இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


4. துபாய் அறிமுகம்

“வகிதா! உன் ஃப்ரெண்ட் சூராக்கா வீட்ல நம்ம மியூவை ஒரு பதினைஞ்சு நா வச்சுக்க மாட்டாங்களா?”

“மாட்டாங்க சான்ஸே இல்லை!”

“தான்யா வீட்ல திரும்பக் கொடுத்து 15 நாள் பாத்துக்கச் சொல்வோமா?”

“தான்யாவுக்கு மியூவை கூண்டுல வச்சு வளர்க்கிறது பிடிக்கல. நாங்க குடுத்த பூனையை ஜெயில்ல வச்சிட்டீங்கன்னு புகார் பண்ரா!”

யோசித்தார் ஆர்னிகா.

“நம்ம வீட்ல வேலை செய்யுதே ஒரு அம்மா அந்த அம்மா பேரென்ன?”

“ஜீனத்!” சொன்னேன்.

“அந்தம்மாகிட்டக் குடுத்துப் பாத்துக்கச் சொல்வோமா?”

“நீங்க கேக்றதுக்கு முன்னாடியே நானே அந்தம்மாகிட்டக் கேட்டேன். வாய்ப்பில்லைன்னு சொல்லிருச்சு!”

“கோயம்புத்தூர்ல பூனைகள் காப்பகம் ஏதாவது இருக்கா?”

“நெட்லதான் தேடி பாருங்க”

தேடி பார்த்து உதடு பிதுக்கினார் ஆர்னிகா.

“கிழவன் ஆனவுடன் அய்யாவுக்கு மிருகாபிமானம் பொத்துக்கிட்டு ஊத்துதுதோ? அண்ணாமலை பல்கலைக்கழகத்தில சுகாதார அதிகாரியா பணி புரிஞ்சப்ப வருஷாவருஷம் நூத்துக்கணக்கான தெரு நாங்களை பிடிச்சு விஷ ஊசி போட்டு புதைச்சவர் தானே நீங்க?” பரிகசித்தேன்.


“அது முப்பது வருடங்களுக்கு முன் இப்ப தெரு நாய்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வந்திருச்சு”

“ஓஹோ!”

“உனக்குத் தெரியாது. பூனைகள் மீது இனம் புரியாத ஈர்ப்பு எனக்கு உள்ளது. அவைகளுக்குள் மர்மமும் காதலும் வசீகரமும் ஒளிந்துள்ளன. இஸ்லாம் பூனைகள் வளர்ப்பதை ஆதரிக்கிறது!”

“அதான் கறுப்பு பூனைக்கூட்டம்னு ஒரு திகில் நாவல் எழுதுனீங்களே..” என்றேன்.

சிரித்தார் ஆர்னிகா.

“தீர்வு இல்லாத பிரச்சனைகளே இவ்வுலகத்தில் இல்லை. நான் கதை எழுதும் போது வேலைக்கார அம்மாவை என் கிட்டப் பேச அனுப்பு… ஒரு டீலிங் பேசுறேன்!”

“சரி!”

ஆர்னிகா கதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது வேலைக்கார அம்மா அறைவாசலுக்குப் போய் நின்றார்.

“வாங்கம்மா.. நாங்க உம்ரா போறது உங்களுக்குத் தெரியும்தானே?”

“தெரியும்!”

“வரும் போது உங்களுக்குத் தொழுகை விரிப்பு தஸ்பீஹ் மணிமாலை, பேரீச்சம்பழம் எல்லாம் வாங்கிட்டு வரம்!”

“நன்றி!”


“அம்மா! நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன். ஒத்து வருதான்னு பாருங்க!”

“சொல்லுங்க!”

