பல் மருத்துவப் பயன்பாட்டிற்கான கருவிகளை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். அவை;
1. பரிசோதனைக் கருவிகள்
2. கைவேலைக் கருவிகள்
3. மறுசீரமைப்புக் கருவிகள்
4. துணைக் கருவிகள்
பல் மருத்துவப் பயன்பாட்டிலிருக்கும் கருவிகளின் பட்டியலைத் தெரிந்து கொள்ளலாம்.
1. பல் மருத்துவக் கண்ணாடி (Dental Mirror) - வாய்வழி குழியை முழுமையாக பார்க்க இக்கருவி உதவுகிறது.
2. பல் ஆய்வுக்கருவி (Dental Probe ) - பற்சொத்தையின் ஆழத்தைக் கணிக்க இக்கருவி உதவுகிறது.
3. காலேஜ் சிறு குறடு (College Tweezer) - பஞ்சைp பற்றி எடுக்க உதவுகிறது.
4. பல் மருத்துவத் தட்டு (Dental Tray) - பல் மருத்துவப் பயன்பாட்டிற்கான தட்டு.
5. பிணைப்புப் பொருள் உயர்த்தி (Coupland Elevator)
6. செதில் தோல் பிடிப்பி (Scalpel Holder) - அறுவை சிகிட்சையின் போது செதில் தோல் வெட்டுக் கருவியைப் பற்றிப் பிடிக்க உதவுகிறது.
7. எலும்புறை உயர்த்தி (Periosteal Elevator)
8. எலும்பு கோப்பு (Bone File)
9. தள்ளு பற்சுத்தபடுத்தி (Push Scaler) - நோயாளியின் வாயிலிருந்து அசுத்தங்களையும் கசடுகளையும் நீக்க உதவுகிறது.
10. கரண்டி தோண்டி (Spoon Excavator)
பல் கவிதை
*குவிபற்கள் –கொந்தளிப்பு
குழிபற்கள் – இன்னல்
கூர்மைபற்கள் – புத்திசாலிதனம்
கூடுதல்பற்கள் –சுறுசுறுப்பு
அகலஈறு – துரதிஷ்டம்
சீரற்றபற்கள் – பேராசை
வயோதிகத்தின் பொக்கைவாய்
என்ன ராசிபலனோ?
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
11. நயமான தோண்டி (Fine Excavator)
12. அகன்ற அலகு கொண்ட கலவைk கரண்டி (Mixing Spatula) - பல் மருத்துவப் பொருட்களைக் கலக்க உதவுகிறது.
13. ரசக்கலவை ஏந்தி (Amalgam Carrier) - பற்குழியில் ரசக்கலவையை நிரப்ப உதவுகிறது.
14. ரசக்கலவை நிரப்பி (Amalgam Plugger) - நிரப்பும் பொருளைச் சுண்டச் செய்யும்.
15. சுண்ணச்சாந்து கத்தி (Pladter Knife)
16. மெழுகுக் கத்தி (Wax Knife) - மெழுகு வேலைக்கு உதவுகிறது.
17. மாதிரி (Model)
18. பல் மருத்துவப் பீச்சுக்குழல் (Dental SyringeENTAL SYRINGE) - ஓரிட உணர்வு நீக்கப் பயன்பாட்டுக்கு உதவுகிறது.
19. மீன்வால் உயர்த்தி (Fish Tail Elevator) - பற்குழியை விரிவுபடுத்த உதவுகிறது.
20. க்ரையர் உயர்த்தி (Cryer Elevator)
21. மருத்துவமனை அமைப்பு உயர்த்தி (Hospital Pattern Elevator)
22. குளிர்கால உயர்த்தி (Winter Elavator)
23. வார்விக் ஜேம்ஸ் உயர்த்தி (Warwick James Elevator)
24. பற்பிரிகை உயர்த்தி (Dental Extraction Elevator)
25. தையல் இடும் பொருட்கள் (Suturing Materials)
26. தையல் இடும் கூர்மைகள் (Suturing Tips) - கூடுதல் இரத்தத்தையும் எச்சிலையும் சேகரிக்க உதவுகிறது.
