இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

80. போனஸ்

முஹம்மது ஹதீஸ் ரியாஜி மனைவி கொடுத்த மணிச்சுடரை வாங்கிப் படித்தார். ஹதீஸுக்கு வயது 45. 12 வருடங்கள் தொடர்ந்து மார்க்கக் கல்வியை பயின்றவர். ஓர் இஸ்லாமிய இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். மனைவி ஆலிமா பட்டம் பெற்றவர். தனது 30 ஆவது வயதில்தான் ஹதீஸ் திருமணம் செய்து கொண்டார். 14 வயதில் மகன் 10 வயதில் மகள்.

ஜமாத்துல் உலமா சபை கொடுத்த அடையாள வில்லையை ஒரு முறை பார்த்துவிட்டு ஜிப்பா பாக்கட்டில் பத்திரப்படுத்தினார் ஹதீஸ்.

அடுத்து தனது பான் கார்டை எடுத்து முன்னும் பின்னும் பார்த்தார். வருமான வரி கட்டுமளவுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் ஒரு தேவைக்காக பான் கார்டு எடுத்து வைத்திருக்கிறார் ஹதீஸ்.

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் ஒரு உருட்டு உருட்டினார்.

மனைவி கணவரின் உருட்டலைக் கவனித்தாள். “என்ன அட்டைகளோடு விளையாடுறீங்கஜி?’

“இல்ல… பசி பட்டினி கடன் இல்லாத இமாம் என ஏதாவது ஒரு அட்டை இருந்தால் அது எனக்கு கிடைக்குமா செல்லம்?”

“இமாம்களும் வறுமையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒரு சந்தேகம்ஜி!”

“என்ன?”

“வருமான வரி கட்ற இமாம்கள் யாராவது தமிழ்நாட்டில இருக்காங்களா?”

“மாதம் ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் சில இமாம்கள் சென்னையில் உள்ளனர். தமிழ்நாட்டில் 2500 மசூதிகள் இருக்கும். ஐயாயிரம் இமாம்கள் இருப்பர். அதில் அரை சதவீத இமாம்கள் கூடப் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்கள் அல்ல….”

“புலம்பாதிங்கத்தா. அம்மா ஒண்ணு கவனிச்சியா? அத்தா மூஞ்சி இன்னைக்கி ஜீனத்தா இருக்கு?”

“நோன்பாளி முகத்ல அப்படி என்ன ஜீனத்தை கண்டுட்ட மகனே!”

“இன்னைக்கி லைலத்துல் கத்ருக்கு அடுத்த நாள் அத்தாவுக்கு போனஸ் தராங்க!”

“அட ஆமா… மறந்தே போய்ட்டேன்.. நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல?”

“உண்மைதான்… இன்னைக்கி பள்ளிவாசல்ல எனக்குப் போனஸ் தராங்க!”


“போனஸ் எவ்வளவு தருவாங்கத்தா!”

“இரண்டு மாச சம்பளம்!”

“32 ஆயிரம் ரூபாய்!”

“போனஸ் உங்களுக்கு மட்டுமா? பள்ளில யாராருக்குத் தருவாங்க?”

“ஒரு துணை இமாம் ஒரு மோதினாருக்கும் தருவாங்க. சில பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கும் தராங்க!”

“பணமாத் தருவாங்களா, வங்கி கணக்குல போட்டு விட்ருவாங்களா?”

“பணமாத் தருவாங்க!”

“‘பணத்தோடு ஸ்வீட் பாக்ஸ் ஆயத்த ஆடை கிப்ட்பேக் தருவாங்களா?”

“சில பள்ளிகள் தராங்க எங்க பள்ளில கிடையாது!”

இமாமின் மனைவி முகத்தில் இருள் சூழ்ந்தது. “ஜி! அந்தப் பணத்தை அந்தல சிந்தல பண்ணாம நேரா என்கிட்டக் கொண்டு வந்து குடுங்க. மொதச் செலவு 100 கிலோ கர்நாடகாப் பொன்னி சாப்பாட்டு அரிசி மூட்டை ஒண்ணு வாங்கி போடுறதுதான். 7000 ரூபா அரிசி மூட்டைக்குச் செலவாகும் ஒரு மூணு நான்கு மாதம் நல்ல சோத்தை நாம்பளும் நம்ம பிள்ளைகளும் தின்னலாம்!”