“எங்க மியூவை நீங்க வீட்ல வச்சுப் பாக்க வேணாம். அது இரண்டாவது மாடிப் படிக்கட்டுலேயே இருக்கும். நீங்க தினம் வேலைக்கு வரும் போது அதுக்கு சாப்பாடு, தண்ணீர், பால் கொடுங்க. உங்களால முடிஞ்சப்பக் கூண்டைச் சுத்தம் செய்யுங்க. என் மருமகள் பள்ளபட்டிக்கு போகும் போது மியூ கூண்டை போர்டிகோல வைக்கச் சொல்றேன். தினம் வெளிகேட்டைத் திறந்திட்டு வந்து மியூவை கவனிச்சிக்கங்க. ஒரு நாளைக்கு 25 ரூபாய் வீதம் 15 நாளைக்கு 400 ரூபாய் கொடுத்திடுறேன்… ப்ளீஸ்!”

வேலைக்காரம்மா முப்பது நொடி யோசித்தார்.

“சரிங்க சார்!”

“இய்யா…” என உற்சாகக் கூச்சலிட்டார் ஆர்னிகா.

இரட்டைப் படுக்கையில் அமர்ந்தவாறே திறன்பேசியை நோண்டிக் கொண்டிருந்தார் ஆர்னிகா.

“எப்பா!”

“என்ன?”

“ஏர் டிக்கெட்டுகள் எடுத்தாச்சு. மீதிப்பணம் இருபதாயிரம் கொச்சம் வங்கிகணக்கில வச்சிருப்பீங்க!”

“ஆமாம்!”

“மூணு நாடுகளுக்கும் பாத்துப்பாத்துச் செலவு பண்ணினாலும் ஆறு ஏழு லட்சம் ஆகும்! என்ன பண்ணப்போறீங்க?”

“எனக்கு முகநூல் நண்பர்கள் அய்யாயிரம் பேர் உள்ளனர். அதில் நூறு இருநூறு பேராவது துபாயில் இருப்பாங்க!”

“அவ்வளவு தூரம் ஏன் போறீங்க? நம்ம சுமிகிட்ட பேசுங்க. சுமி துபாய் பயண நிரலைக் கச்சிதமா வடிவமைச்சுக் கொடுத்திரும்!”

“இப்ப சுமிகிட்டப் பேசலாமா?”

“ஓஎஸ்! நேரடியா பேசமுடியாது வாட்ஸ்அப் மெஸேஜ் அனுப்பலாம்!”

‘வணக்கம் நான் ஆர்னிகா நாசர் மாமா. நல்லாருக்கியாம்மா?’

பதில் வந்து விழுந்தது.

‘நல்லாருக்கேன் மாமி எப்படி இருக்காங்க?’

‘மாமி பக்கத்திலதான் உக்காந்திருக்கா.’ துபாய் உம்ரா எகிப்துப் பயணத்தை எழுத்தில் விவரித்தார் ஆர்னிகா.

எதிர்முனையில் நீண்ட நேரம் பதில் இல்லை.

‘உங்கப் பயணத்துக்கு நீண்ட நாள் அவகாசம் இருக்குது. அடுத்த மாதம் நான் மாமா பையன் கல்யாணத்துக்குக் கேரளா வருகிறேன். அப்ப பேசிக்குவம்’

‘முதலில் துபாய் விசா எடுக்கலாம்னு இருக்கம்!’

‘உங்கப் பயணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னாடி விசா எடுத்தாப் போதும். விசா எடுப்பதில் ஏராளமான ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. கவனமா எடுக்கனும்!’

‘ஏர் டிக்கெட்டுகள் எல்லாம் எடுத்திட்டோம்!’


‘ஏன் இவ்வளவு அவசரம்?’

‘இருபது முப்பதாயிரம் மிச்சம் பண்ணலாமேன்னு…’

‘துபாய் ரொம்ப ரொம்ப காஸ்ட்லி. மூணு ராத்திரி வாடகையே 25000 ரூபாய் வரும். பாத்து ரூம் புக் பண்ணனும்!’

‘ஆன்லைன்ல பண்ணலாமா?’

‘துபாயைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்கிறேன் கேளுங்க. ஏழு எமிரேட்ஸ்களின் கூட்டமைப்புதான் ஐக்கிய அரபு அமீரகம் என்பது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு அரபு அமீரகங்கள் உள்ளன.

