கவிஞர் வதிலை பிரபா
தேனி மாவட்டம், அணைக்கரைப்பட்டி எனும் ஊரில் பிறந்து தற்போது வத்தலக்குண்டுவில் வசித்து வரும் கவிஞர் வதிலை பிரபா இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறார். பல்வேறு அச்சிதழ்களில் கவிதைகளை எழுதி வரும் சில கவிதை நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவர் மகாகவி எனும் பெயரிலான சிற்றிதழ் ஒன்றினை நடத்தி வருகிறார். உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் ஓவியா பதிப்பகம் எனும் பெயரிலான புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். இப்பதிப்பகம் கடந்த 2013 ஆம் ஆண்டில் சிறந்த நூல் வெளியிட்டதற்கான தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையின் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழனைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருதினையும் பெற்றிருக்கிறார்.
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.