இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

72. நாசுவன்

முஹம்மது மீரான் வயது 60. செக்கச் சிவந்த அழகன். தலையில் கருப்பு எம்ப்ராய்டரி தொப்பி. சிரித்த முகம். வசீகரக்குரல். குற்றாலத்தில் பழக்கடை வைத்திருக்கிறார்.

மீரான் தனது இரு பேரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு பேரனுக்கு வயது நான்கு. இன்னொரு பேரனுக்கு வயது இரண்டு. மூத்தப்பேரன் மீரானின் தோளில் ஏறி அவரின் தலைதேசத்தை கொத்தாய்ப் பிடித்து இழுத்தான். இரண்டாவது பேரன் மீரானின் கையைக் கடித்து வைத்தான்.

“முடியைப் பிடிச்சு தாராளமா ஆட்டு ஆனா விழுந்திராத. நீ கையக்கடி வேணாங்கல வாய் வலிக்காம பாத்துக்க!”

சட்டைப்பையிலிருந்து இரு லாலிபாப்கள் எடுத்து ஆளுக்கொன்றாய் நீட்டினார்.

வாசலில் காலடி அரவம் கேட்டது.

எட்டிப் பார்த்தார் மீரான்.

“யாருல அது?”

“அஸ்ஸலாமு அலைக்கும்!”

“வஅலைக்கும் ஸலாம்… யாருன்னு தெரியலையே…” வெளி வாசலுக்கு வந்து எட்டி பார்த்தார்.

மாநிறமாய் 35 வயதில் ஓர் ஆண் நின்றிருந்தார்.

“என்ன மதரஸா டொனேஷனா?”

“மீரான் பாய் என்னை தெரியல? நான்தான் அத்தெரிமானின் மகன் சையது அலி…”

“எந்த அத்தெரிமான்?”

“மறதி உங்களுக்கு அதிகமாப் போச்சு. நாசுவன் அத்தெரிமான் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

ஓவ்! நாசுவன் அத்தெரிமானை மறக்க முடியுமா? அப்துல் ரகுமான் என்கிற பெயர்தான் மருவி அத்தெரிமான் ஆயிற்று.


நாசுவன் என்றால் முடிவெட்டுபவர், நாவிதர், அம்பட்டன் என பொருள். நாவிதர் அம்பட்டன் போன்ற வார்த்தைகள் இப்போது தடை செய்யப்பட்டு விட்டன. மரியாதையாக சிகைக்கலைஞன் என்கிறோம்.

போன தலைமுறையில் இஸ்லாமியர்களில் பலர் நாவிதர்களாக பணி புரிந்திருக்கின்றனர். அத்தெரிமான் எங்கள் வீட்டு ஆண்கள் அனைவருக்கும் வீட்டுக்கு வந்து சிகை திருத்துவார். எங்கத்தாவுக்கு சவரம் செய்வார். எங்கள் குடும்ப மருத்துவரும் அவரே. அவர் எங்களின் நாடிகளை துல்லியமாகப் பார்த்து நோய்க்குறி கூறி நாட்டு மருந்து தருவார். எங்கள் வயல்களில் வருடத்திற்கு இரண்டு பூ விளையும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அத்தெரிமானுக்கு அரை மூட்டை நெல் கொடுப்போம்.

பக்ரீத்துக்கு பக்ரீத் அவருக்கு ஆட்டுத்தலையும் குடலும் கொடுப்போம். 27 ஆம் கிழமைக்குத் துட்டு கொடுப்போம்.

சையது அலியை ஆழமாக பார்த்தார் முஹம்மது மீரான். “அப்படியே அத்தும்சுத்தும் உங்கத்தா மாதிரியே இருக்க? வா வந்து உக்காரு… நல்லாயிருக்கியா? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

“பரவாயில்ல… நிக்கேன்…”

“அது அந்தக் காலம். இப்ப முடிவெட்றதுக்கு நட்சத்திர அந்தஸ்து வந்து விட்டது. சிகைக் கலைஞர்கள் விமானத்தில் பறக்கிறார்கள்!”