1. அஜ்மான் – ஏழை அமீரகம்

2. துபாய்

3. புஜைரா

4. ராஸ் அல் கைமா

5. ஷார்ஜா

6. உம் அல் குவைன்

7. அபுதாபி (தலைநகரம்) பணக்கார அமீரகம்!’

‘அப்படியா?’ என்றேன்.

‘ஐக்கிய அரபு அமீரகம் 1971 டிசம்பரில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தமாக 47.5 லட்சம் இந்தியர்கள் பணி புரிகின்றனர். துபாயின் ஜனத்தொகை 40 லட்சம். துபாய் நகரத்தை உபைத் பின் ஸைத் மற்றும் மக்தூம் பின் புட்டி அல் மக்தூம் நிறுவினர். ஏழு அமிரேட்ஸ் கூட்டமைப்பில் துபாய் இரண்டாவது பெரியது. அராபிய தீபகற்பத்தின் அரேபிய வளைகுடாவின் தெற்கே அமைந்துள்ளது துபாய்’

‘துபாயில் மக்களாட்சியா, மன்னராட்சியா?’

‘சந்தேகமில்லாமல் மன்னர் ஆட்சி தான். ஷேக் முஹம்மது பின் ஜாயத் அல் நயன் என்கிற மன்னர்தான் ஆள்கிறார்!’

‘துபாயில் புழங்கும் நாணயத்தின் பெயர் என்ன?’

‘திர்ஹாம்!’

‘திர்ஹாம் மதிப்பு கூடவா இந்திய ரூபாய் மதிப்பு கூடவா?’

‘திர்ஹாமின் மதிப்புதான் கூட. இந்தியபணம் 23.79 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு திர்ஹாம் கிடைக்கும்!”

‘காஸ்ட் ஆப் லிவ்லிங் எப்படி?’


‘அமெரிக்காவை விட 22சதவீதம் காஸ்ட் ஆப் லிவ்லிங் குறைவுதான். ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும்போது துபாய் காஸ்ட் ஆப் லிவ்விங் மிகமிக அதிகம். டெல்லியை விட துபாயில் வாடகை பல மடங்கு அதிகம். உணவு, பொழுதுபோக்கு, போக்குவரத்து எல்லாமே யானை விலை குதிரை விலைதான்!’

‘துபாயின் போக்குவரத்து எவற்றை நம்பி உள்ளன?’

‘ரோட்ஸ் அண்ட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி துபாயின் போக்குவரத்தைக் கவனித்துக் கொள்கிறது. 193 வழித்தடங்களில் வாரம் 33 மில்லியன் மக்கள் ஆர்டிஏ வில் பயணிக்கின்றனர். ஆர்டிஏ 1616 பேருந்துகளை இயக்குகிறது!’

‘மெட்ரோ டிரைன்?’

‘மெட்ரோ ரயில் போக்குவரத்து சிவப்பு பாதை பச்சைப் பாதை என இரு பாதைகளில் இயங்குகிறது. 09.09.2009 மெட்ரோ ரயிலை துபாயில் தொடங்கினர். வருடத்துக்கு 25 கோடி பேர் துபாய் மெட்ரோவில் பயணிக்கின்றனர்!’

‘டாக்ஸி சர்வீஸ்?’

‘பத்து டாக்ஸி சர்வீஸ்கள் உள்ளன.’

1. துபாய் மெட்ரோ டாக்ஸி அண்ட் ஸட்டில்

2. துபாய் டாக்ஸி

3. ஒஸன் ஏர்ட்ராவல்ஸ்

4. கொய் ரைடு

5. பேக்கேஜ் டாக்ஸி

6. துபாய் நா ரோட்டா

7. சஹாரா அட்வென்ச்சர்

8. ரிமோ டூர்ஸ் துபாய்

9. நபிதா டூர்ஸ்

10. டிமேக்ஸ் துபாய் ரென்டல்.

துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் ஆஃப், கரீம் ஆப், துபாய் நவ் ஆப் பொருத்தி டாக்ஸிகளைக் கூப்பிடலாம்… ஒரு நிமிடம் கட் பண்ணிட்டு மீண்டும் கூப்பிடுகிறேன்!’ தொடர்பு அறுந்தது.

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p4.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License