இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


19. செயற்கைப் பல் - தெரிந்து கொள்ள வேண்டியவை!

செயற்கைப் பல் கட்டுவதில்,

1. மரபு வழியிலான மற்றும் சிக்கன முறையில் செயற்கைப் பல் கட்டுதல்.

2. விலையுயர்ந்த நவீனமான செயற்கைப் பல் கட்டுதல்

என்று இரண்டு முறைகள் உள்ளன.

1. மரபு வழியிலான மற்றும் சிக்கன முறையில் செயற்கைப் பல் கட்டுதல்.

இவ்வகைச் செயற்கைப் பல்லுக்கு போர்சலின் அல்லது அக்ரிலிக் பயன்படுகிறது. பாரம்பரிய முறையில் பொருத்தப்படும் செயற்கைப் பற்கள், இயற்கைப் பல் அமைப்புடன் நூறு சதவீதம் ஒத்துப் போவதில்லை. இந்த வகைச் செயற்கைப் பற்கள் ஈறு திசுகளைப் பாதிக்கக்கூடும். பல் சுகாதாரம் சீர்கெடக் கூடும். சில வகை உணவுகளைக் கடித்து மென்று தின்ன இவ்வகை செயற்கைப் பற்கள் உதவியாக இருக்காது. மரபு வழியிலான செயற்கைப் பற்கள் ஐந்து வருடங்கள் வரை மட்டுமேப் பயனுடையதாக இருக்கும்.

2. விலையுயர்ந்த நவீனமான செயற்கைப் பல் கட்டுதல்

நவீனமான செயற்கைப் பற்கள் கட்ட லூசிடோன் 199 அக்ரிலிக் பயன்படுத்தப்படுகிறது. நவீனச் செயற்கைப் பற்கள் 16 வகை பல் நிறங்களுடன் ஒத்து போகின்றன. நவீனச் செயற்கைப் பல் கட்டுதலில் நெகிழ்வு சோர்வு ஏற்படாது. எவ்வகை உணவையும் மெல்லலாம், கடிக்கலாம். நவீனச் செயற்கைப் பற்கள் 15 வருடங்கள் நீடித்து உழைக்கும். மரபு வழியிலான செயற்கைப்பல் விலையை விட மூன்று மடங்கு விலை அதிகம்.

செயற்கை பல் கட்டுவதற்கு முடிவு செய்த பின்பு, நாம் நான்கு கேள்விகளைக் கேட்க வேண்டும்.

1. இந்த வகைச் செயற்கைப் பற்கள் நெகிழ்வு சோர்வை (Flexural Fatigue) தடுக்குமா?

2. இந்த வகைச் செயற்கைப் பற்கள் தனிப்பட்ட நோயாளியின் முழுமையான பல் தேவையை நிறைவேற்றுமா?

* இயற்கைப் பல் போல் தோற்றத்திலும் உறுதியிலும் திகழச் செயற்கைப் பற்களில் என்ன செயல்முறை நிறைவேற்றப்பட்டுள்ளது?

* செயற்கைப் பல் அமைக்க தரமான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா?

பற்களுக்கான குரல்கள்
** பல் சுகாதாரத்தைச்
செய்து விடாதீர்கள்
விவாகரத்து!

* இப்போதெல்லாம் இனிக்கிறது
உதடு கடிக்கும் முத்தத்தை விட
லிப்ஸ்டிக்!
- ரிஷிவந்தியா


செயற்கைப் பல் தயாரிப்பதற்கான சில முன்னேற்பாடுகள் இருக்கின்றன. அவை;

1. ஆரம்ப கட்ட அச்சு முத்திரையை நோயாளின் வாயிலிருந்து எடுத்தல். (Pouring the Model)

2. ஆரம்பக்கட்ட வழக்கமான தட்டையும், கடி விளிம்புகளையும் ஒருங்கிணைத்தல். (Fabrication od Preliminary cast Custom Tray and Bite Rims)

3. குயோஸ் முகp பகுப்பாய்வி பயன்படுத்துதல். (Kois Facial Analyser)

4. வழக்கமான தட்டு அச்சுபதிவு கடி விளிம்பு அளவெடுத்தல் (Model Articulation)

