1925 ஆம் ஆண்டில் ஆர்பிடியின் நான்கு பிரிவுகளை முதன் முதலில் உருவாக்கியவர் டாக்டர் எட்வர்ட் கென்னடி.
1. இருபக்கக் கடைசிப் பற்கள் பொருத்தல் (Bilateral Free Ended Partially Edentulous)
2. ஒரு பக்கக் கடைசிப் பல் பொருத்தல் (Unilateral Free Ended Partially Edentulous)
3. ஒரு பக்க ஒரு குறிப்பிட்ட பல் மட்டும் பொருத்தல் (Unilateral Edentulous with Natural Teeth Remaining Both Anterior and Posterior to it)
4. இருபக்க முன்பகுதி பல் பொருத்தல் (Bilateral Bounded Anterior Partially Edentulous)
இந்த நான்கு பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு எதாவது ஒரு பல் இல்லாத பகுதி இருந்தால் அதனை Modification Space என்பர்.
மேற்காணும் முதன்மையான நான்கு பிரிவுகள் பல் மருத்துவ மக்களிடையே மிக சிறப்பான தகவல் தொடர்பை ஏற்படுத்துகிறது.
சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில்,
* 3 வது பிரிவிலான பிரச்சனை மேல்தாடை வளைவு (Maxillary Arch) 67.2 சதவீதமும், கீழ்த்தாடை வளைவு (Mandibular Arch) 64.1 சதவீதமும் காணப்படுகின்றன.
* 2 வது பிரிவிலான பிரச்சனை மக்களுக்கு மேல்தாடை வளைவு (Maxillary Arch) 16.3 சதவீதமும், கீழ்த்தாடை வளைவு (Mandibular Arch) 14.8 சதவீதமும் காணப்படுகின்றன.
* 3 வது பிரிவில் கட்டுப்பல் 31 முதல் 40 வயதினரிடையே அதிகமாகக் காணப்படுகிறது. 1 வது பிரிவும், 2 வது பிரிவும் 41 முதல் 50 வயதினரிடத்தில் அதிகம் காணப்படுகின்றன.
* பகுதி கட்டுப்பல் கட்டுவதற்கு முன் பல் மருத்துவர் முழுமையான வாய் பரிசோதனை செய்திட வேண்டும். மற்ற ஆரோக்கியமான பற்களின் நிலையை உறுதி செய்ய வேண்டும்.
முழுமையான வாய் பரிசோதனைக்கு எக்ஸ்ரே உதவும்.
பற்களுக்கான குரல்கள்
*சுகாதாரத்தைச்
செய்து விடாதீர்கள்
விவாகரத்து!
* பிரமாண்டமாய் செட் போடும்
கலை இயக்குனருக்குப்
பொருந்தவில்லை
எந்தவொரு பல்செட்டும்.
- ரிஷிவந்தியா
|
செயற்கைப் பல் கட்டுவதில் மூன்று நிலைகள் மிக முக்கியம்.
1. ஆதாரம் (Support)
2. ஸ்திரதன்மை (Stability)
3. பிடிமானம் மற்றும் தக்கவைத்தல் (Retention)
செயற்கைப் பல் என்பது, கீழ்க்கண்ட ஏதாவது ஒரு பொருளினால் செய்யப்பட்டதாக இருக்கலாம்.
1. பீங்கான் (Porcelain) - உறுதியானது நிலைத்தன்மை கூடியது இயற்கைப் பல் போல தோற்றமளிக்கும். விலை உயர்ந்தது. பீங்கான் செயற்கைப் பற்களில் பல வகை உண்டு.
2. ரெஸின் மற்றும் கனிமநிரப்பி இணைந்த பல்போர்வை
3. ஒளிரும் பல்போர்வை
4. இடையண்ண பல்போர்வை
5. லித்தியம் டைசிலிகேட்
6. சீரி அண்ட் சிரோனா
7. ஜிர்கோனியம் பல்போர்வை
8. இமேக்ஸ் பல்போர்வை
9. உடனடி பல்போர்வை
10. பாரம்பரிய பல்போர்வை
11. அழுத்தப்பட்ட செராமிக்
12. ஸ்டார்ச்டு செராமிக்.
செயற்கைப் பல்லானது நான்கு பாகங்களை கொண்டது.
1. கட்டுப்பல்லின் அடிப்பகுதி (Denture Base)
2. கட்டுப்பல்லின் தட்டையான விளிம்பு (Denture Flange)
3. கட்டுப்பல்லின் பல் பகுதி (Denture Teeth)
4. கட்டுப்பல்லின் எல்லைகள் (Denture Border)
செயற்கைப் பல்லை முழுமையாகச் சொல்ல வேண்டுமெனில், கீழ்க்கண்ட பாகங்களையும் விவரிக்க வேண்டும்.
