இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

77. ஜின்கள் பள்ளிவாசல்

புனித மெக்கா நகரம். ரஷானா அல் ரவ்தா நான்கு நட்சத்திர விடுதி. விடுதியில் மொத்தம் 670 அறைகள். அறை எண் 602-ல் கவிஞர் அத்தாவுல்லா தங்கி இருந்தார்.

அத்தாவுல்லா வளைகுடா நாட்டில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பின் தனது பிறந்த ஊரான நாகர்கோவிலுக்குத் திரும்பி விட்டார். வயது 62. பேசினால் அவரது நாவில் நாகர்கோவில் தமிழ் நர்த்தனமாடும். கவிஞர் ஏற்கனவே ஹஜ்ஜும் பல உம்ராக்களும் நிறைவேற்றி இருந்தாலும் ஒரு வாசகரின் அன்பு உபசரிப்பில் மீண்டும் உம்ரா வந்திருக்கிறார்.

கைபேசியில் தனக்கு வந்த குறுஞ்செய்திகளுக்குப் பதிலாக குரல் பதிவுகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.

அறைக்கதவு மும்முறை நளினமாக தட்டப்பட்டது.

“அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணன்!” என்றபடி பைரோஸ்கான் உட்பட்டார்.

பைரோஸ் ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கான வழிகாட்டி. வயது 35. மதுரையைச் சேர்ந்தவர்.

“வஅலைக்கும் ஸலாம் தம்பி!”

எதிரில் வந்தமர்ந்தார் பைரோஸ்.

“காலை உணவு சாப்பிட்டீர்களா அண்ணன்?”

“சாப்பிட்டு விட்டேன். நீங்கள்?”

“நானும் சாப்பிட்டு விட்டேன். உங்களை நிழல் போலத் தொடர்ந்து நீங்கள் விரும்பும் இடங்களைப் பார்க்க உதவும்படி உங்கள் வாசகர் ஷாஜஹான் கூறியுள்ளார்!”


“அவரது அன்புக்கு நன்றி… எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்!”

“இன்று நாம் எங்கு போகப் போகிறோம் தெரியுமா?”

“எங்க?”

“மஸ்ஜித் அல் ஜின் எனப்படும் ஜின்கள் பள்ளிவாசலுக்குப் போகப் போகிறோம்!”

“அது எங்கே இருக்கிறது?” உரையாடலை வளர்க்கும் விதமாய் வினவினார் அத்தாவுல்லா

“அல் ஹஜ்ஜுன் மாவட்டத்தில் இருக்கிறது. மஸ்ஜித் அல் ஹரத்திற்கு வடக்கே 900 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. நபிகள் நாயகம் திருக்குர்ஆன் ஓதிய அழகைக் கண்டு ஒரு ஜின்கள் கூட்டம் இஸ்லாமைத் தழுவியதாக இப்பள்ளிக்கு ஒரு வரலாறு உண்டு. இந்த மசூதிக்கு மஸ்ஜித் அல் பயா (உறுதிமொழிகளின் மசூதி) என்றும் மஸ்ஜித் அல் ஹராஸ் (காவலரின் மசூதி) என்றும் பெயர்கள் உண்டு. இந்த மசூதி நபிகள் நாயகத்திற்கு ஜின்கள் கூட்டம் விசுவாசப் பிரமாணம் எனும் பையத் செய்த இடம். ஜின் தலைவர்களை நபிகள் நாயகம் சந்தித்த போது நபி தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடம் மணலில் வரையப்பட்ட ஒரு குறிப்பிட்ட எல்லையை விட்டு விலகாமல் அமர்ந்திருக்குமாறு நபிகள் நாயகம் பணித்தார் என கூறுவர்!”

மஸ்ஜித் அல் ஜின் பற்றி கூடுதல் தகவல்கள் அத்தாவுல்லாவுக்கு தெரிந்தாலும் தகவலை பைரோஸ்கான் வாய் வழி காதுர விரும்பினார்.

“இம்… சொல்லுங்க பைரோஸ்!”