5. இயற்கைப் பல்லுடன் செயற்கைப் பல்லை வரிசை அமைத்து நிலை நிறுத்துதல்.(Arrangement and Setting Teeth)

6. ஈறு வரையறைகளை மெழுகுதல் (Waxing)

7. பூச்சுப் பலகைப் பாதுகாப்பு (Flasking)

8. அக்ரிலிக்கை கலத்தல் (Mixing with Acrylic)

9. அக்ரலிக்கை அழுத்துதல் (Acrylic Pressing)

10. செயற்கைப்பல் கட்டுவதை முழுமை செய்தல்(Finishing the Dentire)

11. செயற்கைப் பல்லை நகாசு செய்தல்.(Polishing Denture)

செயற்கைப்பல், நீளம், அகலம், உயரம் என்று மூன்று பரிமாணங்களில் அமைக்கப்பட வேண்டும்.

வாயையும் தாடையையும் அளக்க வேண்டும். அத்துடன் ஈறு மற்றும் பற்களின் அச்சுக்களை வார்த்தெடுக்க வேண்டும். கட்டப்பட்ட செயற்கைப்பல் ஆறு திசைகளில் அசைய அனுமதிக்கப்பட வேண்டும். அசைவு எலும்பு, தசை, மென்திசு பொறுத்தே அமையும்.

குயோஸ் பல் மற்றும் முகp பகுப்பாய்வி (சுருக்கமாக ஆங்கிலத்தில் (KDFA) என்பது பல் மருத்துவரின் ஒரு கருவி. இக்கருவி பல் பிரச்சனைகளை மதிப்பீடு செய்வதற்கும் சிகிச்சை செய்வதற்கும் பயன்படுகிறது.


இக்கருவியின் பயன்பாடுகளாக,

* நோயாளியின் முகத்துடன் பற்களை அழகுணர்ச்சி நோக்கத்துடன் பதிவு செய்கிறது. (Register Teeth to the Face)

* சராசரி அச்சில் பற்கள் அசையப் பதிவு செய்கிறது (Register Teeth to an Average Axis)

* பற்சேர்க்கை அமைப்பை உறுதி செய்தல். (Capture Occulusal Plane)

* முகப் பரிமாணங்களை மதிப்பீடு செய்தல். (Evaluate Facial Proportions)

* உதட்டு நரம்பு நார் பகுதியை அளத்தல் (Measur Lip Commissures)

* மேல்தாடை வார்ப்புகளை மையப்படுத்துதல். (Mount Maxillary Casts)

* இக்கருவியுடன் உலோகப் பகுப்பாய்விவில் இரு வளைந்த பாகங்கள் துணைக் கருவியும் (Metal Analyser Bow Match)

* செங்குத்து காட்டி கம்பி சேர்ப்பு துணை கருவி (Vertical Indicator Rod Assembly)

* இருபது உபயோகித்து எறியும் குறியீட்டு தட்டுகள் (20 Disposable Index Trays)

இருக்கின்றன.




செயற்கைப் பற்கள் கட்டுவதற்கான தோராய செலவுகள் என்று,

* ஒவ்வொரு தாடைக்கும் முழு பற்கள் கட்ட, பத்தாயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை செலவாகும்.

* பகுதி செயற்கைப் பல்லுக்கு 9 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை செலவாகும்.

* தனி ஒரு செயற்கைப்பல்லுக்கு 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை ஆகும்.

* பல் பதியம் சார்ந்த செயற்கைப் பல்லுக்கு 60000 முதல் 2 லட்ச ரூபாய் வரை செலவாகும்.

பல் மருத்துவக் காப்பீடுகளில் பல வகை உண்டு. சிலவகை காப்பீடுகள் முழு பல் மருத்துவச் செலவுக்கும் பொறுப்பேற்கிறது.

பல் மருத்துவமனைகளில் தவணை முறையில் செலுத்தும் வசதியும் தரப்படுவதுண்டு.

ஒரு பல் மருத்துவரைச் செயற்கை பல் கட்ட அணுகும் முன் கவனிக்க வேண்டியவை.

* பல் மருத்துவர் பல் மருத்துவர்களுக்கான குழுவில் பதிவு செய்து கொண்ட மருத்துவரா?

