ஒரு பெண் பிறந்தநாள் கொண்டாடினாள். அங்கு அவளுக்கு விநியோகிக்கப்பட்ட காபி நறுமணம் கொண்ட சாக்லேட்டில் யாரோ ஒருவருடைய செயற்கைப் பற்கள் ஒளிந்து கிடந்திருக்கிறது. பொது இடங்களில் முதியோர்களின் செயற்கைப் பற்கள் கழன்று விழுவது பெருத்த அவமானம். அகவை முதிர்ந்தவர்கள் பிறந்தநாள் கொண்டாடும் போது, கேக்கின் மேலிருக்கும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைப்பர். அப்படி ஊதி அணைக்கும் போதுதான் செயற்கைப் பற்கள் கழன்று விழுந்து விடுகின்றன.
உலகத்தின் தலைச்சிறந்த இயற்பியல் அறிவியலாளர் சர் ஐசக் ந்யூட்டனின் ஒரு பல் கி.பி 1816 ஆம் ஆண்டில் 3633 அமெரிக்கன் டாலர் விலைக்கு விற்கப்பட்டது. விற்கப்பட்ட பல்லை மோதிரமாகச் செய்து 62,000 அமெரிக்கன் டாலருக்கு விற்றுள்ளனர். விலை அதிகம் கொண்ட பல் மோதிரம் அது.
மற்றுமொரு தகவல். ஒரு சிறுவனுக்கு தாடை வலி வந்திருக்கிறது. மருத்துவரிடம் காட்டப் போனான். அவன் வாயைத் திறந்து பார்த்த மருத்துவர் அதிர்ந்து போனார். சிறுவனின் வாயில் 526 குட்டிக்குட்டிப் பற்கள் இருந்தன.
பிரான்ஸின் லா சென் கல்லறை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தின் வாயில் இரும்பு முள் வைப்பு இருந்தது. தங்கப்பல் பொருத்தி இருந்திருக்கிறாள் அந்தப் பெண். கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் காக்கஸஸ் பகுதிகளிலும் செல்வந்தர்கள் தங்கப்பல் பொருத்தி இருந்திருக்கிறார்கள். தங்கத்தாலான செயற்கைப் பல் செல்வத்துக்கும் அதிகாரத்துக்குமான ஒரு குறியீடாக இருந்திருக்கிறது. பண வசதியுடையவர்கள் நலமாக இருந்த பற்களைக் கூட அகற்றிவிட்டு தங்கப்பல் பொருத்திக் கொண்டனர்.
நெல்லி எனும் ராப் பாடகர் ‘கிரில்ஜ்’ என்கிற பற்கள் தொடர்பான நையாண்டிப் பாடலை பாடியுள்ளார்.
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் மிகச்சிறந்த ஜனாதிபதிதான். ஆனால் அவர் முகத்தை உம்மென்றுதான் வைத்திருப்பார். காரணம், அவரைச் சிறு வயதில் இருந்து பல் வலி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. அவர், மரத்தாலான செயற்கைப் பல் கட்டிக் கொண்டிருந்தார் எனக் கூறுவர். ஆனால், வரலாற்று ஆய்வாளர்கள், அதனை பொய் என உறுதிப்படுத்துகின்றனர். வாஷிங்டன், மனிதப்பல், பசுப்பல், குதிரைப் பல், யானைத் தந்தம், வெள்ளி, செம்பு, பித்தளையில் செயற்கைப் பல் கட்டிக் கொண்டார் என்றும் சொல்வதுண்டு.
உலகின் கிழக்குப் பகுதியில் மரத்தாலான செயற்கைப் பல் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஜப்பானியக் கைவினைஞர்கள் தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டு, மரத்தாலான செயற்கைப் பற்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். தேன் மெழுகு கொண்டு செயற்கைப் பற்களுக்கான அளவை வார்த்தெடுத்திருக்கின்றனர்.