“பணத்தை வேறெப்படிம்மா செலவு பண்ணுவ?”

“10 ஆயிரம் ரூபா கடன் இருக்கு. அடைச்சிரலாம். உனக்கு டியூஷன் பீஸ் கட்டுவேன். 5 கிலோ புளி வாங்கி வருஷ உபயோகத்திற்கு வச்சுக்குவேன். நானூறு ரூபாய்க்கு அஞ்சு கிலோ பஞ்சாப் கோதுமை வாங்கி தினம் ராத்திரி சப்பாத்தி சுடுவேன். 1500 ரூபாய்க்கு பத்து கிலோ உளுந்து வாங்கி வருட உபயோகத்திற்கு வச்சுப்பேன். 5 லிட்டர் ரைஸ் பிராண் ஆயில் வாங்குவேன். தலைக்குத் தேய்க்க இரண்டு லிட்டர் தேங்காய் எண்ணெய் வாங்குவேன்!”

“நிறுத்தும்மா உனக்கு என்னம்மா வாங்குவ?”

“20 ரூபாய்க்கு எள்ளுமிட்டாயும் இருபது ரூபாய்க்கு தேன் மிட்டாயும் வாங்கி குழந்தைகளோடுப் பகிர்ந்துப்பேன்!”

குறுக்கிட்டார் இமாம்.

“செல்லம்! கண்ணாடிக்காரன் கனவு போல கனவு கண்டு கண்ணாடிப் பொருட்களை எட்டி உதைத்து நொறுக்காதே. பணம் கைக்கு வந்த பின் உன் செலவுக் கணக்குளை போடு!”

வெறுமையாக சிரித்தாள் மனைவி.

“உண்மைதான்… பத்திரமாப் போய் வாங்க…”

மொபெட்டை ஸ்டார்ட் செய்தார் முஹம்மது ஹதீஸ்.

பள்ளிவாசல். மினராக்களின் மேல் புறாக்கள் பறந்தன.

முத்தவல்லி அறை.

முத்தவல்லியும் இரு மூத்த நிர்வாகிகளும் அமர்ந்திருந்தனர்.

கூப்பிடுவார்கள் கூப்பிடுவார்கள் என ஒரு மணி நேரம் எதிர்பார்த்துப் பொறுமை இழந்த முஅத்தின் முத்தவல்லி அறை வாசலில் நின்று குரல் கொடுத்தார்.

“போனஸ் இன்னைக்கி குடுப்பீங்கதானே?”

“சலவை தொழிலாளி ஆட்டுத்தலைக்கு பறக்கிற மாதிரி பறக்காதிங்க மோதினார். போனஸ் தராம எங்க போய்டுவோம்? இமாம் துணை இமாமோட உள்ள வாங்க!”

மூவரும் உள்ளே போயினர்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.


ஒரு நிர்வாகி தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார். “போனஸ் சட்டம் 1965 இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட லாபம் தரும் தொழிலைச் செய்யும் நிறுவனங்கள் 8. 33சதவீதம் அல்லது சம்பளத்தில் 20 சதவீத்த்தை வருடாந்திர போனஸாகத் தர வலியுறுத்துகிறது. பள்ளிவாசல் என்ன லாபம் ஈட்டும் ஒரு அமைப்பா? இல்லை. இது ஒரு இறை சேவை மையம். இங்கே உங்களுக்கெல்லாம் மாதா மாதம் சம்பளம் தரவே திண்டாடித் திணறிப் போகிறோம். சந்தாத் தொகை வசூல் பண்றதுக்குள்ள எங்களுக்கெல்லாம் நுரை தள்ளிப் போகுது!”

மோதினார் கண்களில் கண்ணீர் ததும்பியது.

“இப்ப என்னதான் சொல்ல வரீங்க பாய்?”

