தமிழ் இன்றி அமையாது ஆங்கிலம்
திருத்தம் பொன் சரவணன்
தமிழ் மூலச் சொற்கள் - பகுதி 3
Love
Love என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச்சொல்லாக காதல், அன்பு, ஆசை, காமம், விருப்பம், பத்தி, பூச்சியம் போன்ற பொருட்களையும் வினைச்சொல்லாக காதலி, விரும்பு, ஆசைப்படு, பத்திசெய் போன்ற பொருட்களையும் குறிக்கும். இதில் வரும் பூச்சியம் என்பது ஒன்றுமே இல்லாத அதாவது காற்றாடுகின்ற நிலையைக் குறிப்பதாகும்.
உலவை என்ற தமிழ்ச் சொல்லுக்குக் காற்று, ஆசை போன்ற பொருட்களை அகராதி சுட்டுகிறது. ஆராய்ந்து பார்க்கும் போது, உலவை என்ற தமிழ்ச்சொல் ஆனது வினைச்சொல்லாக இருந்து ஆசைப்படு, விரும்பு ஆகியவற்றையும் பெயர்ச்சொல்லாக இருந்து ஆசை, காதல், காமம், பத்தி, காற்றாடும் நிலை ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
உலவை = (1) ஆசை > விருப்பம், காதல், அன்பு, காமம், பத்தி, விரும்பு, காதலி, பத்திசெய்,
(2) காற்று > காற்றாடும் நிலை, வெறுமை, பூச்சியம் >>> Love
எனவே, Love என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் உலவை என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம். உளம்வை என்ற சொல்லையும் இதற்கு ஈடாகப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு
(1) I love you = நான் உன்னை உளம்வைக்கிறேன்.
(2) God's love = கடவுளின் உலவை
Desire
Desire என்ற ஆங்கிலச் சொல்லானது பெயர்ச்சொல்லாக விருப்பம், ஆசை, காமம் போன்ற பொருட்களையும், வினைச்சொல்லாக விரும்பு, ஆசைப்படு போன்ற பொருட்களையும் குறிக்கும். நசை என்ற தமிழ்ச் சொல்லுக்கு விரும்பு, ஆசை, காமம் போன்ற பொருட்களை அகராதி சுட்டுகிறது. ஆராய்ந்து பார்க்கும் போது, நசை என்ற தமிழ்ச்சொல் ஆனது வினைச்சொல்லாக இருந்து விரும்பு, ஆசைப்படு ஆகியவற்றையும் பெயர்ச்சொல்லாக இருந்து விருப்பம், ஆசை, காமம் ஆகியவற்றையும் குறித்து ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக விளங்குவதை அறியலாம்.
சுருக்கமாக,
நசை = விரும்பு, விருப்பம், ஆசை, காமம் >>> Desire
எனவே, Desire என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் நசை என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு
(1) He desired your beauty = அவன் உன் அழகை நசைந்தான்.
(2) A desire for independence = விடுதலைக்கான நசை
Prefer / Preference
Preference என்ற ஆங்கிலச் சொல்லானது விருப்பம், தெரிவு போன்ற பொருட்களையும் Prefer என்ற ஆங்கிலச் சொல்லானது விரும்பு, தேர்ந்தெடு போன்ற பொருட்களையும் குறிக்கும். விருப்பமேத் தேர்ந்தெடுத்தலின் அடிப்படை ஆகும். ஆராய்ந்து பார்க்குமிடத்து, தமிழில் விரும்பு என்பது வினைச்சொல் ஆகவும் விருப்பம் என்பது பெயர்ச்சொல் ஆகவும் அமைந்து மேற்கண்ட ஆங்கிலச் சொற்களுக்கு மூலமாக வருவதை அறியலாம்.
சுருக்கமாக,
விரும்பு, விருப்பம் >>> Prefer / Preference
எனவே, Prefer / Preference என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக, அதன் மூலமாக விளங்கும் விரும்பு / விருப்பம் என்ற தமிழ்ச்சொல்லையேப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு
(1) What is your preference in study? = படிப்பில் உன் விருப்பம் என்ன?
(2) I prefer to go home = நான் வீட்டிற்குப் போக விரும்புகிறேன்.
(இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்து என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.