புன்னகை பூக்கும் பற்கள்
டாக்டர் ஆ. நிலாமகன்
32. பல் மருத்துவத் துணைக் கருவிகள் - தொடர்ச்சி
அறுவை சிகிச்சை
104. பெரியவர்கள் இடுக்கி சாதனங்கள் தொகுப்பு.
105. சிறியவர்கள் இடுக்கி சாதனங்கள் தொகுப்பு.
106. நேரடி மற்றும் வளைவு கத்திரிக்கோல்.
107. நேர் உயர்த்தி (Straight Elevator)
108. தூக்கும் உயர்த்தி (Crane Elevator)
109. சுழற்சி (Gyres)
110. கூப்லாண்ட் உயர்த்தி (Coupland Elevator) பற்களைப் பிரிக்கப் பயன்படுகிறது. இது எலும்பு மற்றும் பல் வேர்களுக்கு இடையேச் செருகப்பட்டு, துளைகளுக்கு வெளியே உயர்த்தச் சுழற்றப்படுகிறது. இக்கருவிகளை 1922 ஆம் ஆண்டில் டொரண்டோவின் பல் அறுவை சிகிச்சை வல்லுநர் டக்ளஸ். சி. டபிள்யூ. கூப்லாண்ட் வடிவமைத்தார். கூப்லாண்ட் உயர்த்தி மூன்று அளவுகளில் கிடைக்கிறது.
பல் கவிதை
“முத்தக்கப்பல்களின் கலங்கரை விளக்கம் நீ
முஸ்லிம்கள் கொண்டாடும்
ரமலானின் முதல்பிறை நீ
சிவபெருமான் தலையின்
பிறை நிலா நீ
தேவதைகள் விளையாடும் பரமபதத்தில்
தாயக்கட்டை நீ
ஒற்றை சிரிப்பில் என் உயிரை எடுத்து
உயிரைத் தரும் காதல்
புன்னகை மந்திரவாதி நீ”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
111. வார்விக் ஜேம்ஸ் உயர்த்தி (Warwick James Elevator)
112. வேர்முனை உயர்த்தி. (Root Tip Elevator)
113. இரத்தப் பெருக்கைக் கட்டுபடுத்தும் குருதியோட்டத் தடையன்கள் (Hemostats)
114. ஊசி இடுக்கி. (Needle Holder)
115. பல் உட்புறச் சிகிச்சைக்கு உதவும் அறுவை சிகிச்சை சுரண்டிகள் (Surgical Curettes)
116. செதில் தோல் அகற்றும் கத்தி (Scalpel Blade Remover)
117. அறுவை சிகிச்சை சிறுதுளைப்பான் (Surgical Burs)
118. பக்கவாட்டிலும் முடிவிலும் கத்தரிக்கும் கருவி (Rongeurs)
119. எலும்பு உளி மற்றும் சுத்தி (Bone Chisel and Mallet)
120. உயிர்ப்புடன் இல்லாத திசுக்களை அகற்றும் கத்திரிக்கோல் (Dead Tissue Scissors)
121. டவல் இடுக்கி – அ) பேக்ஹாஸ் டவல் கிளாம்ப் அ) பேக்ஹாஸ் ரோடல்டவல் கிளாம்ப் (Towel Clamb)
122. திசு பின் இழுப்பு கருவி (Tissue Retractor)
123. நாக்கு மற்றும் கன்னம் பின்னிழுப்பு கருவி (Tongue and Cheeks Retractor)
124. பற்கள் நறநறப்பு மற்றும் தாடை வாய் பூட்டு (Bite Block)
125. கட்டுநார் கம்பிகள் (Ligature Wires)
126. அறுவைச் சிகிச்சைத் தட்டு (Surgical Tray)
127. அறுவைச் சிகிச்சை துண்டுகள் (Surgical Towels)
128. நீள மற்றும் குட்டையான மருந்தூசிகள்
.
பிற பல் மருத்துவக் கருவிகள்
129. உருப்பெருக்கி ஒளிக் குவி ஆடி (Magnifying Loupes)
130. ஒளி நுண்ணோக்கி (Operative Microscope)
131. லேசர் கருவி.
132. அறுவைச் சிகிச்சை கைக்கருவி (Surgical Hand Piece)
133. அறுவைச் சிகிச்சை பல் பதியம் தொகுப்பு (Surgical Implant Kit)
134. உடலியக்க பிரிப்பி. (Physio Dispenser)
135. பல் உட்புற சிகிட்சையில் பயன்படும் கேளாஒலித் தோற்றுருவிக்கும் கருவி (Ultrasonic Imaging Device)
136. கட்டா பெர்ச்சா சுட வைக்கும் கத்தரிக்கும் முறை வாய் அறுவை சிகிச்சை (Oral Surgery)
137. ஓரிட உணர்ச்சி நீக்கி (Local Anaesthetic)
138. மேற்பூச்சு உணர்ச்சி நீக்கி (Topical Anaesthetic)
139. உலர்ந்த பற்குழி (Dry Socket Posts)
140. பீட்டா வட்டு (BETA Disc)
141. நுரைப்பு ஜெல் திரவம்.
142. இரத்தப்போக்கை நிறுத்தும் பொருட்கள்.
