166. பற்குழிகளைத் தற்காலிகமாக நிரப்பும் பொருட்கள் (Intermediate Restorative Material) சுருக்கமாக, IRM (ஜிங்க் ஆக்ஸைடு யூஜினால் (ZOE), ஜிங்க் பாஸ்பேட் சிமின்ட், அமால்கம், தங்கம், அலுமினா, ஜிர்கோனியா, அக்ரிலிக் ரெசின், சிலிகேட் சிமின்ட்ஸ்)
167. இழை வலுவூட்டிய பல்லுறுப்பி (Fiber Reinforced Polymer) - கார்பன் பைபர், பைபர் கிளாஸ்) என்று இரு விதமான வேதிப்பொருட்களின் கூட்டுக்கலவை.
168. பாராபார்மால்டிகைடு (Paraformaldehyde) சார்ந்த பசைகள். கரிமம் இல்லாத மாற்றுப் பொருட்கள்.
169. குழந்தைகளுக்கான வேர் சிகிச்சையில் பயன்படும் பார்மோகிரிஸோல்
170. சோடியம் ஹைடிரோகுளோரைடு.
171. வேர் சிகிச்சையில் பயன்படும் எதிலின் இடியாமின் டெட்ரேஸ் (EDTA)
172. ஹைடிரஜன் பெர்ராக்ஸைடு. பற்களை வெண்மையாக்க ஈறு நோய்க்குச் சிகிச்சையளிக்க இது பயன்படுகிறது. பல் செட்கள், ஒழுங்கற்ற பற்கள் மற்றும் தாடைகளைச் சீரமைக்கப் பயன்படும் சாதனங்களை கிருமி நீக்கம் செய்ய ஹைடிரஜன் பெர்ராக்ஸைடு பயன்படுகிறது.
173. சோடியம் குளோரைடு கரைசல் (சாதாரண சலைன் திரவம்)
பல் கவிதை
“மல்லிகை முல்லை வெள்ளை ரோஜா
வெண்தாமரை அல்லி அத்தி வாகை
டெய்ஸி, காமெலியா, ஆம்பல், அனிச்சம்
மணிச்சிகை, கூவிரம், கூவிளம், தேமா
லில்லி அல்லி பூக்களின் நந்தவனம் நீ
ஒரே ஒரு முறை சிரி”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
174. குளோரெக்சிடின். இது ஒரு கிருமி நாசினி. இது பொதுவாக வாய் கழுவும். திரவங்களில் (Mouthwash) பயன்படுகிறது. தோல்கிருமி நீக்கம் செய்யவும் (Skin Disinfection) மற்றும் அறுவைச் சிகிச்சைக் கருவிகளைக் கிருமி நீக்கம் செய்யவும் பயன்படுகிறது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைக் கொல்லும்.
175. குட்டா பெர்ச்சா கூம்புகள் – குட்டா பெர்ச்சா என்பது சப்போட்டாசி குடும்பத்து பலாகியம் இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதிலிருந்து உயர்தர லேடெக்ஸ் தயாரிக்கப்படுகிறது.
176. வேர் சிகிச்சையில் பயன்படும் உறிஞ்சும் காகிதங்கள் (Dental Paper Points)
177. வேர் சிகிச்சையின் சிகிச்சைமுடிவில் சிகிச்சைப் பகுதியைக் கச்சிதமாக மூடவும், கிருமிகள் ஊடுருவாமல் இருக்கவும், உடனடியாக காயங்கள் ஆறவும், பல் பிசின் மூடுவான்கள் பயன்படுகின்றன. (Dental Resin Sealer)
178. கார்பமைடு பெராக்ஸைடு, சோடியம் பெர்போரேட் போன்ற நிற நீக்கி அல்லது வெளுக்கும் வேதிப்பொருட்கள்.
179. பளபளப்பேற்றும் பசை (Polishing Paste)
180. பற்கூச்சங்களுக்கு எதிரான திரவங்கள் (Anti Sensitivity Solution)
181. குளுக்கோஸ். பல் பராமரிப்பில் குளுக்கோஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. முதன்மையாக, நீரழிவு நோயாளிகளின் வாய் வழி நலத்தில் அதன் தாக்கம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவை நிர்வகிப்பதில் அதன் பயன்பாடு குறித்துக் கவனம் கொள்ள வைக்கிறது. உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள் ஈறுநோய் மற்றும் பல்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். குறைந்த அளவு இரத்தக் குளுக்கோஸ் ஒரு பல் அவசரநிலை ஆகும்.
