அல்ட்ராஸோனிக் ஸ்கேனிங் கருவிகள் வருவதற்கு முன் பல் மருத்துவர்கள் கைகளால் இயங்கும் கருவியினை வைத்துத்தான் பற்காரைகளையும் பற்களில் படர்ந்திருக்கும் சீமைச் சுண்ணாம்பு போன்ற படிவுகளையும் அகற்றினர்.
1. அரிவாள் வடிவம் கொண்ட பற்சுத்தப்படுத்திகள் (Sickle Scalers)
* கூர்மையான நுனியும் கத்தரிக்கும் முனைகளும் கொண்ட கருவி.
* இருவகையான பற்காரைகள் உள்ளன.
* ஈறுகளுக்கு மேலே தென்படும் பற்காரையான சுப்ராஜிஞ்சிவல் கால்குலஸ்.
* ஈறுகளுக்கு கீழே படிந்திருக்கும் பற்காரையான சப்ஜிஞ்சிவல் கால்குலஸ்.
* அரிவாள் வடிவ சுத்தப்படுத்தி ஈறுகளுக்கு மேலான பற்காரைகளை அகற்றுகிறது.
2. க்யூரெட்ஸ் (Curettes) எனப்படும் சுரண்டும் சிறுகருவி
* வட்டவடிவ நுனி கொண்டது.
* ஈறுகளுக்கு அடியே ஒளிந்திருக்கும் பற்காரைகளை இது அகற்றும்.
பல் கவிதை
* ப்ளூரைடு முத்தம்
மென்தால் முத்தம்
பென்சோகெய்ன் முத்தம்
கிராம்பு முத்தம்
சார்பிடால் முத்தம்
எதுவும் தேவையில்லை
தாய்ப்பாலும் உமிழ்நீரும்
திரவப்பின்னல் செய்த
என் தலைச்சன் ஆறுமாத
மகளின் பவளவாய் முத்தம்
போதுமே சொர்க்கவாசல் திறக்க
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
3. பைல்ஸ் (Files)
* ஒன்றுக்கும் மேற்பட்ட பிளேடுகள் கொண்டு பற்காரையைப் போக்கும்.
* பற்களின் மேற்பரப்பை நகாசு பண்ணும்.
4. மண்வெட்டி வடிவ ஹோஸ் (Hoes)
* உளி போன்ற வடிவம் கொண்டது.
* ஆழமான குறுகிய பகுதிகளில் காணப்படும்.
* பற்காரைகளை அகற்றும்.
5. உளி வடிவ கருவி (Chisel)<
* தட்டையான மற்றும் கூர்மையான முனைகளை கொண்டது.
* மிகத் துல்லியமாகப் பற்காரையை அகற்ற முடியும்.
* வாயின் இண்டு இடுக்கெல்லாம் புகுந்து பற்காரை அகற்ற வாய்ப்பு அதிகம்.
* அல்ட்ராஸோனிக் பற்சுத்தத்தை விட கைகளால் செய்யப்பெறும் பற்சுத்தம் எளிமையானது, முழுமையானது என பல பல் நோயாளிகள் கருதுகின்றனர்.
* கைகளால் செய்யப்பெறும் பல்சுத்தத்துக்கு நுட்பமான கை வேலையும் அனுபவமும் கொண்ட பல்மருத்துவர் தேவை.
* கைகளால் செய்யப்பெறும் பல் சுத்தத்தில் பல் மருத்துவர் சிறு கவனக்குறைவுடன் செயல்பட்டாலும் பல்லின் எனாமல் (கனிமப் பூச்சு அல்லது மிளிரிப் பூசல்) காணாமல் போய் பற்கூச்சம் வந்துவிடும்.
* மேனுவல் பற்சுத்தம் லேசர் பற்சுத்தத்தை விட அதிக நேரம் எடுக்கும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் காலம் முழுவதும் பல் மருத்துவர்கள் உளி எடுத்துக் கொண்டு சிற்பங்களைச் செதுக்குவது போல பற்சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள் என்றால் சரியாக இருக்குமா?
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கைகூட பல் மருத்துவம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிநவீனமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
தற்சமயம் இரு அதி நவீன அல்ட்ராஸோனிக் லேசர் பற்சுத்தபடுத்திகள் புழக்கத்தில் உள்ளன.
* அழுத்த மின் விளைவு லேசர் பற்சுத்தபடுத்தி (Piezoelectric Ultrasonic Scalers)
* காந்தக்கட்டுப்பாடு பற்சுத்தபடுத்தி (Magnetostrictive Ultrasonic Scalers)
பற்சுத்தப்படுத்திகளை மூன்று விதமாகவும் பிரிக்கலாம்.
* ஒலி (Sonic)
* செவிப்புலம் கடந்த மீயொலி (Ultrasonic)
* சுழலும் சுத்தப்படுத்தி (Rotary)
* அல்ட்ராஸோனிக் பற்சுத்தப்படுத்திகளின் கூர்மையான நுனிகளில் பல வகைகள் உள்ளன.