* தவறிய இயற்கைப் பல்லுக்கு பதிலாக செயற்கைப் பல்
கட்டுப்பல்லை நிறுத்தும் நிலை நிறுத்தியில் கழற்றி மாட்டும் நிலை நிறுத்தி, நிரந்தர நிலை நிறுத்தி என இருவகை உண்டு. கழற்றி மாட்டும் நிலை நிறுத்தியை மேல் பல்லுக்கும் நிரந்தர நிலை நிறுத்தியை கீழ்பல்லுக்கும் பொருத்தலாம்.
செயற்கைப் பல் சரியாக பொருந்த 4 முதல் 6 மாதங்கள் ஆகலாம்.
* பிளாஸ்டிக் நிலை நிறுத்திகள்.
உலோக இழை நிலை நிறுத்திகள் (தாமிரம், நிக்கல், டைட்டானியம் அல்லது கூட்டுக் கலவை) நிலை நிறுத்திகளை நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
மெல்லும் போது பேசும்போது கட்டுப்பல் பழைய நிலைக்குச் சாய்ந்து விடும்.
நிலை நிறுத்தி பொருத்திய பின் 1, 3, 6, 11, 24 மாதங்களில் மீண்டும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இணைப்பான்கள் (Connecters) ஒரு பக்கக் கட்டுப் பல்லின் வளைவை இன்னொரு பக்கம் இணைக்க உதவுகிறது. மூன்று வகை இணைப்பான்கள் உள்ளன. அவை;
1. இணையச்சுவட இணைப்பான்கள் (Coaxial Cable Connecters)
2. முறுக்கப்பட்ட ஜோடி கம்பிவட இணைப்பான்கள் (Twisted Pair Cable Connecters)
3. ஒளியிழை வட இணைப்பான்கள் (Fibreoptic Cable Connecters With Twisted Pair)
வயதானவர்கள் முறுக்கு, சீடை சாப்பிடலாமா?
ஆர்.ஜி. கன்னியப்பன், கடலூர்.
சிறு வயதில் நாங்கள் பல தங்கப் பல்காரர்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது தங்கப்பல் கட்டியவர்கள் யாரையும் பார்க்க முடியவில்லையே. தங்கப்பல் கட்டுதல் நாகரீகமில்லாமல் போய்விட்டதா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
தங்கப்பல்லானது, பல் மருத்துவர் தரும் வடிவக் குறிப்புகளைக் கொண்டு பொற்கொல்லரால் உருவாக்கப்படுகிறது. தங்கப்பல் உறுதி வாய்ந்தது, கெடாது. தேவையில்லையெனில் நல்ல விலைக்குத் திரும்ப விற்று விடலாம் என தங்கப்பல் கட்டியவர்கள் கருதுகின்றனர். துபாயைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் செலவில் 24 காரட் பத்து கிராம் தங்கத்தில் 160 வைரங்கள் பதிக்கப்பட்ட செயற்கைப் பல் செட் தயாரித்துள்ளார்.
இப்போதைய மக்கள் தங்க செயற்கைப் பல்லின் மஞ்சள் நிறத்தை விரும்புவதில்லை. சிலர் தங்கத்திற்குப் பதில் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொள்கின்றனர். பல் அலங்கார ரீதியாய் பீங்கான் (போர்செலின்) செயற்கைப் பற்களே அதிகம் பொருத்தப்படுகின்றன. செயற்கைப் பல்லைக் பொருத்த வரை, பீங்கான் செயற்கைப் பல்லேச் சிறப்புடையது.
|
பல்சேணம் (Saddle) கடிக்கும் போது செயற்கைப் பல்லின் மீது ஏற்படும் அழுத்தத்தை மடை மாற்ற உதவும்.
* கட்டுப்பல்லின் அஸ்திவாரம் (Denture Base)
இது அக்ரிலிக் மற்றும் ரெசின் என்கிற பொருளால் செய்யப்பட்டது. இந்த அஸ்திவாரம் பொருத்திய இடத்தில் கட்டுப்பல்லை நங்கூரமிட உதவும்.
மற்ற திசுக்களுடன் தொடர்புடைய பகுதி (Impression Surface)
செயற்கைபல் பொருத்தப்பட்ட பகுதி (Occlusal Surface)
செயற்கைப்பல் கட்டுவது குறித்த மேலும் பல தகவல்களை அடுத்தப் பகுதியிலும் பார்க்கலாம்.