இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

73. நோன்பு

ஆர்த்தி டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நான்கு மாடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தது. தரைத்தளத்தில் தானியங்கள், குளிர்பானங்கள், பால் பொருட்கள் மற்றும் சாக்லேட்டுகள். முதல் தளத்தில் குழந்தைகளுக்கான நாப்கின்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள். இரண்டாவது தளத்தில் சூட்கேஸ்கள், மற்றும் பேட்டரி கார்கள். மூன்றாவது தளத்தில் பெண்களுக்கான நாப்கின்கள், அழகுப் பொருட்கள் மற்றும் உள்ளாடைகள். நான்காவது தளத்தில் செருப்பு, ஷு மற்றும் பெல்ட்கள் விற்பனை. ஆர்த்தி டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் மொத்தம் 100 ஊழியர்கள். ஒவ்வொரு தளத்துக்கும் இருபது இருபது ஊழியர்கள். தளத்திற்கு ஒரு மேற்பார்வையாளர். இரு லிப்ட் ஆபரேட்டர்கள். பில்லிங் பகுதியில் ஆறு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மேய்க்க ஒரு மேலாளர்.

சாப்பாடு வயர் கூடையுடன் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் நுழைந்தாள் ஸஹ்றா. ஹிஜாப் அணிந்திருந்தாள்.

மணி காலை 8: 55.

பயோமெட்ரிக் இயந்திரத்துக்குள் கார்டை திணித்து எடுத்தாள். கழுத்தில் அடையாள அட்டை மாலையை போட்டுக்கொண்டாள்.

மேலாளர் ராஜ்வி எதிர்பட்டாள்.

“குட் மார்னிங் மேனேஜர்!” என்றாள் ஸஹ்றா.

“குட்மார்னிங் குட்மார்னிங்… ப்ரஷ்ஷா நீட்டா டிசென்ட்டா வரும் உன்னைப் பார்த்தாலே எங்க எல்லோருக்கும் ஒரு புத்துணர்ச்சி… மயிலுக்குத் தோகை போல உனக்கு உன் ஹிஜாப்…”

“ரொம்ப புகழாதிங்க மேனேஜர் அம்மா!”

“உள்ளதைத்தானடி சொன்னேன்…”

“மேனேஜரம்மா நாளையிலிருந்து ரமலானின் முதல் நோன்பு தொடங்குகிறது…”

“சரி அதுக்கென்ன?”

“இந்த வருஷத்து முப்பது நோன்பையும் நான் வைக்கப் போறேன்…”


“சீரியஸாத்தான் சொல்றியா?”

“ஆமாம் ஆமாம்…”

ராஜ்வியின் முகம் கறுத்தது.

“உன்னுடைய வேலை பனிரெண்டு மணி நேர வேலை. காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை. இடையில் உணவு இடைவேளை அரை மணி நேரம். சாயந்தரம் கால் மணி நேரம் டீ டைம். ஒன்பது மணி வேலைக்கு காலைலயே எந்திரிச்சு குளிச்சு உணவுதயாரிச்சு அரைமணி நேரம் பஸ்ஸில் டிராவல் பண்ணனும். வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போக முக்கால் மணி நேரமாகும்!”

“தினமும் இதைத்தான் செய்றேன்!”

“நீ முஸ்லிமாக இரு. ஹிஜாப் அணிஞ்சிக்க. வாடிக்கையாளர்கள் கிட்ட கண்ணியமா நட. இதெல்லாம் உன் இஷ்டம்… ஆனா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்ல வேலை பாத்துக்கிட்டே முப்பது நோன்பு வைக்றது டூ மச். அதுக்கு நீ முதலாளிகிட்ட முன்னனுமதி வாங்கனும்!”

“மதச்சடங்குகளை நிறைவேத்றது என் அந்தரங்கமான விஷயம்… அதுக்கேன் நான் முதலாளிகிட்ட முன்னனுமதி வாங்கனும்?”

“உனக்கு ரெண்டு நாள் லீவு வேணும்னா என்ன பண்ற?”

“லீவ் லெட்டர் எழுதி வந்து முதலாளிகிட்ட ஷைன் வாங்கிறேன்!”