“ஜமாத்துல் உலமா சபை வாய் வலிக்காம உங்களுக்குப் போனஸ் கொடுக்கச் சொல்லுது. முட்டை இடுற கோழிக்கு தானே வலி தெரியும்!”

“நேரடியா பேசுங்க நிர்வாகி!”

“பள்ளி வாசலின் பொருளாதார நிலை மிகவும் மோசமா இருக்கு. உங்களுக்கெல்லாம் நாங்க சுத்தமாக போனஸே தர மாட்டோம்னு சொல்லல. ரெண்டு மாச போனஸுக்கு பதிலா ஒரு மாச போனஸ் வாங்கிக்கங்க!”

“வயித்துல அடிக்காதிங்க பாய். இந்தப் போனஸ் பணம்தான் எங்க வருடாந்திர ஆக்ஸிஜன். வருடம் முழுக்க மூச்சுத் திணறும் நாங்கள் ரமலான் போனஸில்தான் நிம்மதியாகச் சுவாசிக்கிறோம்!”

“என்ன மோதினார்? ஆக்ஸிஜன் கீக்ஸிஜன்னு பேசுறீங்க…”

இமாம் முஹம்மது ஹதீஸ் மோதினாருக்கு முன்னே போய் நின்றார். “எங்கள் சம்பளப் பணத்தையே உங்களிடம் நேரடியாக வாங்காமல் ஜமாத்துல் உலமா சபை மூலம் வாங்க விருப்பப்படுறோம். லாபம் ஈட்டும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களை விட மும்மடங்கு அதிகமாய் பள்ளிக்கு உழைக்கிறோம். போனஸ் பெற நாங்கள் மிக மிகத் தகுதியானவர்கள். நீங்கள் இரண்டு மாத போனஸ் தராவிட்டால் ஜமாத்துல் உலமா சபையிடம் முறைப்படி புகார் செய்வோம்!”

“கலகம் பண்ணுகிறீர்களா இமாம்?”

“எங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெறுகிறோம்... ஏன் ஒரு மாத போனஸ் தருகிறீர்கள்? அதனையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு நாங்கள் வேலையைப் பார்க்கிறோம்!”

முத்தவல்லியும் நிர்வாகிகளும் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர். “நமக்குள் நடந்த வாக்குவாதம் மஹல்லாவில் யாருக்கும் தெரிய வேண்டாம்… கையெழுத்து போட்டுவிட்டு இரண்டு மாத போனஸைப் பெற்றுச் செல்லுங்கள்!”

கையெழுத்திட்டு பணம் பெற்றனர். இமாமைக் குரோதமாய் பார்த்தார் நிர்வாகி.

ஒரு தேன்மிட்டாயை ‘பிஸ்மில்லாஹ்’ கூறி வாய்க்குள் போட்டார் இமாம்.


வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.

காரில் இருந்து மஹல்லாவின் பணக்காரர்களில் நால்வர் வந்திறங்கினர்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“பள்ளி நிர்வாகிகள் உங்களுக்கு இரண்டு மாத போனஸ் தர முரண்டி இருப்பார்களே? மஹல்லாவின் பத்துப் பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து உங்களுக்கு 50000 பணம் தருகிறோம். ரம்ஜானை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்!”

பணத்தை மறித்தார் முஹம்மது ஹதீஸ். ‘எங்களை விடக் கிராமப்புற இமாம்களும் மோதினார்களும் பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உழல்கின்றனர். ஐந்து பள்ளிகளைக் கூறுகிறேன். ஒவ்வொரு பள்ளி இமாமுக்கும் மோதினாருக்கும் அய்யாயிரம் அய்யாயிரம் கொடுப்போம். அவர்களும் ரம்ஜானை மகிழ்ச்சியாகக் கொண்டாடட்டும்!”

“கிளம்புங்கள் இமாம்… நீங்கள் பரிந்துரைத்தபடி ஐந்து பள்ளி இமாம் முஅத்தீன்களுக்கு பணம் கொடுத்து வருவோம்!”

கார் முஹம்மது ஹதீஸுடன் பறந்தது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p80.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License