27. பல் மருத்துவ ஊசி (Dental Needle) - நீளமான மற்றும் நீளம் குறைவான ஊசிகள் கிடைக்கின்றன.
28. ஒற்றைப்பயன் பீச்சுக்குழல் ஊசி (Disposable Syringe and Needles)
29. கீழ் உருப்பதிப்பு தட்டு (Lower Impression Tray) - கீழ்பக்க வாயையும் பற்களையும் உருப்பதிப்பு செய்யப் பயன்படுகிறது.
30. மேல் உருப்பதிப்பு தட்டு (Upper Impression Tray)
31. ஈறுநோய் ஆய்வு (Periondontal Probe)
32. மரக் கலவைக்கரண்டி (Wooden Spatula)
33. மேல் வலது கடைவாய்ப்பல் இடுக்கி (Upper Right Molar Forceps)- மேல் வலது கடைவாய்பற்களை பிடுங்க இது பயன்படுகிறது.
34. மேல் இடது கடைவாய்pபல் இடுக்கி (Upper Left Molar Forceps)
35. பொதுமையான கடைவாய்ப்பல் இடுக்கி (Universal Molar Forceps) - மேல் வலது மேல் இடது கடைவாய் பற்களை பிடுங்க இது உதவுகிறது.
36. பொதுமையான கீழ் கடைவாய்பல் இடுக்கி (Universal Molar Forceps Lower)
37. மேல் முன்னம் இடுக்கி (Upper Anterior Forceps)
38. கீழ் முன்னம் இடுக்கி (Lower Anterior Forceps)
39. கீழ் கடைவாய்ப் பற்கள் இடுக்கி (Lower Molar Forceps)
40. கீழ் முன்னம் கடைவாய்ப்பற்கள் இடுக்கி (Lower Premolar Forceps)
வாய்ப் புற்று நோய்
ஆர். நௌஷாத் பாட்சா, திண்டுக்கல்
பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தையும் பல் மருத்துவர் நினைவில் வைத்துக் கொள்வாரா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
எந்த ஒரு தொழிலைச் செய்தாலும், அந்தத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தும் அவர்களுக்கு எப்போதும் நினைவில் இருக்கத்தான் செய்யும். கருவியின் பெயர் மட்டுமின்றி, அதனை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பர். பல் மருத்துவர்களும், அனைத்து வகையான பல் மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகளின் பெயர்களுடன், அதனை எதற்கு, எப்போது பயன்படுத்த வேண்டுமென்பதை அனுபவத்தின் வழியாகத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
|
41. மேல் முன்னம் கடைவாய்பற்கள் இடுக்கி (Upper Premolar Forceps)
42. வட்டவடிப் பொருள் மெருகிடும் கருவி (Ball Burnisher)
43. முட்டை வடிவப் பொருள் மெருகிடும் கருவி (Egg Burnisher)
44. துளையிடும் கருவி (Reamers)
45. முள்பரோச் என்பது கையால் இயக்கப்படும் என்டோடான்டிக் கருவி (Barbed Broach)
46. பற்களின் நிறங்களை அனுமானிக்கும் வழிகாட்டி (Shade Guide)
47. ரசக்கலவை தடுப்பு (Amalgam Edge)
48. உபயோகித்து எறியும் கையுறைகள் (Gloves) - லேடெக்ஸ் அல்லது வினைவால் ஆனது (நைட்ரைல் ப்யூட்டாடைன் ரப்பர், பாலிவினைல் குளோரைடு)
49. முகஉறைகள் (Face Mask) - பாலிப்ரபைலின், லினன், பருத்தியால் செய்யப்பட்டவை.
50. பருத்திக் கம்பளி (Cotton Wool) - எச்சில் மற்றும் இரத்தம் துடைக்க, இரத்தப் பெருக்கை நிறுத்த உதவுகிறது.