இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

74. திருஷ்டிப் பொட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். நடைமேடை ஏழில் சென்னை சென்ட்ரலிருந்து சந்திரகாச்சி வரை செல்லும் 22808 காத்திருந்தது. குளிர்பதனமூட்டப்பட்ட மூன்றாம் வகுப்புப் பெட்டியில் நானும் அலிமாவும் ஏறினோம்.

நாங்கள் கொல்கத்தாவில் இருக்கும் மகன் குடும்பத்தைப் பார்க்கப் போகிறோம். மகன் நிலாமகன் மருமகள் பஹிமா ஆப்ரின் மூத்த பேரன் முஹம்மது அர்ஹான். இளைய பேரன் அயான் அஹமதை எங்கள் கண்கள் தேடுகின்றன.

இளையபேரன் அயான் அஹமது பிறந்து ஏழு மாதங்கள் ஆகின்றன. அயான் அர்ஹானின் திருத்தியமைக்கப்பட்ட ஜெராக்ஸ் காப்பி. பால் வெண்மை. வட்ட முகம். திராட்சைக்கண்கள். தேன்நிற தலைக்கேசம். தினம் விடியோகாலில் அர்ஹானிடம் பேச முயற்சிப்போம். மூடு இருந்தால் பேசுவான். இல்லாவிட்டால் விளையாட ஓடிவிடுவான்.

அயான் அஹமது முகத்தை சில நொடிகள் காட்டுவாள் மருமகள்.

அயான் பொக்கைவாய் திறந்து சிரிப்பான். மேலே இரு பற்கள் கீழே இரு பற்கள். அணில் குஞ்சு போலிருப்பான். பேரன்களுக்கு ஆடைகள், பொம்மைகள், தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு போகிறோம். 25 மணி நேரப் பயணம்.

மறுநாள் காலை 10: 55 மணிக்கு சந்திரகாச்சி போய்ச் சேர்ந்தோம்.

மகன் இருப்பது 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஜோகோவில். டிடிசி சதர்ன் ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகளின் பிளாக் எண் 21 பிளாட் எண் 1 டிக்கு நாங்கள் போக வேண்டும்.

‘உபர்’ அமர்த்தினோம். கார் விரைந்தது. குடியிருப்பின் பிரதான வாசலின் செக்யூரிட்டி எங்களை நிறுத்தினான். கவிதை பெங்காலியில் வினவினான். “யார் நீங்கள்? யாரைப் பார்க்கனும்?”

சொன்னோம். மருமகளுக்கு போன் பண்ணி நாங்கள் உறவினர்தான் என்பதனை உறுதி செய்து கொண்டு உள்ளுக்குள் அனுமதித்தான்.

பிளாக் 21ன் கீழ் உபர் நின்றது. மகன் ஓடி வந்தான். பயணச்சுமைகளைக் கவர்ந்து கொண்டான். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

வீட்டுக்குள் பிரவேசித்தோம்.

அர்ஹான் ஓடி வந்தான். ‘அத்தலாமலேக்கும்… எப்ப வந்தீங்க?”

தூக்கிக் கொஞ்சினேன்.

கன்னத்தில் கடித்து வைத்தான்.

இறங்கி பாட்டியிடம் ஓடி கட்டிக் கொண்டான்.


மருமகள் அயானை தூக்கி வைத்திருந்தார். சலாம் கூறினர்.

அயானை தூக்கிக் கொஞ்சினேன். பால் வாசனையடித்தான். இரண்டு மாத இடைவெளியில் நன்கு வளர்ந்திருந்தான்.

“குளிச்சிட்டு வாங்கI சாப்பிடலாம் மாமா, மாமி”

குளித்துத் திரும்பினோம்.

நெய்ச்சோறும் மட்டன் கிரேவியும் செய்திருந்தார் சாப்பிட்டோம்.

சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்தோம்.

மாலை அயான் அஹமதுவுக்கு தலைக்கு எண்ணெய் தடவி புது ட்ரஸ் உடுத்தி விட்டு கால்களில் விசில் ஷு மாட்டி விட்டிருந்தார் மருமகள்.

“அலிமா, அயானை தூக்கிட்டு நில்லு. ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்!”

மருமகள் தயங்கினார்.

“போட்டோ எடுங்க… வேணாம்னு சொல்லல, ஆனா போட்டோவை பேஸ்புக்குல போட்டுராதிங்க!”

“ஏன்ம்மா.. நிறைய முஸ்லிம்கள் தங்களோட பிறந்த குழந்தையின் போட்டோவை போடுறாங்க… அதுல என்னமா தப்பு?”

“மத்தவங்களுக்கு எப்படியோ? எனக்கு அது சரிப்படல…”

“என்னம்மா பிரச்சனை?”

நிவாரணமளிப்பானாக...!
அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன். உமக்கு தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும் பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமைகளிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதி பார்க்கிறேன்.
- ஸஹீஹ் முஸ்லிம் 4403

“சில மாதங்களுக்கு முன் அர்ஹானின் போட்டோ போட்டீங்க. தொடர்ந்து ஒரு வாரம் அவனுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு”

“அப்படியா?”