“உனக்கு எதாவது முன்பணம் வேணும்னா என்ன பண்ற?”

“முதலாளிகிட்ட கேட்டு தொகையை சாங்ஷன் பண்ணி வாங்கிறேன்!”

“உனக்கு என்ன வயசாகுது?”

“இருபத்தியேழு!”

“உனக்குக் கல்யாணமாய்ருச்சா?”

“இல்லை!”

“இங்க எத்னி வருஷமா வேலை பாக்ற…”


“ஏழு வருஷமா…”

“கடந்த ஆறு வருஷமா நோன்பு வைச்சியா என்ன!”

“வைச்சேன். அப்ப பெரிய முதலாளி இருந்தார். அவர்கிட்ட கேக்காமதான் நோன்பு வச்சேன். பெரிய முதலாளி இறந்த பிறகு சின்ன முதலாளி இப்ப பவருக்கு வந்திருக்காரு!”

“ஆட்சி மாறினா ரூல்ஸ் மாறும்ல… இப்ப ரூல்ஸ் மாறியிருக்கு… நான் வாரணாசிக்கு பத்து நாள் ஆன்மிக சுற்றுலா போனேன்… கெஞ்சிக் கெதறி காக்கா பிடிச்சு பெர்மிஷன் வாங்கினேன். பத்து நாளுக்கு ஒரு பதிலியை ஏற்பாடு பண்ணிட்டு போனேன்!”

“என்ன வேணுலும் சொல்லுங்க… மேனேஜரம்மா நான் நோன்பு நோற்க முதலாளிகிட்ட பெர்மிஷன் கேக்கப் போறதில்லை!”

“பெர்மிஷன் கேட்காம நீ இன்னைக்கு வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன்!”

“மிரட்றீங்களா?”

“இல்லடி… யதார்த்தத்தை சொன்னேன்…”

“நான் இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்ல வேலைதான் பாக்றேன். முதலாளிக்கு அடிமையாக அல்ல நான்…”

“பிடிவாதம் பிடிக்காதே… இப்ப மணி 9.10. உனக்கு இருபது நிமிடம் அவகாசம் தருகிறேன். அதற்குள் முதலாளியிடம் சென்று அனுமதி பெற்று வா…”

கண்களை மூடிக்கொண்டு முப்பது நொடிகள் யோசித்தாள் ஸஹ்றா.

“சரி போறேன் ஆனால் பெர்மிஷன் கேட்க அல்ல!”

முதலாளியின் அறைக்கதவை மும்முறை நாகரிகமாக டொக்கினாள்.

“யெஸ் கமின்!”

குளிர்பதன மூட்டப்பட்ட அறையின் குளிர் முகத்தில் அறைந்தது.

“குட் மார்னிங் சார்!”

“யார் நீ?”

“நான் நம்ம டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்ல பணிபுரியும் ஊழியை. பெயர் ஸஹ்றா…”

“எந்தத் தளத்தில் பணிபுரிகிறாய்?”

“பெண் வாடிக்கையாளர்களுக்கான மூன்றாவது தளத்தில்…”

“என்ன வேண்டும்?”

“நான் ஒரு இஸ்லாமியப் பெண். நாளையிலிருந்து ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. 30 நாளும் நோன்பு வைத்துக் கொண்டே வேலையை பார்க்கப் போகிறேன். அதனை ஒரு தகவலாய் உங்களிடம் கூறுகிறேன்!”

“எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் பக்தி அறுபது வயதுக்கு மேல் தான் வரவேண்டும். கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி பெத்து பேரன் பேத்திகள் எடுத்த பிறகு நோன்பு வை. இப்போது வைக்காதே!”

“எனக்கு இறைபக்தி பத்து வயதிலிருந்தே வந்துவிட்டது. ஐந்து வேளை தொழுகிறேன். முப்பது நோன்பு நோற்கிறேன்…”

“காலை நாலு மணிக்கு சாப்பிடுவ. மாலை 6: 30 மணிக்கு நோன்பு திறப்ப. இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர் குடிக்கமாட்ட. எச்சி முழுங்க மாட்ட. கொலைபட்டினில நீ வேலை செஞ்சு மயங்கி விழுந்தா உன் குடும்பத்துக்கு யார் பதில் சொல்றது?”

