உடலின் அசாதாரண செல்கள் கட்டுப்பாடு இன்றி பெருகி அருகில் உள்ள திசுக்களை அழித்து மேலும் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு நிலையே புற்றுநோய்.
புற்றுநோய்களில் பல வகை உண்டு.
* மார்பகப் புற்றுநோய்
* பெருங்குடல் புற்றுநோய்
* மூளைப் புற்றுநோய்
* இரத்தப் புற்றுநோய்
தோலின் எபிடெலியல் திசுக்களில் இருந்து உருவாகும் புற்றுநோயை கார்சினோமா என்பர். எலும்புகள், குருத்தெலும்பு, கொழுப்பு, நரம்பு போன்ற இணைப்புத் திசுக்களில் உருவாகும் புற்று நோயை சர்கோமா என்பர். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் கூறுகளாக இருக்கும் லிம்போசைட்டுகளில் தொடங்கும் புற்று நோயை லிம்போமா என்பர்.
இரத்த அணுக்கள் முதிர்ச்சி அடையத் தொடங்கும் இடத்தில் அதாவது எலும்பு மஜ்ஜையில் தொடங்கும் புற்றுநோயை லுகேமியா என்பர்.
ஒரு மனிதனின் நாக்கு என்பது வாயின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தசை உறுப்பாகும். நாக்கு சுவைகளை உணரவும், உணவை மெல்லவும், விழுங்கவும், பேசவும், சுவாசிக்கவும் பயன்படுகிறது. நாக்கின் பின்புறம் தொண்டையின் அடிப்பகுதியில் உள்ள ஹையாய்டு எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
|
விழுந்தவையெல்லாம்...!
“மன்னன் நெடுஞ்செழியனின்
முன் நீதி கேட்டு
கண்ணகி உடைத்தாள்
நான்கில் ஒரு கால் சிலம்பை
சிதறியவை முத்துக்களா?
இல்லை, மாணிக்கப்பரல்களா?
அவளின் ஆங்காரச் சிரிப்பினில்
தெறித்து விழுந்தவையெல்லாம்
அந்த அரசசபை
ஆண்களின் இதயங்களே!”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
நாக்கு ஒரு தசை ஹைட்ரோஸ்டாட் ஆகும். அதாவது அதன் வடிவம் மாறும் போது ஒட்டு மொத்த அளவு மாறாமல் இருக்கும். நீர் நிரம்பிய பலூனுடன் நாக்கை ஒப்பிடலாம். நாக்கின் அடிப்பாகத்தை வாய்ப்பகுதிக்குக் கீழே இணைக்கும் ஒரு ஜவ்வு போன்ற அமைப்பை நுண்ணிழுமடி (Frenulum) என்பர்.
நாக்கின் செயல்பாடு உணவை நகர்த்தி வாய்க்குள் தள்ளுவதாகும். இந்த உறுப்பு உணவு எபிக்ளோட்டிஸுக்குள் நுழைய விடாமல் காற்றுப் பாதையை பாதுகாக்கிறது மற்றும் சுவாசிக்க மூச்சுக்குழாயைத் திறந்து வைக்கிறது. நாக்கு என்பது ஈரமான இளஞ்சிவப்பு திசுக்களின் கூட்டம். நாக்கின் இளஞ்சிவப்பு வெளிப்புற பூச்சை சளி ஜவ்வு என வர்ணிப்பர்.
நாக்கின் மேற்பரப்பில் சிறப்பு உணர்வு அமைப்புகள் உள்ளன. இது பாப்பிலாவால் மூடப்பட்டிருக்கும். நாக்கிலுள்ள புடைப்புகள் உணவை பிடிக்கவும் நகர்த்தவும் ஒரு கடினமான மேற்பரப்பை வழங்குகின்றன.
சுவை மொட்டுகள் பாப்பிலாவுக்குள் அமைந்துள்ளன. ஆனால் சுவை ஏற்பிகள் அண்ணம் மற்றும் தொண்டையிலும் உள்ளன.
ஆண்களின் நாக்கு 3. 3 அங்குலம் அல்லது 8. 352 செமீ நீளமும், பெண்களின் நாக்கு 3. 1 அங்குலம் அல்லது 7. 874 செமீ நீளமும் உடையவை.
நாக்கின் முக்கியப் பகுதிகள் எனும் போது,
* வாய் வழிப்பகுதி (Oral Part) இது நாக்கின் முன்புறமாகும். இது உணவை நகர்த்த மெல்ல சுவைக்க உதவுகிறது.
* குரல்வளைப்பகுதி (Pharyngeal Part) இது நாக்கின் பின்பகுதி. இது தொண்டைப் பகுதியுடன் தொடர்புடையது.
* மொழி செப்டம் (Lingual Septum) இது நாக்கின் நீளத்தின் பெரும் பகுதியில் இடது மற்றும் வலது பக்கங்களை பிரிக்கும் ஒரு செங்குத்து திசுப்பிரிவு.
* மொழி பிரனுலம் (Lingual Frenulum) இது நாக்கின் அடிப்பகுதியில் உள்ள மடிப்பு.
இது நாக்கை வாயின் அடிப்பகுதியுடன் இணைக்கிறது.
