இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

82. வாடகை வீடு

கோயம்புத்தூர், துடியலூர், சக்தி நகர்.

தரைத்தளத்தின் படுக்கையறை, கணினியின் பட்டன்களுடன் விரல் நடனம் புரிந்து கொண்டிருந்தார் கேசிகன்.

கேசிகனுக்கு வயது 66. காவல்துறையில் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். 175 செ.மீ உயரம். செயற்கைச் சாயம் ஏற்றப்பட்ட தலைமுடி, முறுக்கு மீசை, சிவாஜி கண்கள், முந்திரிப்பழ மூக்கு, நாவல் நிற உதடுகள். கழுத்தில் புலி நகத்துடன் கூடிய மைனர் செயின். இடது கையில் ராடோ வாட்ச். வலது கைவிரல்களில் இரு வைர மோதிரங்கள். மிடுக்கான குரல்.

தனது 37 ஆண்டுக் காவல்துறைப் பணியைச் சுயவரலாறாகக் கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தார். இதுவரை 12 அத்தியாயங்கள் தட்டச்சு செய்து முடித்து விட்டார்.

மனைவி மிளிர் மகிழ் காபி கொண்டு வந்து வைத்தாள்.

“காபியைக் குடிச்சிட்டு நீங்க பண்ற வேலையைப் பாருங்கள்!”

கேசிகன் காபியை எடுத்து உறிஞ்சினார்.

“காபி நல்லா இருக்கே. என்ன காபிதூள் போட்ட?”

“கான்டினென்டல்…”

“ப்ரூவை விட இது நல்லா இருக்கு…”

“மகிழ்ச்சி!”

“என் கூட ஏதோ பேச விரும்புற போல… உன் உடல் மொழியில் தெரியுது!”

“ஆமாம்!”


ஒரு சேரை கணவரருகே இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

“வீட்ல நீங்க ஒரு டிஎஸ்பியா அல்லது என் புருஷரா?”

“நான் உன் டிஎஸ்பி கணவர்!”

“நம்ம ஒரே மகன் மனைவி இரு குழந்தைகளோடு கனடாவிலிருந்து இந்தியாவுக்கு நிரந்தரமா திரும்புறான் இல்லையா?”

“ஆமா டிசம்பர்ல வர்றதா சொல்லிருந்தான்!”

“இன்னைக்கி காலைல உங்களுக்குப் போன் பண்ணிருக்கான். நீங்க தூங்கிட்டு இருந்திருக்கீங்க. எனக்குப் போன் பண்ணினான்!”

“என்ன சொன்னான் இளமாறன்?”

“அவனும் அவனது குடும்பமும் ஜூன் மாதம் இருபதாம் தேதி தாயகம் திரும்புறாங்களாம்…”

“நல்ல விஷயம் தான்!”

“இளமாறன் நம்ம வீட்ல நம்மளோட சேந்திருக்க விரும்பவில்லை. தனிவீட்டில்தான் குடியிருப்பானாம்… உறுதியாச் சொல்லிட்டான்!”

“என்னம்மா சொல்ற… பங்களா மாதிரி வீடு கட்டியிருக்கோம். நாலு பாத்ரூம் அட்டாச்டு படுக்கையறைகள் இருக்கு. மூணுல அவனும் அவன் குடும்பமும் புழங்கலாம். ஒண்ணுல நீயும் நானும் இருந்துக்கலாம்!”

“அவன் அய்டியா வேற. நாம வாடகைக்கு விட்ருக்கிற வீட்டுக்கு மூவ் ஆக விரும்புகிறான்…. அவனுக்கு பிரைவசி வேணுமாம்!”

சிரித்தார் கேசிகன்.

“பெத்த தாய் தகப்பன்கிட்டயிருந்து விலகி நிற்கிறது தான் பிரைவசியா? தவிர, நம்ம வீட்ல குடி இருக்ற ரவூப் ஹக்கீம் பாய்க்கு டிசம்பர் வரைக்கும் வீட்டைக் காலி பண்ண டைம் குடுத்திருக்கிறோம். திடுதிப்னு இன்னும் 13 நாள்ல வீட்டைக் காலி பண்ணுங்கன்னு சொல்றது நியாயமா?”