“நபிகள் நாயகமும் ஜின்கூட்டமும் சந்தித்த நிகழ்வே திருக்குர்ஆனின் சூரத்துல் ஜின் அத்தியாயம் 72ன் அடிப்படை!”

தலையாட்டினார் அத்தாவுல்லா.


“இந்த ஜின்கள் பள்ளிவாசலை யார் எப்போது கட்டினார்கள் என்பதற்கு தெளிவான தகவல் இல்லை. கிபி 1700-ல் கட்டப்பட்டு இருக்கலாம். இந்த ஜின்கள் பள்ளிவாசலை அரசர் பகத்தும் அரசர் அப்துல் அஜீஸும் பல தடவைகள் புணரமைத்துள்ளனர்!”

“ஓ!”

“இந்தப் பள்ளியைத் தரிசிப்பது ஹஜ் உம்ரா யாத்ரீகர்களின் கட்டாயச் சடங்குகல்ல. விருப்பத்தேர்வு மட்டுமே!”

“நாம் கட்டாயம் போவோம்!’‘

“ஜின்கள் பள்ளிவாசல் ஜன்னத் அல் மு அல்லா மயானத்திற்கு மிக அருகில் உள்ளது அண்ணன்!”

“இம்!”

“ஜின்கள் பள்ளிவாசல் ஒரு வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அமைப்பு. பள்ளி 500 சதுர மீட்டர் பரப்பளவு அமைந்துள்ளது. கிபி 2000-ல் முழுமையாக இப்பள்ளி புணரமைக்கப்பட்டது. ஒரு பிரதான அரைக்கோள குவிமாடம். குவிமாடத்தில் திருக்குர்ஆன் வசனங்கள். 28 மீட்டர் உயரமுள்ள ஒற்றை மினரா. 350 தொழுகையாளிகள் தொழும் வசதி. பிரதான தொழுகை மண்டபத்தில் கிரானைட் பதிக்கப்பட்ட மிஹ்ராப் மற்றும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் சொற்பொழிவு மேடையை மையமாகக் கொண்ட 270 சதுர மீட்டர் பரப்பளவுள்ள செவ்வக இடம் உள்ளது. பெண்கள் தனியாகத் தொழ வடக்குப்பகுதியில் 130 சதுர மீட்டர் பரப்பளவுள்ள மூடப்பட்ட மண்டபம் உள்ளது. பள்ளியில் மொத்தம் 42 செவ்வக கண்ணாடி ஜன்னல்கள் உள்ளன!”


“உங்கள் வர்ணிப்பு ஜின்கள் பள்ளியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது தம்பி!”

அத்தாவுல்லாவும் பைரோஸ்கானும் அறையைப் பூட்டிவிட்டு விடுதிக்கு வெளியே வந்தனர்.

ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் நடைமேடைகளில் வந்து போய்க் கொண்டிருந்தனர்.

க்ளைடாஸ்கோப் யாத்ரீகர்கள்.

புனித மக்கா நகரம் 210 நாடுகளின் யாத்ரீகர்களும் வந்து ஆன்மிக இளைப்பாறும் வேடத்தாங்கல்.

இஹ்ராம் ஆடையின் வெண்மை புரட்சி காட்சியமைப்பில் பக்தி பரவசம் காட்டியது.

இருவரும் பராக்கு பார்த்தபடியே ஜின்கள் பள்ளிவாசலுக்கு நடந்தனர். பள்ளியை நெருங்கும் போது பைரோஸ்கானுக்குப் போட்டிம் செயலி மூலம் அழைப்பு வந்தது.

“அண்ணன்! பள்ளியைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரண்டு ரக்காத் தொழுங்கள். ஓர் அவசரப்பணி. போய்விட்டு 20 நிமிடங்களில் திரும்பி விடுவேன்!”

“சரி!”

பள்ளிக்குள் போனார் அத்தாவுல்லா. ஒளு செய்தார். இரண்டு ரக்காத் தொழுதார். தொழுது முடித்து விட்டு ஒரு மூலையில் அமர்ந்து திருக்குர்ஆனை மனனமாக இசை நயத்துடன் ஓத ஆரம்பித்தார்.

