முனைவர் கி. இராம்கணேஷ்
பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை, மெய்ப்பொருளியல் நிறைஞர் பட்டங்களையும், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர் கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் படிப்பையும் பயின்ற இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். முதுகலை தமிழிலக்கியத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரண்டாமிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளில் ஐந்தாண்டுகள் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் தற்போது, பொள்ளாச்சி, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வாசித்துள்ள இவர் அச்சிதழ்கள், இணைய இதழ்கள் போன்றவற்றில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். இவருக்கு மதுரை, பாரதி யுவகேந்திரா நிறுவனம் சிறந்த மாணவருக்கான ‘சுவாமி விவேகானந்தர்’ விருது வழங்கியுள்ளது.
ஆன்மிகம் - இந்து சமயம்
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.