எதிரில் தயக்கமாக அமர்ந்தான் சையத் அலி.

“அலி! என்ன தொழில் பாக்க?”

“நானும் சலூன் கடை தான் வச்சிருக்கேன்…”

“எங்க?”

“கடையத்தெருவுல…”

“உங்க சலூன் கடை பேரென்ன?”

“அப்துல் ரகுமான் சிகை திருத்த நிலையம்…”

“கடை எப்படி ஓடுது?”

“ஆண்டவன் புண்ணியத்ல சிறப்பா நடக்குது!”

“சுன்னத்தெல்லாம் நீ பண்ணுறியா?”


“எங்கே? எங்கத்தா காலத்ல சுன்னத்தை சுன்னத்கல்யாணம் என்று கொண்டாடுவார்கள். சுன்னத் பண்ணப்படப்போற பையனை கோட் சூட் பூ மாலை சேரா அணிவிச்சு குதிரை மேல ஊர்வலம் கூட்டிட்டு போவாங்க. குடத்து மேல உட்கார வைச்சு சுன்னத் பண்ணி விடுவோம். அப்புறம் தினம் வந்து சுன்னத் காயம் ஆறி விட்டதான்னு பாத்து காளமேக செந்தூரம் தூவுவோம். உலக்கு வைத்து சுன்னத் பகுதியை அழுந்த மூடிக்கொண்டு குளிக்கச் சொல்வோம். சுன்னத் பண்ணப்பட்ட பய்யன்களுக்கு புஷ்டி ஏத்த பச்சைப்பால் முட்டை அடிச்சுக் குடிக்கக் கொடுப்பாங்க. உளுந்தங்களி தின்னக் கொடுப்பாங்க. நாட்டுக்கோழி அடிச்சு சாறைக் கொடுப்பாங்க. இப்ப யாரு நாசுவனை வச்சு சுன்னத் பண்றாங்க?”

“சுன்னத்துக்கொன்று மிகப்பெரிய சரித்திரம் இருக்கு. 8000 ஆண்டுகளுக்கு முன்னமே ஆண்கள் சுன்னத் செய்திருக்கிறார்கள் என்பதை பண்டைய குகை ஓவியங்கள் ஆதாரப்படுத்துகின்றன. ஆப்பிரிக்கர்கள், மத்திய கிழக்கு ஆசியர்கள், எகிப்தியர்கள், கோல்சியன்கள், எதியோப்பியன்கள், போனோசியன்கள், சிரியன்கள், யூதர்கள், முஸ்லிம்கள் சுன்னத் செய்து கொள்கின்றனர். தற்சமயம் மற்ற மதத்துக்காரர்களும் மருத்துவக் காரணங்களுக்காக சுன்னத் செய்து கொள்கின்றனர். இஸ்லாமுக்கு புதிதாக மதம் மாறுபவர்களும் சுன்னத் பண்ணுகின்றனர். முன்தோல் குறுக்கத்தை போக்க சுன்னத் பயன்படுகிறது!”

“உண்மைதான்!”

“என்னிடம் நீ ஏதாவது சொல்ல விழைகிறாயா?”

“ஆமாம்!”

“சொல்!”

“சுன்னத் வருமானத்தை நம்பி நான் இல்லை!”

“இப்ப யாரும் நாசுவர்களிடம் சுன்னத் பண்ணுவதில்லை. ஸ்டாப்ளர் இஸட்எஸ்ஆர் முறை, லேசர் முறை, டிஸ்யூ அட்கசிவ் க்ளூ மெத்தடு மற்றும் பிளாஸ்டிபெல் முறைகளில் நவீன சுன்னத் செய்து கொள்கின்றனர். சௌதில கூட குழந்தையை பிரசவம் பார்த்து வெளியே எடுக்கும் போதே தொப்புள்கொடியை கட் செய்து சுன்னத்தும் செய்து விடுகிறார்கள். சுன்னத்தை சுன்னத் கல்யாணமாக யாரும் கொண்டாடுவதில்லை!”