அவைகளைக் கீழேப் பார்க்கலாம்.
* புவி சார்ந்த பொதுமையான கூர்மை நுனி.
* மெல்லிய மினி நுனி.
* பல் ஈறுநோய் சார்ந்த பெரியோ நுனி.
* பல்வேர் மருத்துவயியல் சார்ந்த எண்டோ நுனி.
* முறுக்கு விசை நுனி.
* மெருகிடல் நகாசு செய்தல் நுனி.
* முன்புறம் பின்புறம் நுனி (Anterior and Posterior)
லேசர் பற்சுத்தக் கருவிகளில் நூற்றுக்கணக்கான நிறுவனத் தயாரிப்புகள் உள்ளன. அவைகளில் சிலவற்றைக் கீழேப் பார்க்கலாம்.
* வுட்பெக்கர் டிடிஈடி 600 - விலை ரூ 32 942.
* வால்டென்ட் அல்ட்ராஸோனிக்- விலை ரூ4200.
* பயோலேஸ் எபிக் எக்ஸ் டென்டல் லேசர் வித் பிளிச்சிங் – விலை ரூ.3, 49, 300.
* ஜே மோரிடா டென்டா போர்ட் இஸட் எக்ஸ் வித் ஒடிஆர் – விலை ரூ.2, 35, 000.
* யூனிடென்ட் இறக்குமதி செய்யப்பட்டது தூரிகை இல்லாதது- விலை ரூ25 870.
* மோரிடா ட்ரை ஆட்டோ இஸட் எக்ஸ் இஸட் என்டோ மீட்டர் விலை ரூ 1, 39,995.
* வால்டர் டெஸ்லா ஏரோட்டா 900
* வுட்பெக்கர் பிடி-ஏ வலிஇல்லா பற்சுத்தபடுத்தி விலை ரூ. 3,10,000.
* டான்டிக்ஸ் கே 400 கேபைல் விலை ரூ. 7905.
* ஐவோகிளார் விவாடென்ட் ப்ளூபேஸ் என்-ஜி4 விலை ரூ. 55053.
* ஐடிஎஸ் டென்மெட் ஹெச்டி ஐ 110 இன்ட்ரா ஓரல் விலைரூ. 7800.
* வுட்பெக்கர் என்டோராடர் என்டோ மீட்டர் விலை ரூ.39,820.
* என்எஸ்கோ டென்டல் இன்ஜின் மைக்ரோமீட்டர் விலை ரூ. 86,332.
* ஷாசின் ட்ராஸ் எஸ்யூஎஸ் 20(ஆப்டிக்) பிஸோ-விலை ரூ.15,000.
* ஓரிகாம் லேசர் 2 டென்டல் டியோடு விலை ரூ. 1, 56,429.
(மேற்காணும் பட்டியலில் காணப்படும் விலை மாறுதலுக்குட்பட்டது)
வாய்ப் புற்று நோய்
ரங்ககிருஷ்ணன், மதுரை.
எனக்குக் கடந்த ஆறு மாதங்களாக, அவ்வப்போது வாய்ப்புண்கள் வருகின்றன. நான் காரமான உணவோ, மிகவும் சூடான பானங்களோ அருந்துவதில்லை. இது வாய்ப் புற்று நோய்க்கான அறிகுறியோ எனப் பயப்படுகிறேன். இதற்கு என்ன காரணமென்று சொல்ல முடியுமா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
அடிக்கடி பற்பசையை மாற்றாதீர்கள். மீண்டும் பழைய பற்பசையையேப் பயன்படுத்துங்கள். செரிமானப் பிரச்சனை இருந்தாலும் வாயில் புண்கள் வரும். இரவு உணவை 7 மணிக்குள் எடுத்து கொள்ளுங்கள். எண்ணெய் சார்ந்த அசைவ உணவுகளை இரவில் தவிருங்கள். நூறு மில்லி வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் வைத்து ஒரு நாளைக்கு மும்முறை வாய் கொப்பளியுங்கள். அதன் பின்னும் வாய்ப்புண் குணமாகாவிட்டால் Oral Surgery பல் மருத்துவரை அணுகி, தேவைப்படும் பரிசோதனைகளைச் செய்து, உண்மை நிலையினை அறிந்து கொள்ளுங்கள். அப்படியேப் புற்றுநோய் பயத்திலிருந்து விடுபடுங்கள்.
|
எத்தனை லேசர் தொழில்நுட்பங்கள் வந்தாலும் பற்சுத்தத்தில் ஒரு பல் மருத்துவரின் மனநிலை, விருப்பு வெறுப்பு, கைவேலை நுணுக்கம்,. அக. புறச் சூழல், கல்வியறிவு, சகிப்புதன்மை, மனிதாபிமானம் போன்ற்வை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஸ்கேலிங் செய்வதில் ஆண் பல் மருத்துவர்களை விட பெண் பல் மருத்துவர்கள் சிறப்பானவர்கள் என்பது என் கருத்து. பெண்கள் நுண்ணியப் பணிகளில் அதிகம் கவனம் செலுத்துவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.