“அய்யா போலீசு! உன் நியாயத்தை எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள வச்சிக்க… ஒரு முஸ்லிமுக்கு வீட்டை வாடகைக்கு விடுறதே தப்பு… வீட்டை நாறடிச்சிருவாங்க…. கஜமுஜான்னு பிள்ளைகள் பெத்துப்பாங்க… எப்பப் பாத்தாலும் அல்லா அல்லான்னு பக்திக் கூச்சல் போடுவாங்க”


“பொதுப்புத்தில நிலவுகிற பொய்புனைவுகளை அவதூறாச் சொல்லாதே. ரவூப் ஹக்கீம் பாய் நம்ம வீட்டுக்கு குடிவந்து 11 வருஷமாகுது. வாடகையை டாண்னு ஒண்ணாந்தேதியே நம்ம வங்கிக் கணக்குல போட்ருவார். நம்மை விட வீட்டைச் சுத்தமா வச்சிருக்காங்க. இரண்டே மகன்கள். இளையவனுக்கு ஆட்டிஸ பாதிப்பு. அவங்க தெய்வத்தை அவங்க கும்பிடுராங்க நமக்கென்ன அதில் பிரச்சனை?”

“ரவூப் ஹக்கீம் பாய்க்கு பிரசாரகர் வேலை பார்க்காதிங்க. ரவூப் ஹக்கீம் சொக்கத்தங்கம்தான். அவருக்கு நம்ம வீட்டை எழுதி வச்சுருவோமா?”

“டிசம்பர் வரை நம்ம மகன் குடும்பம் நம்ம வீட்லயே இருக்கட்டும். டிசம்பரில் ரவூப் ஹக்கீம் வீட்டை காலி பண்ணியவுடன் நம்ம மகன் குடும்பம் அந்த வீட்டுக்கு மூவ் ஆகிக்கிடட்டும்!”

“ஸாரி…. அது முடியாது!”

“அம்மாவும் மகனும் சேர்ந்து அல்சாட்டியம் பண்றீங்களா? நான் இளமாறனிடம் பேசுகிறேன்!”

“வீடு விஷயமா நான் போலீஸ்காரரிடம் எதுவும் பேச விரும்பவில்லை எனக் கூறிவிட்டான் இளமாறன். அவன் வரும் போது வீடு மராமத்து பார்க்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுசா ரெடி டு ஆக்குபைட் ஸ்டேஜ்ல இருக்கனும்னு சொல்லிட்டான்!”

“அதனால?”

“இன்னைக்கி வியாழக்கிழமை. வருகிற ஞாயிற்றுக்கிழமை காலைல வீட்டை காலி பண்ணிக் கொடுத்திடணும்னு ஸ்ட்ரிக்ட்டா அந்த ரவூப் ஹக்கீம் கிட்ட சொல்லிடுங்க!”

“அப்படி ஞாயிற்றுக்கிழமை ரவூப் பாய் வீட்டை காலி பண்ணலேன்னா?”

“வீட்ல இருக்ற சாமான்களை வெளிய தூக்கியெறிந்து வலுக்கட்டாயமா அவர் குடும்பத்தை வீட்டை விட்டு காலி பண்ண வைப்பேன்!”

“அவ்வளவு பெரிய கொடுங்கோலியா நீ?”

“நான் பரம சாது தான். என் மகனுக்கு ஒண்ணு தேவைன்னா இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் பகைச்சிப்பேன்!”

மனைவியை ஆழமாகப் பார்த்தார் கேசிகன்.

“சைலன்ட் பார்ட்டி படுவயலென்ட் ஆகிட்டியே?”

“பல வருடங்களுக்கு பிறகு என் மகன் குடும்பத்தோட இந்தியால செட்டில் ஆகப்போறான். அவனுக்குப் பிடிச்சதெல்லாம் செஞ்சு அவனைப் பக்கத்திலேயே தங்க வைக்றது தானே ஒரு புத்திசாலி அம்மாவுக்கு அழகு!”