“உலகத்தில 200 கோடி முஸ்லிம்கள் இருக்காங்க. அதில வயோதிகர்கள், சிறு குழந்தைகள், நோயாளிகள் தவிர்த்து குறைந்தபட்சம் 120 கோடி முஸ்லிம்கள் நோன்பு வைக்கிறார்கள். எங்காவது நோன்பு வைத்தவர்கள் மயங்கி விழுந்ததாக செய்தி உண்டா?”

“நோன்பு வச்சா நீ தொழுவ சாயந்தரம் நோன்பு திறப்ப. இதெல்லாம் உன் வேலைக்கு தொந்திரவு இல்லையா?”

“தொழ அஞ்சு அஞ்சு நிமிஷம். வேலை பாத்துகிட்டே இரண்டு பேரீச்சம் பழங்களை தின்னு தண்ணி குடிச்சு நோன்பு திறந்திருவேன்!”

“நான் நீ நோன்பு வைக்க அனுமதி தரலன்னா வேலையை விட்டு போயிருவ. அப்படித்தானே?”

“நோன்பு வைப்பது என் மதம் சார்ந்த பிறப்புரிமை. பிறரிடம் நான் ஒருபோதும் நோன்பு வைக்க அனுமதி கேட்க மாட்டேன். தவிர ஏழு வருஷமாப் பாத்த வேலையை உணர்ச்சி வசப்பட்டு எப்படி விடுவேன்?”

“பின்ன?”

“சகமதத்தினரின் உணர்வுகளை மதியுங்கள் முதலாளி!”


“என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?”

“நாளை மறுநாள் நோன்பு வைத்துவிட்டு வேலைக்கு வருவேன். என் வேலையில் சிறு சுணக்கம் இருந்தாலோ அல்லது நான் மயங்கி விழுந்தாலோ நோன்பு வைப்பதை பரிசீலனை செய்கிறேன். சிசிடிவி மூலம் என் செயல்பாடுகளை கண்காணியுங்கள்!”

“மயங்கி விழும் உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் போலீஸுக்கு யார் பதில் சொல்வது?”

“என்னுடைய முப்பது நோன்புகளின் பின்விளைவுகளுக்கு நானே பொறுப்பு!”

“இவ்வளவு சிரமப்பட்டு நீ முப்பது நோன்பு வைப்பதால் உனக்கு என்ன கிடைத்து விடப்போகிறது?”

நிலாவினாள் ஸஹ்றா.


“அந்த ஆன்மிக பேரானந்தத்தை எப்படி வார்த்தைகளில் விவரிப்பது? உடலும் மனமும் புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்கும். முப்பது நோன்பு முடிந்த பிறகு ‘ஹைய்யோ நோன்பு முடிந்து விட்டதே அடுத்த ரமலானுக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே’ என நெஞ்சம் ஆவலாதிக்கும். முப்பது நாளும் தினம் இரவு விசேஷ தொழுகை - நோன்புகள் நிறைவுற்ற பின் பெருநாள் தொழுகை - ஜக்காத்து சதகாத்து - உறவினர் நண்பர்களுடன் விருந்துண்ணல். அடடா… பரவசம் பரவசம் பிரளய பரவசம்!”

முதலாளி எழுந்து கைத்தட்டினார். “சபாஷ் உன் மனத்திடத்தினைச் சோதிக்கத்தான் எதிர்மறையாகப் பேசினேன். தினம் உனக்கு ஒரு பேரீச்சம் பழம் பாக்கட்டும் ஒரு பழ ரசபாட்டிலும் இலவசமாகத் தரப்படும். தினமும் நீ வீட்டுக்கு இரவு ஏழு மணிக்கே போய்விடலாம். நோன்புத் தொழுகையில் எங்களுக்காகவும் வேண்டு…. வாழ்த்துகள்!”

“நன்றி முதலாளி!” என மிழற்றி விட்டு மான்குட்டி போல தனது பணி இடத்துக்கு ஓடினாள் ஸஹ்றா.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p73.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License