இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

75. பொட்டிச் சோறு

ஹஜ்ரத் குத்புல் அக்தாப் அல்தாப் ஹுசைன் ஆண்டவர் தர்கா. தந்தை கருணைராஜாவும் மகன் முசாகுதீனும் உள்ளே பிரவேசித்தனர். இஸ்லாமியர்களும் இந்து மதச் சகோதரர்களும் பின்னிப்பிணைந்த கூட்டம். காற்றில் சந்தனமும் சாம்பிராணி புகையும் கலந்த நறுமணம்.

“அத்தா!”

“என்னப்பா!”

“எனக்கு தர்காவுக்குப் போவது பிடிக்காது. தர்காவுக்குச் செல்வது ஷிர்க் ஆகும்!”

“யார் சொன்னது?”

“என் நண்பர்கள் சொன்னார்கள்!”

“உன் நண்பர்கள் கூறியது தவறு என்பதனை நான் ஆதாரத்துடன் சொல்கிறேன். இன்றைய தினம் இந்தத் தர்காவில் கந்தூரி உரூஸ் கொண்டாடப்படுகிறது!”

“கந்தூரி உரூஸ் என்றால் என்ன?”

“நாகூர் ஆண்டவர் போன்ற வலிமார்களின் நினைவு நாள் அல்லது பிறந்தநாளை ஜமாத்துல் ஆகிரில் கொண்டாடப்படும் மத விழாவே கந்தூரி. இது இறந்த புனிதர்கள், நபிமார்கள் அல்லது வலிமார்களின் ஆன்மாக்களை கௌரவிக்கும் விழா.“ ‘உரூஸ்’ என்றால் புதுமணவாளன் எனப் பொருள். புது மணத் தம்பதிகளை ‘அரூஸ்’ என்பர். இறந்தவரைச் சவ அடக்கம் செய்த பின் முன்கர், நகீர் என இரு வானவர்கள் ஆரம்பக் கட்ட விசாரணை செய்வர். அந்த விசாரணையில் வெற்றி பெற்ற பிரேதங்கள் புது மாப்பிள்ளை போல் உறங்கும். அதனைப் போல அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்கள் நபிகள் நாயகத்தின் முகதரிசனம் கிடைத்து மகிழ்ச்சியின் உச்சியில் இருப்பர்….”

“இறந்தவரின் மண்ணறைகளை வணங்குவது இறைவனுக்கு இணை வைப்பது இல்லையா?”

“ஒரு சிறுவனுக்குச் சைக்கிள் தேவைப்படுகிறது. அத்தாவிடம் நேரடியாகக் கேட்கத் தயக்கம். அம்மாவிடம் சொல்லி அம்மாவின் சிபாரிசில் அத்தா சைக்கிள் வாங்கித் தருகிறார். நம்முடைய வேண்டுதல்களைச் சிபாரிசுடன் கொண்டு போய் சேர்ப்பது வலிமார்கள்!”


“நான் கன்வின்ஸ் ஆகவில்லை அத்தா!”

“வணங்கக் கூடியவன் அல்லாஹ் மட்டுமே. தர்காவுக்குச் செல்பவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்”

“ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து உயிர் நீத்த தியாகிகளின் கபுருகளை ஜியாரத் செய்து வந்திருக்கிறார் நபிகள் நாயகம். இது ஷிர்க்கா?”

“கபுருக்களை ஜியாரத்.செய்யுங்கள். அவை மரணத்தை நினைவூட்டுகின்றன என்றார் நபிகள் நாயகம். இது ஷிர்க்கா?”

“எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தன் பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஜியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என எழுதப்படும். இது ஷிர்க்கா?”

“இந்து மதச் சகோதரர்கள் தர்காவுக்கு வருவதிலிருத்தே தெரியவில்லையா? தர்கா ஷிர்க்கான சமாச்சாரம் என்று…”

“முஸ்லிம் மக்களுடன் பிற மதச் சகோதரர்கள் எப்போதும் முட்டி மோதிக் கொண்டே இருக்க வேண்டுமா? அவர்கள் இணக்கமாக இருந்தால் தவறா? இஸ்லாம் மனிதக் குலத்திற்கு சாந்தியும் சமாதானமும் அருளும் மார்க்கம். பிற மதத்தினர் அந்தச் சாந்தியையும் சமாதானத்தையும் பெற்று செல்வதால் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது?”

“நமது வாதத்தைப் பின்னர் வைத்துக் கொள்வோம். கந்தூரி உரூஸ் அன்று தர்காவில் என்ன நடக்கும்?”