“போன்ல ரவூப் ஹக்கீம் பாயோட பேசுறேன்!”


“போன்ல எல்லாம் கொஞ்ச வேண்டாம்… நேரா இப்பவே அவர் வீட்டுக்குப் போங்க. பழைய கார்களை வாங்கி விக்றதுதானே அவர் வேலை. வீட்லதான் இருப்பார். கரன்ட் ரீடிங் பாருங்க. அவர் அட்வான்ஸ் கொடுத்த கணக்கு எல்லாம் எழுதிட்டு போங்க. வீட்டைக் காலி பண்ணச் சொல்லி, கணக்கு வழக்கை உடனடியாக செட்டில் பண்ணிருங்க!”

“சரி!”

இவர்கள் வாடகைக்கு விட்டிருக்கும் வீடு. இவர்களின் வீட்டிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளி அமைந்துள்ளது.

பைக்கில் விரைந்தார் கேசிகன்.

வாசலின் அழைப்பு மணியை மும்முறை அமுக்கினார்.

கதவு திறந்தது. மருதாணி பூசிய தாடியுடன் வரவேற்றார் ரவூப் ஹக்கீம். “வாங்க வாங்க ஹவுஸ் ஓனர் சார்! நல்லா இருக்கீங்களா?”

“நல்லாயிருக்கேன். நீங்க?”

“அல்லாஹ்வின் அருளால் நானும் என் குடும்பமும் நலம். என்ன விஷயமா வந்திருக்கீங்க? இந்த மாச வாடகையை ஏற்கனவே உங்க கணக்கில போட்டுட்டேனே?”

“என் மகன் குடும்பத்தோட இந்தியாவில் செட்டிலாக வரான். வருகிற ஞாயிற்றுக்கிழமை வீட்டை நீங்க காலி பண்ணிக் கொடுக்கனும்னு என் மனைவி சொல்றா!”

ரவூப் ஹக்கீமின் கண்கள் கலங்கின. “அவசரமா உங்களுக்கு வீடு தேவை. கேக்கறீங்க கொடுப்பவனும் அவனே, எடுப்பவனும் அவனே… சரி, நாளை ஜுஆம்மா தொழுகைக்கு பின் உங்க வீட்டை காலி பண்ணிக் கொடுத்திடுறேன்”

“நீங்கள் எங்கள் வீட்டில் குடியிருந்தவரை எங்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் கொடுத்தீங்க பாய். நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பீங்க பாய். எனக்கு நாலஞ்சு வீடு புரோக்கர்கள் தெரியும். அவர்களிடம் கூறி உங்களுக்கு ஒரு வீடு பார்க்க சொல்லவா?”

“வேண்டாம்… நான் பார்த்துக் கொள்கிறேன் சுக்ரியா” கணக்கு வழக்கு செட்டில் செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை மதியம் 2: 30 மணிக்கு வீட்டை முழுமையாகக் காட்டிச் சாவியை கையளித்தார் ரவூப் ஹக்கீம்.

மூன்று மாதங்களுக்கு பிறகு.

கேசிகன் வாகனமும் ரவூப் ஹக்கீம் பாய் வாகனமும் அன்பாய் முட்டிக்கொண்டன.

“எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இருக்கோம். உக்கடத்ல இருக்கிறோம். மனைவியின் நகைகளை விற்றோம். இருதரப்பு சகோதர சகோதரிகள் பணம் கொடுத்தனர். 30 லட்ச ரூபாய் கொடுத்து ஒரு கட்டின புது வீட்டை விலைக்கு வாங்கிக் குடிபோய்ட்டோம். சொந்த வீட்டுக்குக் குடிபோகும் வாய்ப்பை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி. உங்கள் மகன் குடும்பத்தாரும் உங்கள் துணைவியாருக்கும் எங்களின் அன்பான நல விசாரிப்புகள்… எங்கள் வீட்டுக்கு ஒரு தடவை வந்து சாயா குடிச்சிட்டு போங்க. லொக்கேஷன் அனுப்பறேன்”

“இன்ஷா அல்லாஹ்!” என்றார் கேசிகன்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p82.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License