிலச் சொற்களுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
குறைச்சல் = பற்றாக்குறை, குறைபாடு >>> Scarcity, Scarceness
எனவே, Scarcity / Scarceness என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் குறைச்சல் என்ற தமிழ்ச்சொல்லையே பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு
(1) Scarcity of food = உணவின் குறைச்சல்
(2) Scarceness of funds = பணக் குறைச்சல்.
Dearth
Dearth என்ற ஆங்கிலச் சொல்லானது பற்றாக்குறை, பஞ்சம் போன்ற பொருட்களைக் குறிக்கும். துராத்தியம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு வறுமை என்ற பொருளை அகராதி சுட்டுகிறது. ஆராய்ந்து பார்க்கும்போது, துராத்தியம் என்ற தமிழ்ச்சொல்லே பெயர்ச்சொல்லாக இருந்து வறுமை, பஞ்சம், பற்றாக்குறை ஆகியவற்றைக் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
துராத்தியம் = வறுமை, பஞ்சம், பற்றாக்குறை >>> Dearth
எனவே, Dearth என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் துராத்தியம் என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு
(1) A dearth of evidence = ஆதாரத் துராத்தியம்.
(2) A dearth of food = உணவுத் துராத்தியம்.
Affection
Affection என்ற ஆங்கிலச் சொல்லானது அன்பு, விருப்பம், துன்பம், நோய், தன்மை போன்ற பொருட்களைக் குறிக்கும். யாப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்கு அன்பு, பிணிப்பு, வலிமை, தகுதி ஆகிய பொருட்களை அகராதி சுட்டுகிறது. இவற்றில் பிணிப்பும் வலிமையுடனும் நோயுடனும் தொடர்புடையவை. அதாவது, பிணிப்பே பிணி ஆகிறது; வலிமையே வலி ஆகிறது. குணம் அல்லது தன்மையின் மறுபெயரே தகுதி ஆகும். ஆராய்ந்து பார்க்கும் போது, யாப்பு என்ற தமிழ்ச்சொல்லே பெயர்ச்சொல்லாக இருந்து அன்பு, நோய், குணம் ஆகியவற்றைக் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
யாப்பு = அன்பு, பிணிப்பு, வலிமை, தகுதி > அன்பு, விருப்பம், துன்பம், நோய், தன்மை >>> Affection
எனவே, Affection என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் யாப்பு என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு
(1) She has deep affection for her children = அவள் தன் குழந்தைகளின் மேல் ஆழ்ந்த யாப்பு கொண்டிருந்தாள்.
(2) A heart affection = இருதய யாப்பு.
Piety
Piety என்ற ஆங்கிலச் சொல்லானது பற்று, வழிபாடு ஆகிய பொருட்களைக் குறிக்கும். பத்தி என்ற தமிழ்ச் சொல்லுக்கு வழிபாடு, பற்று ஆகிய பொருட்களை அகராதி சுட்டுகிறது. ஆராய்ந்து பார்க்கும் போது, பத்தி என்ற தமிழ்ச்சொல்லே பெயர்ச் சொல்லாக இருந்து பற்று, வழிபாடு ஆகியவற்றைக் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
பத்தி = பற்று, வழிபாடு >>> Piety
எனவே, Piety என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் பத்தி என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு
(1) Her piety is quiet = அவளது பத்தி அமைதியானது.
(2) Extreme piety = மிதமிஞ்சிய பத்தி.
(இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்து என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்)

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.