மரத்தாலான செயற்கைப் பற்கள் 14 ஆம் நூற்றாண்டில் வ்ழக்கத்தில் இருந்திருக்கின்றன. கி.பி 1700 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் யானைத் தந்தத்தாலான செயற்கைப் பற்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. யானைத் தந்தம், நீர் யானைப் பற்கள், கடற்குதிரை தந்தம் முதலியவை செயற்கைப் பற்கள் உருவாக்கக் கட்டப் பயன்பட்டிருக்கின்றன. கீழ்த்தாடைக்கு ஒன்று, மேல்தாடைக்கு ஒன்று என இரு வகையான செயற்கைப் பற்கள் தயாரித்துப் பொருத்தியிருக்கின்றனர். செயற்கைப் பற்கள் பொருத்த, பியானோ கட்டு கம்பிகள், பட்டு நூல்கள் போன்றவைகளைப் பயன்படுத்தி இருந்திருக்கின்றனர்.
பற்களுக்கான குரல்கள்
**பிடித்தேன்
மனிதர்களை
மனிதநேய புன்னகையை வீசி!
* சிந்தும் புன்னகை
இரு உள்ளங்கை குவிப்பில்
ததும்புகிறது சிநேகம்.
- ரிஷிவந்தியா
|
யானைத் தந்தத்தாலான செயற்கைப் பற்களில் சில குறைபாடுகளும் இருந்திருக்கின்றன. ஆம், இந்தச் செயற்கைப் பற்களைச் சுத்தம் செய்வது மிகவும் கடினம். இவ்வகையான செயற்கைப் பற்கள் எளிதில் சிதைந்து நலிவுறுகின்றன. வாய் நாற்றமெடுக்கும். இருப்பினும் பணக்காரர்கள், தங்களிடமிருக்கும் பணத்தின் பெருமையினைப் பற்களின் வழியாகக் காட்ட இந்த நாற்றம் கொண்ட யானைத் தந்தத்திலான செயற்கைப் பற்களுடன் வலம் வந்திருக்கின்றனர். இதில் வேடிக்கையாக, தனக்குத் தேவையான செயற்கைப் பற்களுக்காக, பிறரது பற்களை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
கி.மு 2500 ஆம் ஆண்டில் எகிப்தியர்களும் எட்ரஸ்கன்களும் இறந்தவர்களின் பற்களை எடுத்துக் செயற்கைப் பற்களைத் தயாரித்துப் பயன்படுத்தி இருக்கின்றனர். குதிரை, பசு போன்ற விலங்கினங்களின் பற்களும் செயற்கைப் பற்களாக மாற்றம் செய்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1800 ஆம் ஆண்டுகளில், பிரஞ்ச் கடை வீதிகளில், போர்க்களங்களில் இறந்து கிடக்கும் வீரர்களின் பற்களை எதிரி வீரர்கள் பிடுங்கிப் பயன்படுத்தி இருக்கின்றனர். கூர் முனைப்பல், கோரைப்பல், கடைவாய்பல் என்று இறந்த வீரர்களின் பற்களைத் திருடியிருக்கின்றனர். இது போன்ற பற்கள் சிறப்பானவையாக இருந்திருக்கின்றன. நெப்போலியன் தோற்ற வாட்டர் லூ போரில் பல் திருட்டு பயங்கரமாய் நடந்தேறி இருக்கிறது. அதனால் வாட்டர்லூ போரை, வாட்டர்லூ பல் போர் என்றேக் கூறலாம்.
இதேப் போன்று, மோசமான செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொண்ட சில தகவல்களும் இருக்கின்றன.
ஆஞ்சி பார்லோ என்பவர் தொழில் முறையில், பிரச்சனை தீர்வாளர் பணி செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு பிரிட்டிஷ் பெண்மணி. அவருக்குப் பற்கள் விழுந்து கொண்டிருந்தன. மருத்துவம் செய்து கொள்ள தகுந்த பல் மருத்துவரிடம் செல்லாமல் சயனோ அக்ரிலேட் வகை பிசினை வைத்துப் பற்களை ஒட்ட வைத்தார். அவரிடம், நீங்கள் ஏன், பல் மருத்துவரிடம் சென்று உங்கள் பல் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை என அவரிடம் கேட்கப்பட்டது.
அசைவம் சாப்பிடுபவர்களுக்குப் பல் பாதிப்பு அதிகமாகுமாமே...!