அத்தா முறுவலித்தார். மகனின் தோள்களைத் தட்டிக் கொடுத்தார்.

“கந்தூரி செயல்பாடுகளை ஆறு அம்சங்களாக பிரிக்கலாம். ஒன்று- இரவு அஸர் தொழுகைக்குப் பின் மனிதர்கள் ஒன்று கூடுதல். சலாம் கூறி பரஸ்பரம் நலம் விசாரித்தல். இரண்டு- ஜியாரத். மூன்று- கத்தமுல் குர்ஆன் ஓதுதல். மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அதன் கூலியைச் சேர்த்து வைக்க முடியும். உயிருள்ளவர் செய்யும் தர்மத்தின் கூலி மரணித்தவருக்குச் சேரும். உங்களில் மௌத்தானவர்களுக்கு சூரத்துல் யாஸினை ஒதுங்கள் - என்கிறார் நபிகள் நாயகம்.

“உங்களில் யாரேனும் மரணம் அடைந்து விட்டால் அவரை அடக்குவதில் தாமதம் காட்டாதீர்கள். அவரது தலைமாட்டில் சூரத்துல் பகரா ஆரம்பத்தையும் கால் மாட்டில் பகராவின் கடைசி ஆயத்தையும் ஓதுங்கள். கபர்ஸ்தான்களுக்கு சென்று யாஸீன் சூரா ஓதினால் கபுராளிகளை தொடும் வேதனை இலேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்தக் கபுராளிகளின் எண்ணிக்கை அளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன என்கிறார் நபிகள் நாயகம்!”

“தொடர்ந்து கூறுங்கள் அத்தா!”

“நான்கு -ஸலவாத், திக்ர் மஜ்லிஸ், மௌலித் ஓதுதல்.

“தர்காவிற்கு சென்று நபிகள் நாயகத்தின் புகழ் பாடி ஸலவாத் ஓத வேண்டும். இறைவனின் நாமங்களை திக்ர் எடுக்க வேண்டும். மரணித்த வலிமார்களின் நற்பண்புகளையும், சிறப்புகளையும், போதனைகளையும் மௌலித் மூலம் பாராயணம் செய்ய வேண்டும்!”

“சரி!”

“தர்காவுக்குச் செல்பவர்களுக்கு மனதைரியம், படிப்பினை மற்றும் மறுமை பற்றிய நினைவூட்டல்கள் இருந்து கொண்டே இருக்கும்!”

“புரிகிறது!”

“ஐந்தாவதாக தர்காவில் கொடியேற்றல். ஆறாவதாக மறுநாள் சாப்பாடு செய்து அனைவருக்கும் விநியோகிப்பது. இதுதான் கந்தூரி உரூஸ். ஸலாம் கூறுதல், சிறப்பான தர்மம், நல்ல குடும்ப உறவு, அயலவரின் நல்லுறவு, நல்லவருக்கு உபகாரம், ஏழைகளுக்கு சுவையான உணவு வழங்கல் ஒரு முஸ்லிமின் அடிப்படை…”

-விடிய விடிய கவ்வாலி பாட்டுகள் பாடப்பட்டன.

வரிசையில் நின்று பொட்டிச் சோறுக்கான டோக்கன்களை பெற்றுக் கொண்டனர். முசாகுதீன் ஒரு டோக்கன் பெற்றுக் கொண்டான்.


“பொட்டிச் சோறு என்றால் என்ன அத்தா?”

“நெய்ச் சோறை இரு நபர்கள் சாப்பிடும் அளவில் பனை ஓலைப் பெட்டியில் அடைத்து தால்ச்சாவும் சில சிக்கன் துண்டுகளும் ஊற்றித் தருவார்கள். ஓர் ஆளுக்கு ஒரு பொட்டிச்சோறு. ஆயிரம் டோக்கன்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றால் ஆயிரம் பொட்டிச் சோறு வழங்குவர்!”

“பொட்டிச் சோறு முஸ்லிம்களுக்கு மட்டும்தானா?’

“டோக்கன் கொடுக்கும் போதே மதபாரபட்சம் காட்ட மாட்டார்கள். மிஷ்கீன்கள் கூட டோக்கன் பெற்றிருப்பர்!”