“நானும் நிலாவும் ஜோடியா நிக்ற போட்டோவை நீங்க போட்டாலும் எங்களுக்கு உடம்பு சரியில்லாமப் போகுது”

“எதனாலன்னு நினைக்ற?”

“கண் திருஷ்டி மாமா…”

“டாக்டருக்கு படிச்ச நீங்க ரெண்டு பேருமா கண்திருஷ்டியை நம்புறீங்க?”

“இஸ்லாமிய நீதிக்கதை எழுதும் உங்களுக்கு கண் திருஷ்டி உண்மைதான்னு தெரியாதா? ‘கண் திருஷ்டிப் படுவது உண்மையாகும். ஒரு விதியை அது முந்தக்கூடியதாக இருந்தால் கண் திருஷ்டி முந்தும்’- என்கிறது முஸ்லிம் 2188.

கண்திருஷ்டிக்கு எதிராக ஓதி பார்த்து மந்திரித்து பாதுகாப்பு தேடிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்கிறது புகாரி 5738…”

சிரித்தேன்.

“கண் திருஷ்டி உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன் ஆனால் அதற்காக நம் தினசரி நடவடிக்கைகளை ஒளித்து மறைக்க முடியுமா? கண் திருஷ்டி படும் காரியங்களை செய்வதற்கு முன் அல் பலக் மற்றும் அல் நாஸ் அத்தியாயங்களை ஓதிவிட்டு காரியங்களை தொடர வேண்டியதுதான்”

“கண்திருஷ்டி படும் எனத் தெரிந்தும் ஏன் கண்திருஷ்டிக் காரியங்களை செய்ய வேண்டும்? கண்திருஷ்டிக் காரியங்களைச் செய்து விட்டு குர்ஆனின் இரு அத்தியாயங்களை ஓத வேண்டும்? வரும்முன் காப்பு சிறப்பல்லவா?” என் மனைவி அலிமா குறுக்கிட்டாள்.

“குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதும் விளையாட அனுப்பும் போதும் ‘இறைவாI மக்களை இரட்சிப்பவனேI துன்பத்தை போக்குபவனேI குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு யாருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக’- என துஆ பண்ண வேண்டியதுதான்”

“இன்னொரு துஆ கூட இருக்கிறது. ‘அல்லாஹ்வின் முழுமையான குணமளிக்கும் சொற்களைக் கொண்டு ஒவ்வொரு சைத்தானிடமிருந்தும், நச்சு பிராணிகளிடமிருந்தும், தீயஎண்ணத்துடன் தீண்டும் பொறாமைக் கண்ணிலிருந்தும். அவனிடம் பாதுகாப்பு கோருகிறேன்’ எனவும் வேண்டலாம்”


“மாமா, உங்க முகநூல் பதிவுகளில் பேரன் பேத்திகள் ஒளிப்படங்கள் போடும்போது ‘பார்த்தீர்களா பார்த்தீர்களா என் பேரன் பேத்திகளை எவ்வளவு க்யூட்டா இருக்காங்கன்னு… உங்க பேரன் பேத்திகளை விட, எங்க பேரன் பேத்திகள் செம இல்ல’ன்ற ஒரு சுய தம்பட்டம் தெரிகிறது. கொஞ்சம் நீங்க அடக்கி வாசிக்கலாம்”

“சுயதம்பட்டம் என் நோக்கம் இல்லை. என்னுடைய சந்தோஷத்தை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனி முகநூல் பதிவுகளில் பேரன் பேத்தி போட்டோ போட மாட்டேன்”

சொன்னபடியே அயானை தூக்கிக் கொஞ்சினேன். இடது நெற்றிப் பொட்டில் ஒரு திருஷ்டி பொட்டு. முகவாயில் ஒரு திருஷ்டிப் பொட்டு. இரு உள்ளங்கால்களில் இரு திருஷ்டிப் பொட்டுகள்.

“மருமகளேI இது கொஞ்சம் டூ மச் இல்லையா?”

சிரித்தார் மருமகள்.


“ஹஜ்ரத் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அழகான சிறுவனைப் பார்த்தால், அவனுடைய நாடிப்பகுதியில் கரும்புள்ளியைக் கொண்டு அடையாளமிடுங்கள் கண்திருஷ்டி அணுகாமல் இருக்க’ என்று கூறுவார்கள். ஆதாரம் நூல் மிர்காதுல் மஃபாதீஹ் 7 / 2870”

“ஒண்ணு வைக்கலாம். நீ நாலு வச்சிருக்க…”

“இது தாயின் மிகை அன்பு. புள்ளிமான் போல நூறு கண் திருஷ்டி பொட்டு வைக்கவில்லை என திருப்தி அடையுங்கள் மாமா”

அயான் அஹமது அணில் பற்களைக் காட்டிச் சிரித்தான். ஜொள்ளு ஒழுகியது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p74.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License