ஆர் பத்மகுமார் ஷோரனூர்
அசைவம் உண்பவர்களுக்கு பற்கள் நாற்பது வயதில் விழுந்துவிடும். ஆனால், சைவ உணவு உண்பவர்களுக்கு எண்பது வயதானாலும் பல் விழாது என்கிறார்களே, இது உண்மையா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
அசைவம் சாப்பிடுபவர்கள் எலும்பு உள்ளிட்ட இறைச்சியின் கடினமான பாகங்களைக் கடிப்பார்கள். அதனால், மாமிசங்களின் தசைநார்கள் பற்களுக்கு இடையேச் சிக்கி விடும். அசைவ உணவு பற்களின் பாதுகாப்புக்கு ஒரு சவால்தான். அசைவம் சாப்பிடும் பல முதியவர்களின் பற்கள் விழாமல் வலுவாக இருப்பதையும் நாம் அறிவோம். சைவமோ, அசைவமோ பற் சுத்தம் என்பது மேலானது. ஆனால், அதைவிட மேலானது, ‘பல் பராமரிப்பு’. சுத்தம் செய்தலைச் சரியாகச் செய்வதுடன், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சிறந்த பல் மருத்துவரிடம் பல்லைப் பராமரித்துக் கொண்டால், அசைவம் சாப்பிட்டும் பற்களைப் பாதுகாக்கலாம்...
|
அதற்கு அவர், ஒரு தடவை பார்லோவின் அம்மா, அவருடைய சொத்தைப் பல்லை அகற்றப் பல் மருத்துவரிடம் போயிருக்கிறார். பல் மருத்துவர் பார்லோவின் அம்மாவுக்கு தொண்டைப் புற்றுநோய் என அறிவித்திருக்கிறார். தொடர்ந்து பார்லோவின் அம்மா அவரது 34 வது வயதில் இறந்து போயிருக்கிறார். தானும் பல் மருத்துவரிடம் போனால், தனக்கும் தொண்டை புற்று நோய் இருப்பதாகப் பல் மருத்துவர் அறிவித்து விடுவாரோ என பார்லோ பயந்தார்.
தொடர்ந்து பார்லோ தனது பற்களை ஒட்ட சயனோ அக்ரிலேட் பிசின் பயன்படுத்தி இருக்கிறார். அதனால் பல் பிரச்சனைகள் தீவிரமாகி அவரது மேல்தாடை எலும்புகள் 90 சதவீதம் சேதமடைந்து போயின. ஒரு கட்டத்தில் அவரது 48 வது வயதில் பார்லோ பல் மருத்துவரைச் சென்று பார்த்திருக்கிறார்.
பல் மருத்துவர்கள் அவர் வாய்க்குள் அடைந்து கிடந்த சயனோ அக்ரிலேட் பிசினை முழுமையாக அகற்றி உள்ளனர். டைட்டானியம் செயற்கை பல் உள் வைப்புகளை பொருத்தி அவரது புன்னகைக்கு நிரந்தர வழி ஏற்படுத்தி தந்துள்ளனர்.
படித்தவர்களுக்கு இடையேயும் பல் நலம் பற்றிய அறியாமை இருக்கத்தான் செய்கிறது.
கனடிய வேட்டைக்காரர் பிரான்சிஸ் வார்டன் ஒரு மானை வேட்டையாடி உள்ளார். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப்பகுதியில் வசித்த இவர் பல் மருத்துவரிடம் செல்ல விரும்பவில்லை. தான் வேட்டையாடிய மானின் பற்களில் இருந்து ஒரு செயற்கைப் பற்களைத் தயாரித்து கட்டிக் கொண்டார். 1950 முதல் 1960 வரை, அந்தச் செயற்கைப் பற்களுடன்தான் செயல்பட்டார். அந்தச் செயற்கைப் பல்லை வாயில் ஒட்ட வீட்டு பயன்பாட்டுச் சிமென்ட்டைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். மூன்று வருட மான் பல்செட் பயன்பாட்டுக்கு பிறகு அதனை விட்டெறித்தார். அதன் பிறகு, பல் மருத்துவரிடம் சென்று, செயற்கைப் பற்களைக் கட்டிக் கொண்டார். வார்டன் பயன்படுத்திய மான் பற்களிலான செயற்கைப் பற்கள் இப்போது கிங்ஸ்டன் மேம்பாடு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.