தியத்தலாவ எச். எப். ரிஸ்னா

இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும், விமர்சகரும், சிறுகதை படைப்பாளியுமான எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா, குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயரிலும் எழுதுவதுண்டு. கல்வி கற்கும் போதே பூங்கா என்ற சிறுவர் சஞ்சிகையில் இவரது ஆக்கம் வெளிவந்தது. அத்துடன் மீலாத் தின போட்டிகள், தமிழ்தினப் போட்டிகளில் பங்குபற்றி பல தடவைகள் முதலிடத்தை பெற்றிருக்கிறார். இவரது முதல் கவிதை 2004ம் ஆண்டு மெட்ரோ நியூஸ் என்ற பத்திரிகையில் “காத்திருப்பு” என்ற தலைப்பில் வெளிவந்தது. அதையடுத்து இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 20க்கும் அதிகமான சிறுகதைகளையும், 10 விமர்சனங்களையும் எழுதியுள்ளார். துன்பம், சந்தோஷம், இனிமை, காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, மலையகப் பிரச்சனைகள் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன. இவரது படைப்புகள் இலங்கையின் முக்கியத் தமிழ் அச்சிதழ்களிலும், இணைய இதழ்களிலும் இடம் பெற்றுள்ளன. Best Queen Foundation எனும் அமைப்பின் உபதலைவராக இருந்து வரும் இவர், பூங்காவனம் எனும் சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் சேவையாற்றி வரும் இவர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார். இவரது “உன் குரல் கேட்கிறது” என்ற கவிதைத் தொகுதியும், “கானல் நீர்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெகு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
கதை - சிறுகதை
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.