182. பல் மருத்துவ அவசரப் பயன்பாடு மருந்துகள்
ஆஸ்பிரின், எபிநெப்ரின், ஆக்ஸிஜன், சல்புபட்டமோல், க்ளைகாஜென், நைட்ரோ கிளிசரின், மிடாஸோலம், டைபென்ஹைடிராமைன், அமோனியா, குளோபினிரமைன், நாலோஸோன், க்ளைகோஜெல், ஹைடிராகார்டிஸோன், கார்போஹைடிரேட், அட்ரோபைன், பென்ஸோடயஸிபென், எபிடிரைன், பினைலெப்ரின்
183. கை கிருமிநீக்கித் திரவங்கள் (Hand Sanitizer)
184. ஸ்பிரிட்
185. பஞ்சு
186. பல் அளவீட்டுக் கருவி
187. பயன்படுத்தி எறியும் கையுறைகள்
188. ஆட்டோகிளேவ் செருப்புகள்
189. இருக்கை கவர்கள்
190. எழுது பொருட்கள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டுப் பொருட்கள்
191. நோயாளிகளுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதாகைககள்
192. பல் மருத்துவ சிகிச்சைக்கு முன் பின் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் (Post Operative Instruction Leaflets)
வலி நிர்வாகம்
* புண் குணமாதல் பற்றிய கவனிப்பு
* உணவுக் கட்டுபாடு
* செயல்பாடு கட்டுப்பாடுகள்
* சிகிட்சைக்கு பின்வரும் சில சிக்கல்கள் பற்றிய முன்னறிவிப்பு
* சாப்பிட வேண்டிய மருந்துகள் பற்றிய அட்டவணை
பல் மருத்துவப் பட்டப்படிப்பு தேவைதானா?
சு. இளங்கோவன், வளர் நகர், மதுரை.
திரைப்படங்களில் சில வேடங்களுக்காக, நடிகர்கள் செயற்கைப் பல் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டியதிருக்கிறதே... செயற்கைப் பல் அவர்களுக்குத் துன்பத்தைத் தராதா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
காட்பாதர் திரைப்படத்தில் நடித்த மார்லன் பிராண்டோ செயற்கைப் பல்லை வாய்க்குள் அதக்கிக் கொண்டு நடித்தார். ட்ராகுலா படத்தில் நடித்த பெலா லூகோலி பொய்ப் பற்கைளப் பொருத்திக் கொண்டு பருவப் பெண்களின் ரத்தம் குடித்தார். கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், இந்திரன் சந்திரன் படங்களில் கமல் பொய்ப்பல் பொருத்திக் கொண்டு நடித்தார். பொய்ப்பற்கள் பொருத்தி நடித்ததால் நடிகர்களின் நடிப்பு மேம்பட்டது. அதன் வழியாக, அவர்கள் நல்ல நடிகர்கள் என்றும் பெயர் பெற்றார்கள். செயற்கைப் பற்கள் சரியாக வாய்க்குள் பொருந்தாவிட்டால் புண்களோ, நோய்த் தொற்றோ வரலாம். அதனை மிக எளிதாகக் குணப்படுத்தி விடலாம்...! எனவே, நடிப்பிற்காகச் செயற்கைப் பற்களைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையுமில்லை.
|
பல் சுகாதாரம்
சந்தேகங்களுக்கு பதில் சொல்ல தொடர்பு எண்கள்.
“பல் பிடுங்கிய 24மணிநேரத்துக்கு எச்சில் துப்பாதே”
“மருத்துவர் சொன்ன நேரத்தில் மருந்துகளை தவறாமல் உட்கொள்”
”பல் பிடுங்கியபின் வெளிப்புற கன்னத்தில் ஐஸ் ஒத்தடம் கொடு”
“எடை தூக்காதே உடற்பயிற்சி செய்யாதே நீந்தாதே”
“மென்மையான பாதித் திரவ உணவுகளை இளஞ்சூட்டில் உண்”
“பல் பிடுங்கிய 48 மணி நேரம் கழித்து வாய்க்குப் பயிற்சி கொடு”
“புகைப்பிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் தவிர்”
193. நோயாளி சிகிட்சை பற்றிய விவரங்களை படித்து ஒப்புதல் தரும் படிவம் இன்னும் சில கருவிகள் இருக்கலாம்.
நினைவில் இருக்கும் மருத்துவக் கருவிகளின் பட்டியல் நிறைவடைகிறது.
சிறப்புப் பிரிவு மருத்துவரது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவம் தொடர்பான சில கருவிகள் கூடுதலாக இருக்கலாம்.