* செயற்கைப் பல் கட்டுவதில் போதிய அனுபவம் பெற்றவரா?

* பல் மருத்துவர் கட்டணத்தில் ஏதேனும் தள்ளுபடி அல்லது தவணை முறையில் செலுத்தும் திட்டம் வைத்திருக்கிறாரா?

செயற்கைப்பல் கட்டுவதில் கீழ்க்கண்ட பக்க விளைவுகள் ஏற்படலாம்.

* மிகுதியான எச்சில் ஊறுவதால் பேச்சில் குளறுபடி ஏற்படலாம்.

* உணவை மெல்லவும் உண்ணவும் கடினமாக இருக்கலாம். சில சமயம் செயற்கைப் பல் கழன்று விடலாம்.

* உணவின் சுவை அல்லது ருசியை நாக்கு உணராது.

* வாய்ப்புண் அல்லது உதடு வெடிப்பு.

* உள்வாய் சிவந்து வீங்கும்.

* தலைவலி காதுவலி.

* நைவு ஆழ்கீற்று அல்லது பல் கூச்சம்.

* எலும்பு இழப்பு.

* உணவு செயற்கைப் பல்லுக்கு அடியில் சிக்கிச் சிதைந்து போகுதல்.

* நிரந்தரமாய்ப் பொருத்தப்பட்ட செயற்கைப் பல்லில் நெகிழ்வு தன்மையும் தகவமை திறனும் குறைவு.

* உலர்வாய் ஈறு வீக்கம்.

* வாயழற்சி.

* தாழ்வு மனப்பான்மை.

* வயோதிகம் ஆனது போன்ற மனப்பிரமை.

வன்முறையாளர்களுக்கு பல் மருத்துவம் பார்க்கலாமா?

ஜெஸிமா பானு, தென்காசி

தெருவில் அடிதடி வன்முறை நிகழ்த்தி அதில் பற்களை இழந்து ரத்தம் சொட்டச்சொட்ட யாராவது உங்கள் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பீர்களா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

அந்த வன்முறையாளரால் நமக்கோ நம் மருத்துவமனைக்கோப் பிரச்சனை வரும் என்றால் அவர்களை அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. இருப்பினும், அவர்கள் அமைதியாக இருந்தால் முதலுதவி செய்யலாம். அதன் பிறகு, அவரையேக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கச் சொல்லலாம். அவர் மறுத்தால், நாமேக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் அல்லது முன்னெச்சரிக்கையாக அவர்களை அரசு மருத்துவமனைக்குப் போகச் சொல்லி அமைதியாய் வலியுறுத்தலாம். பாதிக்கப்பட்டவர் காவல்துறைக்கு முறைப்படி புகார் செய்து, புகார் ரசீது கொண்டு வந்த பின்பு, அவருக்கு முழுமையான பல் மருத்துவம் செய்யலாம். இங்கு சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசிதமாய் நடந்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.



இங்கு நாம், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் உடலானது எந்தவொரு மாற்றுப் பொருட்களையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளாது. உறுப்புகள் தானத்தில் கூட உடல் ஏற்றுக் கொள்ள தகுந்த மருத்துவம் செய்வர். மனித மனம் உலகின் எல்லா நிலைகளிலும் நெகடிவ் பாசிடிவ் ரோல் வகிக்கிறது. செயற்கைப்பல்லை மனம் பழக ஓரிரு மாதங்கள் ஆகும். அதுவரை செயற்கைப்பல் பொருத்தப்பட்டவர்கள் கண்ணாடி முன் நின்று பற்களைப் பலவிதமாய்ச் சோதிப்பர். தனக்குப் பிடித்த பல பெயர்களை உச்சரித்து பார்ப்பர்.

* ‘ரங்கராஜ்’ என்கிற பெயரை ‘லங்கராஜு’ என்றுதான் உச்சரிப்பர்.

* ‘கிருஷ்ணமூர்த்தி’யை ‘கிஷ்னமூழ்த்தி’ என்று தான் உச்சரிப்பர்.

எல்லாம் கொஞ்ச நாள் பயக்க வயக்கம்தான் ஹிஹி… பழக்க வழக்கம்தான்...!

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p19.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License