மனித நாக்கின் முக்கிய பாகங்கள் எனும் போது,
* நாக்கின் நுனி (Tip)
* மேற்பகுதி (Dorsum)
* அடிப்பாகம் (Base/Root)
நாக்கின் பின்புறம் கசப்பு சுவை. இடது மேல் புறம் புளிப்பு சுவையும் இடது கீழ்புறம் உவர்ப்பு சுவையும் வலது மேல் புறம் புளிப்பு சுவையும் வலதுகீழ்புறம் உவர்ப்பு சுவையும் உணரப்படும்.
நாக்கில் பல வகை நோய்கள் வருகின்றன. குறிப்பாக,
* நாக்குப் புற்றுநோய் (Tongue Cancer)
* நாக்கின் நிறமும் நெளிவுகளும் மாறும் ஜியாகிராபிக் டங்க் (Geographic Tongue )
* சூடான உணவை உண்டாலோ தவறுதலாக பற்களை கடித்துக் கொண்டாலோ டங்க் ட்ராமா (Tongue Trauma)
* மஞ்சள் நாக்கு (Yellow Tongue) தோல் வியாதி, மஞ்சள் காமாலை நோய் பீடிப்பால் நாக்கு மஞ்சளேறும்.
* ஸ்ட்ராபெரி குறி. Infantile Hemangiomass - ஒரு வயது பெண் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.
* நாக்கு முடிச்சு (Ankyloglossia)
* அளவில் பெரிய நாக்கு (Macroglossia )
* அளவில் சிறிய நாக்கு (Microglossia )
* இரண்டாய் பிரித்த நாக்கு (Bifid Tongue)
ஒரு பல் மருத்துவர் ஒரு நோயாளியின் நாக்கைப் பரிசோதித்து பார்த்து ஈறுநோய் மற்றும் நாக்கு புற்றுநோயை உறுதி செய்துவிடுவார். பல் மருத்துவர் நோயாளியின் நாக்கைப் பரிசோதிக்கும் போது, நாக்கின் நிறம், இழை அமைப்பு (Texture), நாக்கின் வெண்படலத் திட்டை அவதானிப்பார்.
வாய்ச் சுத்தத்திற்கு நாள்தோறும் இரு முறை பல் துலக்கினால் மட்டும் போதாது. நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். வாய் அமைப்பு கச்சிதமாக அமைய நாக்கும் ஒரு முக்கிய காரணம். நாக்கில் புற்றுநோய் அறிகுறி தெரிந்தால் பல் மருத்துவர் உடல் திசு ஆய்வுக்கு (Biopsy) அனுப்பி வைப்பார்.
|
நாக்கு மற்றும் வாய்ப் புற்று நோய்கள்
பா. தீனதயாளன், விழுப்புரம்
வாய்ப்புண்கள் அடிக்கடி வந்தால் நாக்குப் புற்றுநோய் அல்லது வாய்ப் புற்று நோய் வரும் என்கிறார்களே, உண்மையா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
சாதாரண வாய்ப்புண்கள் அடிக்கடி வந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ஆறாத புண், நாக்குப் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மூன்று வாரத்திற்கு மேல் ஒரு வாய்ப்புண் இருந்தால், அதை ஆபத்து என்று கொள்ள வேண்டும். ஒழுங்கற்ற வடிவம் மற்றும் சிவப்பு வெள்ளை நிறத் திட்டுகள் சிக்கலானவை. காயங்களிலிருந்து இரத்தம் ஒழுகினாலும் அபாயம்தான். கழுத்தில் கட்டி, உணவு விழுங்குவதில் சிரமம், வாயில் உணர்ச்சியற்ற தன்மை போன்றவை இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி, உண்மை நிலையை அறிந்து, நாக்குப் புற்றுநோய் அல்லது வாய்ப் புற்று நோயிலிருது தற்காத்துக் கொள்ள வேண்டும்.
|
இந்தியாவில் நாக்குப் புற்றுநோயால் வருடத்திற்கு 1,35,000 பேர் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். 75000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
புகையிலை அதக்குதல், வெற்றிலை பாக்கு போடுதல், போதை பானம் அருந்துதல், புகைப்பிடித்தல் நாக்கு புற்றுநோய்க்கான முக்கியமான காரணங்கள்.
நாக்குப் புற்றுநோய்க்கு;
* மருந்து உட்கொள்ளுதல் (Medication)
* கதிரியக்கச் சிகிச்சை (Radiotherapy)
* அறுவை சிகிச்சை (Laryngectomy)
* குரல்வளை நீக்கம் (Neck Dissection)
* கழுத்து அறுத்தல் வகைப்பாடு (Glossectomy)
* நாக்கு நீக்கம்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சிகிச்சை
என்பது போன்ற சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாக்கை தாண்டாத (Localized Tongue Cancer) உள்ளவர்கள் 88 சதவீதம் பேர் ஐந்து வருடங்கள் வரை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நாக்குப் புற்றுநோய் மற்ற உடலுறுப்புகளுக்கு பரவி இருந்தால் 70 சதவீதம் பேர் ஐந்து வருடங்கள் வரை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நாக்கு புற்றுநோய் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் பரவி இருந்தால் 39 சதவீதம் பேர் ஐந்துவருடங்கள் வரை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தொடக்க நிலையில் நாக்குப் புற்று நோயைக் கண்டுபிடித்தால் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம்.