“அடுத்த மாதம் முதல் வாரம் அத்தாவின் பிறந்தநாள் வருகிறது!”

“சரி!”

“அவரின் ஞாபகார்த்தமாக மஹல்லாவில் இருக்கும் பத்து ஏழை சிறுவர்களுக்கு கத்னா செய்துவிட ஆசைப்படுகிறேன்… பணம் எதுவும் வேணாம்…”


முஹம்மது மீரான் யோசித்தார்.

“சுன்னத் கல்யாணம் நடத்த முப்பதாயிரம் நாப்பதாயிரம் ஆகும். பிளாஸ்டிபெல் சுன்னத்துக்கு வெறும் எட்டாயிரம் செலவு. எட்டாயிரம் கூட செலவில்லாமல் ப்ரீயா சுன்னத் பண்ணிறோம்னா ஆள் வரத்தானே செய்யும்!”

“பாய் நீங்க பண்ண வேண்டியதை சொல்றேன்!”

“சொல்லு…”

“பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் சங்க கட்டடத்திலேயே பத்துப் பேருக்கு சுன்னத் பண்ணிருவோம். நீங்க மொதல்ல ஜமாஅத்ல பேசிச் சம்மதம் வாங்குங்க. பள்ளிவாசல் மைக்ல அனவ்ன்ஸ் பண்ணுங்க. சுன்னத் பண்ணப்படப் போற பத்துச் சிறுவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யுங்க. சுன்னத் பண்ணப்படப் போற பசங்களுக்கு நானே புதுத்துணி எடுத்து தருகிறேன். சுன்னத் முடிந்ததும் சிறுவர்கள் கையில் ஆயிரம் ஆயிரம் ரூபாய் திணிப்போம்!”

“நல்ல முயற்சி உங்கத்தா எத்னை சுன்னத் பண்ணிருப்பாரு?”

“குறைந்தபட்சம் இரண்டாயிரம்…”

“கிரேட்!”

“உங்க பேரக் குழந்தைகளுக்கு சுன்னத் பண்ணியாச்சா?”

“பண்ணல பண்ணனும். நீ பேசுறத கேட்டதும் எனக்கு ஒரு யோசனை வருது. உன்னை வச்சே என் பேரன்களுக்கும் சுன்னத் பண்ணனும்…. பத்துப் பேரோட இல்ல… தனியா ஜாம்…ஜாம்னு சுன்னத் கல்யாணமா”

“மகிழ்ச்சி!”

“உன் கைபேசி எண்ணைக் கொடு… முத்தவல்லியிடம் பேசி சம்மதம் வாங்கி தேதியைக் குறிப்போம்!” கைபேசி எண்ணைக் கூறினான்.

- பள்ளிவாசல் சங்கக்கட்டடம். கட்டட வெளிவாசலில் டிஜிட்டல் பேனரில் அத்தெரிமானின் ஒளிப்படம் அனைவரையும் வரவேற்றது.


பத்துச் சிறுவர்களுக்கும் ஊர் சூழ சுன்னத் பண்ணினான் சையது அலி.

துள்ளிய ஆண்குறி நுனிகளை சாம்பலில் போட்டு ஒரு மண் பாண்டத்தில் பதுக்கினான் சையதுஅலி.

சுன்னத் சிறுவர்கள் அவரவர் வீடுகளுக்கு தூக்கிச் செல்லப்பட சையதுஅலி கிளம்பினான். அரசுப் பிரசவ மருத்துவமனையின் பின்புறத்தில் பத்து ஆண்குறித் துண்டுகளை வீசிப் பிரார்த்தித்தான். “யா அல்லாஹ்! பிரசவங்களில் நிறைய ஆண் குழந்தைகள் பிறக்கட்டும், ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் நவீன சுன்னத்முறைப் பக்கம் போகாமல் எங்கள் மரபு சார்ந்த சுன்னத்தே செய்து கொள்ளட்டும். நான் செய்யும் சுன்னத்துகள் அனைத்தும் என் அத்தாவுக்கே சமர்ப்பணம்… ஆமீன்!”

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p72.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License