வெண்தாமரை மற்றும் செந்தாமரை விருதுகள் விழா
உ. தாமரைச்செல்வி

உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில், 11-12-2025 அன்று கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் இணைந்து முத்துக்கமலம் மின்னிதழின் வெண்தாமரை விருது மற்றும் செந்தாமரை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்குக் கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் தலைமை வகித்தார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் , முத்துக்கமலம் மின்னிதழின் துணையாசிரியருமான பொறியாளர் சு. சி. பொன்முடி முன்னிலை வகித்தார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், முத்துக்கமலம் மின்னிதழின் ஆசிரியருமான எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில், முனைவர் சி. சேதுராமன், எழுத்தாளர் ஆர்னிகா நாசர், முனைவர் தி. கல்பனாதேவி, சிதம்பரம் இரவிச்சந்திரன், முனைவர் க. மங்கையர்க்கரசி, முனைவர் பி. வித்யா, நௌசாத்கான் ஆகியோருக்கு வெண்தாமரை விருதுகளும், கோ. சந்திரசேகரன், வழக்கறிஞர் எஸ். இளங்கோவன், முனைவர் தி. நெடுஞ்செழியன், முனைவர் நா. சுலோசனா, முனைவர் மா. பத்மபிரியா, முனவர் ம. தேவகி, முனைவர் அ. காமாட்சி, முனைவர் பெ. முருகன், முனைவர் இரா. முருகானந்தம் ஆகியோருக்கு செந்தாமரை விருதுகளும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர், எழுத்தாளர் தேனி சீருடையான் அவர்கள் விருதுகளை வழங்கி விருதாளர்களைப் பாராட்டினர்.
விழா முடிவில் மதுரை, டோக் பெருமாட்டி கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியரும், முத்துக்கமலம் மின்னிதழின் துணையாசிரியருமான முனைவர் ஜா. ஜூலிபிரதீபா நன்றியுரையாற்றினார்.
விழா நிகழ்வினைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் முனைவர் லெ. அலமேலு தொகுத்து வழங்கினார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.