பத்து நிமிடங்கள் ஓதியிருப்பார்.

யாரோ அவரின் முன் வந்து நின்றனர்.

கண்களை அகலத் திறந்தார் அத்தாவுல்லா. ஏழேகால் அடி உயரத்தில் ஒரு கருப்பின ஆண்.

“அஸ்ஸலாமு அலைக்கும்!”

“வஅலைக்கும் ஸலாம். யார் நீங்கள்?”

“நீங்கள் குர்ஆன் ஓதும் அழகை பார்த்து மயங்கி நின்றுவிட்டேன். என் பெயர் ஜாவியன். நான் ஒரு எகிப்தியன் முஸ்லிம். என்னுடைய பாட்டனாரின் பெயர் முஹம்மது ஹுசைன் ஹைக்கல். 1914-ல் அவர் ‘ஜைனப்’ எனும் நாவலை எழுதினார். அவரை நவீன அரபு நாவல்களின் தந்தை என அழைப்பர். அல் ஸியாஸா நாளிதழை நிறுவியவர். 1940-ல் எகிப்தின் கல்வி அமைச்சராக இருந்தார். அவர் எழுதிய நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிக மிகப் பிரபலமானது!”

திடுக்கிட்டார் அத்தாவுல்லா.

“ஜாவியன்! இறைவன் எப்படிப்பட்ட சந்திப்புகளை நிகழ்த்துகிறான் பாருங்கள். நான் உங்கள் பாட்டனார் எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் ‘புகழப்பட்டவர்’ என்கிற புத்தகமாக எழுதியிருக்கிறேன்! என் பெயர் அத்தாவுல்லா…”

“பெருமகிழ்ச்சி ஒரு சிறு வேண்டுகோள்”

“என்ன?”

“திருக்குர்ஆனை ஓதினீர்கள். காது குளிரக் கேட்டேன். இன்னும் ஒரு அரை மணி நேரம் ஓதுங்களேன்… ப்ளீஸ்!”

மீண்டும் அத்தாவுல்லா ஓத ஆரம்பித்தார்.

காட்சி அமைப்புக்குள் ஒரு ரசவாதம் நிகழ்ந்தது.

அத்தாவுல்லா ஓதும் திருக்குர்ஆனை கேட்க 300-க்கும் மேற்பட்ட கறுப்பின முஸ்லிம் ஆண்கள் கூடினர்.

அனைவரின் முகங்களும் கருப்பு நிற சூரியகாந்தி பூக்கள் போல மலர்ந்தன.


ஓதி முடித்த அத்தாவுல்லா ஜாவியனை பார்த்தார். ஜாவியன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

“ஏன் அழுகிறீர்கள் ஜாவியன்!

” “நான் உங்களிடம் ஒரு பொய் சொல்லிவிட்டேன். நான் எகிப்து நாவல் எழுத்தாளரின் வம்சாவளி அல்ல. பதிலாக நபிகள் நாயகத்தின் குர்ஆன் ஓதும் அழகைக்கண்டு இஸ்லாமில் சேர்ந்த ஜின் கூட்டத்தின் வம்சாவளி நானும் இங்கு கூடியிருக்கும் மற்றவர்களும்!”

“நீங்கள் ஜின்களா?”

“ஆம். நாங்கள் ஜின்கள். நீங்கள் குர்ஆன் ஓதும் அழகைப் பார்க்க எங்கள் மனைவிமார்கள் ஜின்னியாக்களும் வந்துள்ளனர். அவர்கள் பெண்கள் மண்டபத்தில் நிற்கிறார்கள். இதோ என் எளிய பரிசு!” பச்சை நிற மரகதத்தால் ஆன தஸ்பீஹ்மணி மாலையை நீட்டினான் ஜாவியன்.

அனைத்து ஜின்களுடன் ஜாவியன் கரைந்து மறைந்து போனான்.

தஸ்பீஹ்மணி மாலையை தடவிக் கொடுத்து, “எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்றார் அத்தாவுல்லா.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p77.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License