மறுநாள்-

பெரிய பெரிய தேக்ஸாக்களில் நெய்ச்சோறு தயாராகி இருந்தது. தனி தேக்ஸாக்களில் மட்டனும் எலும்புகளும் கலந்த தால்ச்சா கொதித்துக் கொண்டிருந்தது. மட்டன் கிரேவியும் சிக்கன் 65யும் தனியே தயாராக. பனை ஓலைப் பெட்டிகளில் சோற்றை நிறைத்து ஒரு கறித்துண்டு இரு சிக்கன் துண்டுகளுடன் தால்ச்சா ஊற்றி வைத்தனர்.

“கந்தூரி சாப்பாடு டேஸ்ட் உலகத்டில வேற எங்கயும் கிடைக்காது!” என்றார் கருணைராஜா.

“ஏன்? அதில அவுலியாக்களின் வாசனை கலந்திருக்குமோ?” கிண்டலாய்க் கேட்டான் முசாகுதீன்.

வரிசையில் நின்று மக்கள் பொட்டிச்சோறை வாங்க ஆரம்பித்தனர்.

அவர்களிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு பொட்டிச் சோறு வழங்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு.

பொட்டிச்சோறு கொடுக்குமிடம் அல்லோலகல்லோலப்பட்டது. பொட்டிச் சோறு வினியோகிக்கும் நபர் காச்மூச் என்று கத்திக் கொண்டிருந்தார்.

நான்கைந்து பேர் கருப்பு பர்தா அணிந்த பெண்ணை பிடித்திருந்தனர்.

“ஏய் திருடி! உன் மூஞ்சிய காட்டு. காட்டலேன்னா வலுக்கட்டாயமா மூஞ்சித் திரையைக் கிழிப்பேன்!”


அந்தப் பெண் முகத்தை திறந்து காட்டினார். மஹல்லாவை சேர்ந்த ஏழை இஸ்லாமியப்பெண்.

“எல்லோருக்கும் சோறு வேணாமா? டோக்கனை நாலஞ்சு கலர் ஜெராக்ஸா எடுத்து இதுவரைக்கும் அஞ்சு பொட்டிச் சோறு வாங்கிட்ட…”

“மன்னிச்சுக்கங்கய்யா… பொட்டிச்சோறுன்னா எங்களுக்கும் எங்க உறவுகளுக்கும் உசுரு. நாக்கு ருசில நாலஞ்சு தடவை வாங்கிட்டேன்…” அழுதார்.

ஜமாஅத் உறுப்பினர்கள் கூடி அந்தப் பெண்ணை கடித்துக் குதறினர்.

“கட்டிப் போடுங்கப்பா!” அடிக்க ஓடினர்.

“போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி ஜெயில்ல போடுங்கய்யா…” கைகளை முறுக்கினர்.

“வாட்ஸ் அப்ல இந்த பொம்பிளை மூஞ்சியை போட்டு நாறடிங்கய்யா…” கோரமுகம் காட்டினர்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கருணை ராஜா களத்தில் குதித்தார்…

“என்னய்யா சாதாரண விஷயத்துக்கு இவ்வளவு ஓவர் ரியாக்ட் பண்ணுறீங்க. கழுத்துக்கு கீழ் போனா நரகல்ய்யா. தர்மம் அல்லாஹ்வின் கோபத்தை அணைத்து கெட்ட மரணங்களைத் தடுத்து எழுபது வகைப் பாவங்களை போக்கும். தர்மம் விதியில் உள்ள தீயதை மாற்றும். அஞ்சு பொட்டிச் சோறு வாங்கினதுல உங்க சொத்தெல்லாம் திருடு போய்ருச்சா? அஞ்சு குடும்பங்களின் பசியைத்தானே போக்குச்சு, உங்க ஓவராக்சன் அல்லாஹ்வுக்கே பொறுக்காது…. அபராதம் எதுவும் கட்டனுமா? இதோ இப்பவே கட்றேன்!”

கூடியிருந்த முஸ்லிம் மக்கள் அனைவரும் கருணைராஜாவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பினர்.

“பசித்த வயிறுக்கு இறைபக்தி தெரியாது… இந்தாங்க… எங்க டோக்கன்கள்… அந்தம்மா வாங்கின நாலஞ்சு பொட்டிச் சோறுக்கு பர்த்தியா வச்சுங்கங்க….(அந்த ப்பெண்ணிடம்) அவங்க சார்பா நாங்கள் மன்னிப்புக் கேட்குக்கிரம்… நீங்க போங்கம்மா…”

இரு கை கூப்பியபடி அந்தப் பெண் வெளியேறினார். அவுலியா ஜமாத்தாரை விடாமல் சபிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p75.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License