143. அயடோபார்ம் காஜா – நச்சுக் கொல்லி திரவம் (Iodoform Gauza)
144. தூய்மையான அளவி (Sterile Gauge)
145. திசு ஆய்வுக் புட்டிகள் (Biopsy Bottles)
செயற்கைப் பல் வடிவமைப்பு மற்றும் பொருத்துதல்
146. பல் அச்சு பொருட்கள் (Impression Materials)
147. துத்தநாக ஆக்ஸைடு யூசினால் (Zincoxide Euginol)
148. சோடியம் அல்ஜினேட் (Sodium Alginate)
149. அழிப்பான் அடித்தளம் (Rubber Base)
150. பச்சைக் குச்சிக் கலவை (பல் அச்சுப் பொருள்). (Green Stick Compound)
151. மஸ்லின் துணி.
152. மெதில் மெத்தாகிரைலேட், ஹைடிரோ கொய்னன், பென்ஸோயல் பெர்ராக்ஸைடு, எதிலின் க்ளைகால் குளிர்ச்சியான ரெஸின் பொருட்கள்.
153. சிலிக்கான் டை ஆக்ஸைடு, அலுனியம் ஆக்ஸைடு, பெர்ரிக் ஆக்ஸைடு, கால்சியம் ஆக்ஸைடு, மெக்னீசியம் ஆக்ஸைடு, பொட்டாசியம் ஆக்ஸைடு, சோடியம் ஆக்ஸைடு கொண்ட PUMICE எனப்படும் எரிமலைகல்.
154. பல் மருத்துவ அடுப்பு
155. பல் தொகுப்பு
156. மெழுகு.
157. அரத்தாள். (Sand Paper)
158. கிளாஸ் அயோனோமர் சிமென்ட்.
159. பல் மருத்துவப் பிசின்.
160. சிகிச்சையளிக்கும் பல்லை குறியிடும் உச்சரிப்புப் பட்டைகள் (Articulating Strips)
பல் மருத்துவப் பட்டப்படிப்பு தேவைதானா?
சு. இளங்கோவன், வளர் நகர், மதுரை.
முப்பத்திரண்டு பற்களைக் கொண்ட வாய் மருத்துவத்திற்கென்று தனி மருத்துவப் படிப்பு தேவைதானா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
மனிதன் உடலின் நுழைவாயில் அவனது வாய்தான். மனிதன் உயிர் வாழ்வதற்கான உணவு, நீர் என்று அனைத்து வாயின் வழியே உட்கொள்ளப்படுகின்றன. உடலின் முதன்மை உறுப்பான வாயில் இருக்கும் நாக்கில் பல சுவை மொட்டுகள் இருக்கின்றன. இந்தச் சுவை மொட்டுகள், வயிற்றுக்குத் தேவையான உணவினை எடுத்துக் கொள்ள மனிதனுக்கு உதவுகிறது. ஆனால், மனிதன் விருப்பதிற்கேற்ற உணவினை வாய் ருசிக்காகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, நாக்கின் சுவை மொட்டுகளின் கட்டுப்பாடுகளைக் கடந்து போய்விடுகிறான். இதேப் போன்று, வாயிலிருக்கும் பற்கள், வயிற்றிற்கான உணவை அரைத்து மென்று விழுங்க உதவுகிறது. ஆனால், மனிதன் அவசர அவசரமாக உணவை அப்படியே விழுங்கிக் கொண்டிருக்கிறான். வாயிலிருக்கும் உறுப்புகளின் பயன்பாடுகள் குறித்து அறியாமல் அல்லது அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காமல் செயல்படுவதால், வயிற்றில் அந்த உணவு செரிமானமாகாமல் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. அதன் விளைவாக, அவனுடைய உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதனைப் போக்க அவ்வப்போது மருத்துவர்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான். மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளையும் வாயின் வழியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக, வாயைச் சுத்தமாகாவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டால் மனிதனின் பல நோய்கள் இல்லாமலேப் போய்விடும். ஆண்டுக்கு இரு முறையாவது, பல் மருத்துவர்களை அணுகி வாயின் நலனைக் காக்கத் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வதுடன், அவர் குறிப்பிடும் முறைகளைப் பின்பற்றி வந்தால் மனிதனுக்கு வரும் நோய்கள் பெருமளவு குறைந்து போய்விடும். இதனை அடிப்படையாகக் கொண்டே, பல் மருத்துவத்திற்கென்று தனி மருத்துவப் பட்டப்படிப்பு இருக்கிறது. பல் மருத்துவத்தில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் சிறப்பு மேற்படிப்புகளும் இருக்கின்றன. மனிதர்களுக்குப் பல் வலி வந்தால் மட்டுமே, பல் மருத்துவர்களைத் தேடும் போக்கு இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மனிதன் நோயின்றி வாழ வேண்டும். அதற்கு அடிப்படையான வாய்க்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
|
பற்கூழ் (உட்புறச்) சிகிச்சை (Endodontics)
161. சில்வர் அமால்கம்.
162. கிளாஸ் அயோனோமர் சிமின்ட்.
163. ஜிங்க் பாலிகார்போஜைலேட் சிமின்ட்
164. ஜிங்க் ஆக்ஸைடு யூஜெனால் சிமின்ட்.
165. கால்சியம் ஹைடிராக்ஸைடு பொடி.
(தொடரும்...)
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.